பெயர் - உடுமலை நாராயணகவி இயற்பெயர் - நாராயணசாமி சிறப்புப் பெயர் - கவிராயர் பிறந்த இடம் - உடுமலைப் பேட்டை பிற்ந்த வருடம் - 25.9.1899 மறைந்த வருடம் - 23.5.1981 விடுதலைப்
போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும்
முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில்
நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.பகுத்தறிவு கவிராயர் என்ற பட்டப்பெயர்
பெற்றவர்.
இவருடைய
பாடல்கள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும்
கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர்.
நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம்
காட்டிக் கொண்டவர்.
ஏறத்தாழ
பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம்
கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத
உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென
ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர். கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின்
குருவாக விளங்கியவர். அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி
போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா
உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர். மேலும் ரத்தக்கண்ணீர்,
தெய்வப்பிறவி போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.புகழ்பெற்ற
கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப்
பின்னர் வந்தவர்கள்.
இவர் எழுதிய பிரபலமான சில பாடல்களும் படங்களும் பாடல்: கா...கா...கா... படம்:பராசக்தி பாடல்:அந்தக்காலம் படம்:நல்லதம்பி, பாடல்:நல்ல, நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும் படம்:விவசாயி பாடல்: குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதே படம்:இரத்தக்கண்ணீர்
1956ஆம் ஆண்டு வெளியான "மதுரை வீரன்" படத்தில் உழைப்பவர்களுக்கெனப் பாடிய
"சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்"
போன்ற பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்திய
அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய
அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப்
போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின்
மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான
புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
அருமையான கவிஞர்! மதி! நன்றி
ReplyDeleteஇன்னும் நிறைய சிறப்புகள் இருக்கிறதே...
ReplyDelete