புது வரவு :
Home » , » என்ன செய்தாய் என்னை..

என்ன செய்தாய் என்னை..

அதிகாலையில்
அலாரம் கூட
உன் பெயரைச் சொல்லியே
எனை எழுப்பி விடுகிறது..
----------------------------------
அலைபேசியில் வந்த
உனது அழைப்புதான்
இன்றைய சந்தோசத்திற்கு
அடிக்கல் நாட்டுகிறது..
------------------------------------
இருசக்கர வாகனத்தை
நீ வாங்கும்போது கொண்ட
சந்தோசத்தை -அதில்
என்னை ஏற்றிக்கொண்டு
செல்லும்போது கொண்ட சந்தோசம்
அடித்து வீழ்த்திவிட்டது.
-----------------------------------
உன்னோடு
பயணிக்கும்போது
இறங்கும் இடமென்று
எதுவும் இருக்கக்கூடாது
என்றே ஆசைப்படுகிறேன்.
----------------------------------
உன்னைவிட்டு பிரிகிறேன்
என்று நினைக்காதே
என்னை உன்னிடம்
இறக்கி வைத்துவிட்டுதான்
வீடு வந்து சேர்ந்தேன்..
------------------------------
காலைமுதல்
உன்னோடு நானிருந்த
பொழுதுகளையெல்லாம்
வழக்கம்போல்
மாலை வந்து
பிடிங்கிக் கொள்கிறது..
அதை மீண்டும்
அதனிடமிருந்து
பிடுங்க முயற்சித்தே
என் இரவுகள்
விடியலிடம்
தோல்வியைத் தழுவ
ஆரம்பித்துவிடுகிறது..
--------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

20 comments:

  1. உன்னை விட்டுப் பிரிகிறேன் என்று நினைக்காதே. என்னை உன்னிடம் இறக்கிவைத்து விட்டுத்தான் வந்தேன். -க்ளாஸிக்கான வரிகள். ஒவ்வொரு முறை வரும்போதும் அசத்தறீங்க. கவிஞரே... நீங்க இன்னும் பல சிகரங்களை எட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கவிதை அருமையாகவுள்ளது கவிஞரே..


    படம் இன்னும் கவிதைக்கு அழகூட்டுவதாக உள்ளது.

    ReplyDelete
  3. வரிகள் சொட்ட சொட்ட நனைக்கிறது.

    ReplyDelete
  4. காதல் கவிதைகள் மிளிர்கிறது...
    படமும் அருமை...

    ReplyDelete
  5. காலைமுதல்
    உன்னோடு நானிருந்த
    பொழுதுகளையெல்லாம்
    வழக்கம்போல்
    மாலை வந்து
    பிடிங்கிக் கொள்கிறது..
    அதை மீண்டும்
    அதனிடமிருந்து
    பிடுங்க முயற்சித்தே
    என் இரவுகள்
    விடியலிடம்
    தோல்வியைத் தழுவ
    ஆரம்பித்துவிடுகிறது..//

    காதலின் மெல்லிய உணர்வுகள் கவிதையாக..

    அசத்தல்..

    ReplyDelete
  6. /கனேஷ் அவர்கள்/
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    ReplyDelete
  7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    /முனைவர்/கோவி/கவிதை வீதி/கருன்/

    ReplyDelete
  8. //உன்னோடு
    பயணிக்கும்போது
    இறங்கும் இடமென்று
    எதுவும் இருக்கக்கூடாது//

    என்ன தலைவரே இப்புடி ஆரம்பிச்சுட்டீங்க...? அழகு...அருமை..

    ReplyDelete
  9. ///இறங்கும் இடமென்று
    எதுவும் இருக்கக்கூடாது
    என்றே ஆசைப்படுகிறேன்..////

    இதை நப்பாசை என்று தெரிந்தும் மறுக்க முடியாத ஆசையல்லவா அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

    ReplyDelete
  10. முரண்பட்ட கவிதை அருமை

    ReplyDelete
  11. //உன்னைவிட்டு பிரிகிறேன்
    என்று நினைக்காதே
    என்னை உன்னிடம்
    இறக்கி வைத்துவிட்டுதான்
    வீடு வந்து சேர்ந்தேன்..//

    அபாரம்.. அழகு வரிகள்.

    ReplyDelete
  12. காதல் இது காதல்.உணர்வோடு உடனிருக்கும் காதல்.படங்கள் பொருத்தமாக இருக்கு !

    ReplyDelete
  13. இணைந்திருக்கும் இருமனம்
    பிரியாதிருக்க எத்தனிக்கும்
    அழகுக் கவிதைகள்..

    ReplyDelete
  14. ''....உன்னோடு
    பயணிக்கும்போது
    இறங்கும் இடமென்று
    எதுவும் இருக்கக்கூடாது
    என்றே ஆசைப்படுகிறேன்..,,''
    ஆகா காதல் சொட்டுகிறது.. அருமை...இசை போடலாம் .திசைகள் விரியட்டம். சிகரம் எட்டட்டும். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    /மயிலன்/ம்.தி.சுதா/ராஜி/அமைதிசாரல்/ஹேமா/மகேந்திரன்/கோவைகவி/

    ReplyDelete
  16. //என்ன செய்தாய் என்னை..//
    உங்க கவிதை என்னையும் ஏதோ செய்கிறது.

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    /லட்சுமி அம்மா/அம்பலத்தார்/

    ReplyDelete
  18. உன்னைவிட்டு பிரிகிறேன்
    என்று நினைக்காதே
    என்னை உன்னிடம்
    இறக்கி வைத்துவிட்டுதான்
    வீடு வந்து சேர்ந்தேன்..

    மிகவும் அருமையான வரிகள் .

    காதலின் வெளிப்பாடு .

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com