புது வரவு :
Home » , , , , » பவர்ஸ்டாருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் ஷங்கர்-காணொளி இணைப்பு

பவர்ஸ்டாருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் ஷங்கர்-காணொளி இணைப்பு

          மிழ் சினிமாவில் திடீரென்று ஒரு நாயகன் தோன்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு பிரபலமாகி திரையுலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது அவ்வப்போது நடந்துதான் வருகிறது. சமீப காலங்களில் காலியாக இருந்த அந்த இடத்தை நிரப்பி வருபவர் பவர் ஸ்டார் என்பதில் மாற்றில்லை.

               திடீரென்று தமிழ்ப்படத்தில் அறிமுகமாகி பலதரப்பட்ட ரசிகர்களையும் தன் பக்கம் பார்வையை திருப்ப வைத்த நடிகர் பவர்ஸ்டார்.50 வயதைத் தாண்டினாலும் நடித்தால் நாயகனாகத்தான் என்ற அவரது கொள்கை அனைவரையும் கவர்ந்தது.ஆரம்பத்தில் யூடியூப்,பேஸ்புக்,கூகுள் பிளஸ் போன்ற சமூகத் தளங்கள் இவரை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று   உலகம் முழுக்க இவரை பிரபலப்படுத்தியிருக்கிறது.

      ஒரு தரமான படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தால் சத்தியமாய் இந்தளவுக்கு பவர்ஸ்டார் புகழ் பெற்றிருக்கமாட்டார் என்று  உறூதியாகச் சொல்லலாம்.டாக்டர் சீனிவாசன் என்ற இவரது பெயர் காணாமல் போய் பவர்ஸ்டார் என்ற பெயரால் அறியப்படுகிறார் என்றால் அவரது புகழ் எவ்வாறு பரவியிருக்கிறது பாருங்கள்..சமீபத்தில் இவர் பணமோசடி என்ற பெயரில் கைது ஆன போது இவரது ரசிகர்கள் கொந்தளித்ததை அறிவோம்..தமிழ் திரைப்படத்துறையில் இவரது வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கிறது. இவரை மீடியாக்கள் எந்தளவு கிண்டல் செய்து தன் வருமானத்தைப் பெருக்கிக்க்கொண்டதோ அந்தளவுக்கு பவர்ஸ்டாரும் தனது புகழைப் பெருக்கிக்கொண்டார்.

                     யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவின் முக்கிய இயக்குனரான ஷங்கர் தான் இயக்கும் 'ஐ' என்ற படத்தில் பவர்ஸ்டாரை நடிக்கவைக்கிறார். அதுமட்டுமில்லாமல் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக பவர்ஸ்டார் நடிக்கிறார்.இவருடன் சந்தானம் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

                 
      இந்தப்படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடந்தது.சாதாரண நிகழ்ச்சியாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பவர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களின் கைதட்டல், விசில் சத்தத்தால் களைகட்டியது. பவர் ஸ்டாரின் பேரை யார் உச்சரித்தாலும் திரையரங்கில் ஒரே விசில் சத்தமும், கைதட்டலுமாக இருந்தது. அந்தளவுக்கு கூட்டம் அலைமோதியது.

                               இவ்விழாவில் பவர் ஸ்டார் பேசும்போது,அனைவருக்கும் இந்த லட்டு ஒரு திகட்டாத லட்டாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம்.திரையுலகில் நான் மீண்டும் முத்திரை குத்த வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.

        தயாரிப்பாளர் ராமநாராயணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி நடிக்க வாய்ப்பளித்த அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
           அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நான் சற்று யோசித்தேன், இது கனவா? நனவா? என்று. அழைப்பு வந்ததின் பேரில் நான் அங்கு சென்றபோது எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
     நான் அவரிடம் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், “அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்“ என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

       அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள். அதற்குமேல் எனக்கு உயிரினும் மேலான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

     இவ்வாறு அவர் பேசினார்.

அவர் பேசும், ஒவ்வொரு நொடியும் தியேட்டரில் அவரது ரசிகர்களின் விசில் சத்தமும், கைதட்டலும் கேட்டுக் கொண்டே இருந்தது.
            ஆரம்பத்தில் ரசிகர்களும் மீடியாக்களும் தன்னை கிண்டல் செய்த போது கோபப்படாமல் சிரிப்பை மட்டும் வெளிப்படுத்தியதன் பின்னணி இப்போதுதான் தெரிகிறது..
             பவர்ஸ்டார் தமிழ் சினிமாவில் இன்னும் புகழ் பெற வாழ்த்துவோம்..

காணொளி
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

3 comments:

  1. இப்பதான் பவர்ஸ்டாரோட பவர் உங்களுக்கு தெரிஞ்சதா கவிஞரே. அவரபத்தி இம்புட்டு லேட்டா பதிவு போடுறீங்க....:-)))

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com