புது வரவு :

கவியரசு முடியரசன்

கவியரசு முடியரசன் 

இயற்பெயர்: துரைராசு
பிறப்பு: அக்டோபர் 7, 1920  
மறைவு: டிசம்பர் 3, 1998 
ஊர்: பெரியகுளம்
பெற்றோர்: சுப்பராயலு-சீதாலக்ஷ்மி 
சமூகப் பங்களிப்பு: கவிஞர்

சிறப்புப் பெயர்கள்: திராவிடநாட்டின் வானம்பாடி,கவியரசு


வாழ்க்கைக் குறிப்பு: 
 
தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.

எழுதிய சில நூல்கள்:

    பூங்கொடி 
    காவியப்பாவை
    வீரகாவியம் என்னும் காப்பியங்கள்.
    முடியரசன் கவிதைகள் என்ற கவிதை நூல்

இவரது கவிதைகளைச் சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

    பூங்கொடி என்ற காவியம் 1966-இல் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது.

    பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.அறிஞர் அண்ணா 'திராவிடநாட்டின் வானம்பாடி' என்ற பட்டத்தை 1957 இல் வழங்கினார்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com