பாலுமகேந்திராவின் உதவியாளர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று மூலம் நாயகனாக தரம் உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.அப்படத்தின் மூலமாக நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்ற விஜய் சேதுபதி அதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் இயக்குனர் சசிகுமாரோடு சேர்ந்து நடித்த சுந்தரபாண்டியன் படமும் வெற்றி பெற்றது.
யாரும் எதிர்பாராத வகையில் நாளைய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் படம் பீட்சா.அதில் பீட்சா விற்கும் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்றதன் மூலம் முன்னணி கதாநாயகராக தற்போது உயர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.பீட்சா வெற்றி, இப்போது வெளியாகியிருக்கும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படமும் தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் படம் தொடங்கிய காலக்கட்டத்தில் இதெல்லாம் ஒரு தலைப்பா என்று ஏளனமாகப் பார்த்தவர்கள் இந்த தலைப்பு பிரமாதம் என்று இப்போது சொல்லும் அளவிற்கு இதன் விளம்பரங்கள் அமைந்தன. சேதுபதியின் பீட்சா பட வெற்றி இந்தப் படக்குழுவினரை இன்னும் உற்சாகப்படுத்த தைரியமாக விளம்பரத்தை விரிவுபடுத்தியிருந்தார்கள்.விஜய் சேதுபதியைத் தவிர படத்தில் பணி புரிந்த அத்தனை கலைஞர்களும் புதியவர்கள் அப்படியிருக்கும்போது பிரபலங்களின் படத்தைப் போல முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்ததற்கு காரணம், இந்தப் படக்குழுவினரின் விளம்பரமும் விஜய் சேதுபதியின் மீது கொண்ட எதிர்பார்ப்பும்தான்.
பொதுவாக ஒரு படம் வெளிவந்து முதல் காட்சி முடிந்தவுடனேயே இணையத்தில் விமர்சனங்கள் வெளிவந்துவிடும்.கடந்த தீபாவளியின் போது வெளியான துப்பாக்கி படத்திற்கு காலை முதலே விமர்சனங்கள் வரத்தொடங்கின.அன்று ஒரு நாளில் 56 பேர் விமர்சனம் எழுதினார்கள்.அந்தளவிற்கு இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும் பிரபல சினிமா விமர்சகர்களான கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கி சேகர் போன்றோர் விமர்சனம் எழுதி விட்டனர்.
கேபிள் சங்கர் விமர்சனத்தின் முடிவில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, நல்ல வியாபாரம் ஆகி வெளியாவதற்கு முன்னாலேயே தயாரிப்பாளருக்கும், வாங்கிய விநியோகஸ்தருக்கும் லாபம் கொடுத்திருக்கும் படம். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் நல்ல அனுபவத்தைக் கொடுத்து வசூலிலும் வெற்றி பெறும் என்பது நிச்சயம். BUT DON'T MISS IT என்று கூறியுள்ளார்.
முதலில் இந்த தைரியமான, கேட்சியான தலைப்பு தேர்ந்து எடுத்தமைக்கு முதலில் படக்குழுவுக்கு ஒரு ஹேட்ஸ் அப்.
என்று ஜாக்கி சேகர் தனது விமர்சனத்தில் படத்தை புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.
சிறு சிறு தவறுகள் இருந்தாலும் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதே படத்தை பார்த்த மற்ற தோழர்களின் கருத்தும் ஆகும். அந்த வகையில் தொடர்ந்து நான்காவது வெற்றிப் படத்தை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பீட்சா வெற்றியால் தற்போது கவனிக்கத்தக்க நாயகனாக உருவெடுத்த விஜய் 'சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட வெற்றியின் மூலம் பிரபல இயக்குனர்களின் பார்வையில் விழ அதிக வாய்ப்பிருக்கிறது. விஜய் சேதுபதிக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை இப்படம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது நிச்சயம்.படம் என்ன வசூலை ஈட்டப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

ரொம்ப நாட்கள் ஆகி விட்டது... மனது விட்டு சிரித்து... நானும் நண்பர்
நித்யகுமாரும் பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தை மாயாஜாலில் பார்த்து விட்டு வயிறு
வலிக்க சிரித்ததுதான் கடைசி. இந்த
படத்தை பார்க்கும் போதுதான் கண்ணில் நீர் வர சிரித்தேன்..
எடிட்டிங்க படித்து விட்டு, யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இரண்டு
படத்துக்கு ஸ்கிரிப்ட் ரைட்ராக இருந்து விட்டு அற்புதமான திரைப்படத்தை எடுத்த
பாலாஜிதரனிதரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்..
சிறு சிறு தவறுகள் இருந்தாலும் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதே படத்தை பார்த்த மற்ற தோழர்களின் கருத்தும் ஆகும். அந்த வகையில் தொடர்ந்து நான்காவது வெற்றிப் படத்தை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பீட்சா வெற்றியால் தற்போது கவனிக்கத்தக்க நாயகனாக உருவெடுத்த விஜய் 'சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட வெற்றியின் மூலம் பிரபல இயக்குனர்களின் பார்வையில் விழ அதிக வாய்ப்பிருக்கிறது. விஜய் சேதுபதிக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை இப்படம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது நிச்சயம்.படம் என்ன வசூலை ஈட்டப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
எனக்கும் படத்தைப்பார்க்க ஆசைதான்.
ReplyDeleteநன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். இந்த மாதிரிக் கதாநாயகர்களுக்கு நல்ல கதபாத்திரம் கிடைக்கவேண்டும். நன்றிமா மது மதி.
யாரு சார் அந்த சேதுபதி, ஒரு படாத்துல எதுக்குல்லோ தலையை விட்டுகிட்டு இருக்காரு, இன்னொரு படத்துல நாலு பேர் இருக்காங்க யாருன்னே தெரியலையே. தனியா ஒரு படம் போட்டிருக்கலாமே!! படம் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டேன். நன்றி.
ReplyDelete