அடங்கிப்போனது!
கம்பீரமொன்று
கரைகடந்தது!
தைரியமொன்று
தரை தாண்டியது!
தன்னம்பிக்கையொன்று
தன்னுயிர் ஈந்தது!
உதாரணமொன்று
உறங்கிப்போனது!
முன் மாதிரியொன்று
முடங்கிப்போனது!
ஓர் புள்ளியில் தொடங்கிய
பெரும் பயணமொன்று
ஆரம்பித்த புள்ளியிலேயே
முடிந்துபோனது!
நடிகையென்ற
அரிதாரத்தை அழித்துவிட்டு
அரசியல்வாதியாக அவதரித்து
ஆறுமுறை அரியணையேறி
ஆட்சி புரிந்தவர்-இப்போது
உயிரற்ற உடலாக காட்சி தருகிறார்!
அம்மாவென அழைத்தவர்களெல்லாம்
அய்யோவென அழுகிறார்கள்
நன்றிக்கடனாக கண்ணீரையல்லவா
செலுத்துகிறார்கள்!
கடற்கரைச்சாலை
கண்ணீர்ச்சாலையாக
காட்சியளிக்கிறது!
ஆணாதிக்க அரசியலை
துவைத்துப் போட்ட இந்நதி
இப்போது கடலிலே கலந்துவிட்டது!
அரசியல் ஆசானின்
இதயத்தில் இடம் பிடித்த
இந்த இதய தெய்வம்
இப்போது கூட
அவரின் இருப்பிடத்திலேயே
தனக்கான இடத்தையும் பிடித்துக்கொண்டது!
இனியாவது
நிம்மதியாக உறங்குங்கள்!
கடற்கரை காற்று
கவரி வீசட்டும்!
-மதுமதி
ஆழ்ந்த இரங்கல்கள்....
ReplyDelete