புது வரவு :
Home » , » மழையும் முத்தமும்

மழையும் முத்தமும்


மேகங்கள்
தாகத்தை தணித்துக் கொண்டிருக்க
தேகங்களும்
தாகத்தை தணித்துக் கொள்ள
முயன்று கொண்டிருக்கின்றன..

மழை
தொடர்ந்து
பெய்து கொண்டிருக்கிறது..
எந்த மழை 
முதலில் ஓயுமென
மழையில் நனைந்த மரமது 
கிளைகளிடம் இலைகளிடமும்
விவாதித்துக் கொண்டிருக்கிறது..

குடையும் உடையும்
தத்தம் பணிசெய்து
தோற்றுப் போகிறது..

உதடும் உடலும்
முத்தம் தனை பெய்து
வெற்றி பெறுகிறது..

மண்ணிற்கு 
மழை தரும் முத்தத்திற்கும்
பெண்ணிற்கு
அவன் தரும் முத்தத்திற்கும்
போட்டியென்னவோ 
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது...
---------------------------------------------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

24 comments:

  1. என்ன கவிஞரே... தொடர்ந்து ரொமான்டிக் கவிதைகள் மழையெனப் பொழிகின்றன... நல்ல ‘மூட்’ போலருக்கு... மழை, முத்தம் இரண்டுமே எனக்கு மிகப் பிடித்தவை. அதுபோலத்தான் உங்கள் கவிதையும். மிக ரசித்தேன்.

    ReplyDelete
  2. போட்டிகள் இல்லை என்றால் சுவார்சம் இருக்காதல்லவா அருமை
    உடையும் குடையும் என்னையும் நனைத்துப்போனது

    ReplyDelete
  3. கணேஷ் கூறியது...
    என்ன கவிஞரே... தொடர்ந்து ரொமான்டிக் கவிதைகள் மழையெனப் பொழிகின்றன... நல்ல ‘மூட்’ போலருக்கு... மழை, முத்தம் இரண்டுமே எனக்கு மிகப் பிடித்தவை. அதுபோலத்தான் உங்கள் கவிதையும். மிக ரசித்தேன்.

    ஐய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..நாளை க்ரைம் கதையின் 2 வது அத்தியாயம்..சரி இன்று ஒரு அகக்கவிதை இருக்கட்டுமே என்று போட்டேன்..வேறொன்றுமில்லை..

    ReplyDelete
  4. sasikala கூறியது...
    போட்டிகள் இல்லை என்றால் சுவார்சம் இருக்காதல்லவா அருமை
    உடையும் குடையும் என்னையும் நனைத்துப்போனது..

    ஆம் சகோ..போட்டிகள் தான் சுவாரசியத்தைக் கொடுக்கும்..உங்களையும் நனைத்ததா மகிழ்ச்சி..நன்றி..

    ReplyDelete
  5. அருமையான கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மது மதி @ செம போட்டிதான் போங்க..! கவிதை வரிகளூனூடே காதல் வழிகிறது.

    ReplyDelete
  7. படத்துகேற்ற கவிதை சபாஷ்

    ReplyDelete
  8. படமும் படத்திற்கான விளக்கக் கவியாக அமைந்த பதிவும்
    மிக மிக அருமை
    முத்த மழையும் மழை முத்தமும் தொடர்ந்து போட்டியிடட்டும்
    நாடும் வாழ்வும் செழிக்கட்டும்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்
    த.ம 6

    ReplyDelete
  9. மழையை விட பெண்ணிற்கே வெற்றி வாய்ப்பு
    அதிகம்.

    ReplyDelete
  10. மண் மழையின் முத்தத்தில் குளிர்ந்து போகிறது!
    பெண் ஆணின் முத்தத்தில் மேலும் சூடாகிறாள்!

    அருமை மதுமதி.

    ReplyDelete
  11. Sabsh! Sariyaana Potti. Mega Mazhaikkum Moga Mazhaikkum. Arumai.

    TM 8.

    ReplyDelete
  12. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
    நல்லாயிருக்குங்க..

    நன்றிங்க..

    ReplyDelete
  13. dhanasekaran .S கூறியது...
    அருமையான கவிதை வாழ்த்துகள்.

    நன்றி தோழர்..

    ReplyDelete
  14. dheva கூறியது...
    மது மதி @ செம போட்டிதான் போங்க..! கவிதை வரிகளூனூடே காதல் வழிகிறது.

    அப்படியா தோழர் மகிழ்ச்சி..

    ReplyDelete
  15. மனசாட்சி கூறியது...
    படத்துகேற்ற கவிதை சபாஷ்..

    நன்றி..

    ReplyDelete
  16. Ramani கூறியது...
    படமும் படத்திற்கான விளக்கக் கவியாக அமைந்த பதிவும்
    மிக மிக அருமை
    முத்த மழையும் மழை முத்தமும் தொடர்ந்து போட்டியிடட்டும்
    நாடும் வாழ்வும் செழிக்கட்டும்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்
    த.ம 6...

    மனம் கவர்ந்ததா மகிழ்ச்சி ஐயா..நன்றி..

    ReplyDelete
  17. சேகர் கூறியது...
    மழையை விட பெண்ணிற்கே வெற்றி வாய்ப்பு
    அதிகம்.

    அப்படியா பெண்ணிற்குதான் வாய்ப்பு அதிகமா..ரசிப்பிற்கு நன்றி..

    ReplyDelete
  18. சென்னை பித்தன் கூறியது...
    மண் மழையின் முத்தத்தில் குளிர்ந்து போகிறது!
    பெண் ஆணின் முத்தத்தில் மேலும் சூடாகிறாள்!

    அருமை மதுமதி.

    ஆமாம் ஐயா உண்மைதான்..நன்றி ஐயா..

    ReplyDelete
  19. துரைடேனியல் கூறியது...
    Sabsh! Sariyaana Potti. Mega Mazhaikkum Moga Mazhaikkum. Arumai.

    ஆம் தோழர்..சரியான போட்டிதான்..நன்றி..

    ReplyDelete
  20. வாழ்வை ஈரமாய் சுவாரஸ்யமாய் வழிநடத்தும் மழையும் முத்தமும் மழையாய்.ரசனையின் உச்சம் மதுமதி !

    ReplyDelete
  21. அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
    வலைச்சரத்தில் கவிதை சரம்

    ReplyDelete
  22. //குடையும் உடையும்
    தத்தம் பணிசெய்து
    தோற்றுப் போகிறது..//

    சுவரஸ்யமான தோல்விகள்..!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com