புது வரவு :
Home » » வியாபாரம் பெருகக் காரணம் தரமான பொருளா? இறைவன் அருளா?

வியாபாரம் பெருகக் காரணம் தரமான பொருளா? இறைவன் அருளா?

     ணக்கம் தோழர்களே.உண்மை இதழில் புதுக்கவிதையில் புரட்சிக்காரரின் வரலாறு எனும் பக்கத்தில் ஈரோட்டுச் சூரியன் என்ற தலைப்பில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. தொடரின் ஐந்தாவது அத்தியாயமான "மண்டிக்கடையில் இராமன்" 01.12.2012 உண்மை இதழில் வெளியாகியிருக்கிறது. இங்கே பகிர்ந்திருக்கிறேன்..

 6.மண்டிக்கடையில் இராமன்



இராமசாமியின் படிப்பு
நிறுத்தப்பட்டது;
கொஞ்சமாய்
நாயக்கரின் மனம்
வருத்தப்பட்டது;

மண்டிக்கடைக்கு
இராமனை
அழைத்து வந்தார்;
மண்டியைப் பார்த்த
இராமன் முதலில்
மலைத்து நின்றார்;
                                                                         
 
















நாயக்கர் 
தொழிலைக் கற்றுத்தர
இராமன்
அழகாய்ப் பெற்றுக்கொண்டான்..

இராமன்
கூலம்தனை விற்க
கூவிக்கூவி
ஏலம்தனைப் போட்டான்..

எந்த வியாபாரியாக
இருந்தாலும் மண்டிக்கு
வந்த வியாபாரியை
பொருட்களை 
வாங்க வைப்பான்; 
தனது பேச்சைக் கேட்க
அவர்களை
ஏங்க வைப்பான்;

இராமனின்
பேச்சைக்கண்டு
நாயக்கர்
பயந்து போனார்;
அப்பேச்சால்
வியாபாரம்
பெருகுவதைக் கண்டு
வியந்து போனார்;

வியாபாரம்
பெருகியது;
நாயக்கர் மனம்
இறைவனிடம்
மருகியது;

வியாபாரம்
பெருகக் காரணம்
இராமனின் பேச்சு;
நாயக்கர் நம்பியதோ
இறைவனின் மூச்சு;



 















வியாபாரம் 
பெருகக் காரணம்
நாயக்கரின்
தரமான பொருள்;
நாயக்கர் நம்பியதோ
எல்லாம்
இறைவன் அருள்;

மனித மூளையையும்
உழைப்பைவிடவும்
இறைவன் பார்வைக்கே
சக்தி அதிகம்
என்று நினைத்தே
நாயக்கர் மனதில் ஏற்பட்ட
பக்தி அதிகம்..

நாயக்கர்
கேட்டதற்கிணங்க
செவி சாய்த்தவன்
இந்த இராமன்
செவி சாய்த்தவன்
அந்த இராமன் என்ற
நாயக்கரின் நம்பிக்கையோடு
சின்னத்தாயம்மையும் 
சேர்ந்தார்;
இருவரையும்
இராமன் கூர்ந்தார்;

அடங்காதவன்
வீட்டிற்குள்
முடங்காதவன்
இந்த இராமன்
என்ற எண்ணம்
நாயக்கரிடம் தளர்ந்தது;
இராமன் மேலான
நம்பிக்கை மனதில்
புலர்ந்தது;

இராமனின் 
வியாபார யுக்தி கண்டு
நாயக்கர் பாராட்டுவார்;
இந்த இராமனுக்கு
திறமையைத் தந்தவன்
அந்த இராமன் என
பக்தியால்
அவனை சீராட்டுவார்;


- மதுமதி

                                 (ஈரோட்டுச் சூரியன் உதிக்கும்) 
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. அறிவியல், பகுத்தறிவு வளர்ந்துவிட்ட இக்காலத்திலேயே எல்லாம் அவன் செயல் என்போர் ராமன் பெரியாரின் தந்தையார் ஜெனறேசனோ.

    ReplyDelete
  2. ஆமாம் தோழரே..அவர்கள் நாயக்கரைப் போன்றவர்கள்தான்.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com