புது வரவு :
Home » , » ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..



சாலையில்
நடந்து போய்க்கொண்டிருக்கிறேன்..
மண்டையைப் பிளக்கும் வெயிலுக்கு 
ஒதுங்க ஒரு மரமில்லை..
இப்போது ஞாபகம் வருகிறது..
பள்ளிப் பருவத்தில்
என் தாத்தாவோடு சேர்ந்து
நான் வெட்டி எறிந்த மரங்களும்
அவை கொடுத்த நிழல்களும்..

கிழவன் என்ற 
பட்டப் பெயரோடு
எனது அழைப்பிற்கு செவிமடிக்காத
பேரன்களைப் பார்க்கும்போது
எனக்கும் என் தாத்தாவுக்குமான
உரையாடல்கள் ஞாபகம் வருகின்றன..

வெற்றிலை புகையிலைக்கு
பேரன்களை எதிபார்க்கும்போதுதான்
பதினெட்டில் நான் புகைத்த
சிகரெட்டுகளும் சுவைத்த பீடாக்களும்
ஞாபகத்தில் வந்து நிற்கின்றன.. 

பேரன்களும் மகன்களும்
இந்த கிழவனை மதிப்பதில்லை..

என் அப்பாவையும் தாத்தாவையும்
நான் மதித்திருந்தால்
இப்போதைய கவலைக்கு
அர்த்தமிருக்கும்..

வாடகை வீட்டில்
மகன்கள் வசிக்கும்போது
எனக்கு வெட்கமாய்த்தான் இருக்கிறது..
கள்ளு குடிக்க காட்டை விற்றதை
எண்ணி இப்போது வருத்தப்பட்டு
என்ன பிரயோசனம்...

துணைக்கு ஆளில்லாமல்
அலைமோதும்போதுதான்
மனைவியின் மகிமை தெரிகிறது..
அவள் உயிரோடு இருக்கும்போது
இன்னொருத்தியுடன்
இல்லறம் நடத்தியவன் தான் நான்..

என்னை ஒதுக்குப் புறமான
அறையில் கிடத்திவிட்டார்கள் என்று
நான் வருத்தப்படுவதில்லை..
என் அப்பாவை
மாட்டுக்கொட்டகையில் தான் 
போட்டிருந்தேன்..

அப்பா கூப்பிடுறாங்க' என்று
சொல்லும் மனைவியிடம்
அவருக்கு என்ன வேலை என்று
மகன் சொல்வதைக் கேட்டு
மனம் வருந்தும்போதுதான் 
என் தந்தைப் பட்ட
வேதனை எனக்குப்பட்டது..

சாகும் தருவாயில்
வாழ்க்கையை சொல்லிக்கொடுத்த
மகனுக்கும் பேரன்களுக்கும் 
நன்றி...

                     *****
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

17 comments:

  1. இளமைத் திமிரில் பெற்றவர்களின் உணர்வுகள் தெரிவதில்லை. நம்மிடம் படிப்பதுதானே நம் தலைமுறைகளும் செய்யும்? சத்தியமான விஷயம். பல பேருடைய வாழ்க்கை அனுபவமாகவும் இருந்திருக்கும். அருமையான வார்த்தைகளால் பகிர்ந்துள்ளீர்கள் கவிஞரே... நன்றி!

    ReplyDelete
  2. அருமை.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    /கணேஷ்/நண்டு@நொரண்டு/

    ReplyDelete
  4. சிந்தனையை தூண்டும் கவிதை...சிலர் உணர்ந்தால் சரி....

    ReplyDelete
  5. உண்மையான உண்மையை உரக்க சொல்லும் கவிதை.

    ReplyDelete
  6. இன்றைய வாழ்வின் முகத்திரை கிழித்த கவிதை.

    ReplyDelete
  7. நீ எவ்வழியோ அவ்வழியே உன் பிள்ளை உரக்க சொல்லும் கவிதை

    தோழர் மதுமதிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. வணக்கம் நண்பரே..

    வாலிப முறுக்கில் செய்த தவறுகளுக்கு முதுமையில் திரும்பிப்பார்க்கும் தாத்தாவின் பார்வை கவிதை அருமை..

    ஒவ்வொருவரும் வாழ்வில் உணர வேண்டிய உண்மைகள்

    ReplyDelete
  9. பாலைவன பயணம் சென்று வந்த உணர்வு..அருமை நண்பரே..

    ReplyDelete
  10. நண்பர்கள் கொஞ்சம் இதையும் படிக்க வாங்க..குறும்(பு)படம்

    ReplyDelete
  11. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்

    ReplyDelete
  12. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

    ReplyDelete
  13. விதைப்பதைத்தானே அறுவடை செய்யலாம்.இதையும் நம் முன்னோர்கள்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.கவிதையும் சொல்கிறது மதுமதி !

    ReplyDelete
  14. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி../வீடு/மனசாட்சி/சம்பத்/மயிலன்/சூர்யஜீவா/சி.பி.செந்திகுமார்/ஹேமா/

    ReplyDelete
  15. முதுமை உணர்வுகளின் தொகுப்பு..
    நாம் செய்த தவறுகளை பின்னாளில்
    நமக்கு பிறந்தவன் செய்கையில் மனதில் முள் தைக்கிறது...
    அருமை..

    ReplyDelete
  16. நன்றி/மகேந்திரன்/

    ReplyDelete
  17. கதிரேஷ்December 12, 2011 at 8:50 PM

    நேற்றைய மகனின் வலி...
    நாளைய தந்தைகளுக்கான‌ வழி...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com