புது வரவு :
Home » , , , , » உயிரைத் தின்று பசியாறு - அத்தியாயம் - 6

உயிரைத் தின்று பசியாறு - அத்தியாயம் - 6

                                      உயிரைத் தின்று பசியாறு 
                                                   (க்ரைம்..க்ரைம்..க்ரைம்)

                       ஐந்தாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும்.

                               அத்தியாயம் - 6
         
"ப்ளீஸ் மதன்.. சுத்தி வளைச்சு பேசாதீங்க..எதுவா இருந்தாலும் நேராவே சொல்லலாம்"
 "----------------------------------------------------"
            மதன் சொல்ல ஸ்ருதியின் முகம் லேசாய் சிவக்க ஆரம்பித்தது..
"யெஸ் ஸ்ருதி ஐ லவ் யூ"
            எதிரில் இருந்த மதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.அதை மதன் பொருட்படுத்திக் கொள்ளாமல் மீண்டும் "ஐ லவ் யூ" என்றான்.
            ஸ்ருதி இந்த முறை மதனை பாராமல் அந்த இடத்தை விட்டு நகர முற்பட இடைமறித்த மதன்,
"ஸ்ருதி" என்றான்..
             நின்றவள் என்ன என்பதை தனது பார்வையிலேயே கேட்டாள்.மதன் பேசவில்லை.அவளைப் பார்க்க தயக்கப்பட்டன அவனது கண்கள். அவளிடம் தொடர்ந்து பேச வார்த்தைகள்த் தேடினான்..
"ம்..சொல்லுங்க"
            என்றவளை ஏறிட்டான்.
"அதான் சொன்னேனே" 
            தொய்வான சத்தத்தோடு உதடுகள் மெதுவாய் திறந்தன.
"இன்னும் இருக்கா? அவ்வளவுதானா"


            கேட்ட ஸ்ருதியின் குரலில் கோபத்தை உணர்ந்தான் மதன்,எதுவும் பேசவில்லை.ஸ்ருதி இடுப்பில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு இரண்டு நொடிகள் அவனையே பார்த்தாள்.
"உன்னை நான் லவ் பண்றேன்னு சொல்றதுக்குத்தான் என்ன லீவு போட சொல்லி இங்க வரச்சொன்னீங்களா மதன்..நாம் எத்தனை மாசம் பழகியிருப்போம்ன்னு உங்களால சொல்லமுடியுமா மதன்..?"
"................................................................................................"
"என்ன மூணு மாசம் பழகியிருப்போமா..ஏன் பேச மாட்டேங்குறீங்க சொல்லுங்க"
         மதன் பேசவில்லை.மெதுவாக தலையை மட்டும் அசைத்தான்.சில விநாடிகள் அமைதி காத்த ஸ்ருதி,மெதுவான குரலில் கோபத்தை தாழ்த்தியபடி சொன்னாள். 
"காதல்ங்கிறது மனசுக்குள்ள ஏற்படற உணர்வு மதன்.என்னைப் பத்தி நீங்க நல்லா தெரிஞ்சிருக்கனும் உங்களைப் பத்தி நான் நல்லா தெரிஞ்சிருக்கனும் .
அது மட்டுமில்ல ஒருத்தரை ஒருத்தர் மனதார புரிஞ்சிருக்கனும் மதன்"
"................................................................................................"
"இத்தனை நாள் பழகியிருக்கோம்.என்னை முழுசா புரிஞ்சிக்கிட்டீங்களா? எனக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு தெரியுமா? எனக்கு என்ன ட்ரெஸ் பிடிக்கும்ன்னு தெரியுமா..இதைக்கூட நீங்க தெரிஞ்சு வச்சிருக்கலாம்.. என்னோட மனச உங்களால எப்படி தெரிஞ்சிருக்க முடியும்..முப்பது வருசம் பழகினாக் கூட ஒரு பொண்ணோட மனச தெரிஞ்சிக்க முடியாது மதன்.மூணு மாசத்துல எப்படி...என்னோட கேரக்டர் என்னான்னு உங்களுக்கெப்படி தெரியும்? சரி என்னை விடுங்க..உங்களைப் பத்திதான் எனக்கென்ன தெரியும்? மூணுமாசம் நம்ம பழக்கம் அதுவும் தற்செயலா பழகினோம் அவ்வளவுதான்..அதை நீங்க எப்படி காதல்ன்னு எடுத்துக்கலாம் சொல்லுங்க..
பார்த்தாம் பேசினோம் உடனே காதலிக்கிறேன்னா எப்படி மதன்"
             சொல்லி முடித்து அவன் பதிலுக்காய் காத்திருந்த ஸ்ருதியை ஆற்றாமையுடன் பார்த்தான் மதன்.
"என்ன மதன் பேச்சையே காணோம்?"
"ஸ்ருதி..நீங்க சொல்றத என்னால புரிஞ்சிக்க முடியுது..ஆனா வாழ்க்கையில நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா ரொம்ப சந்தோசமா இருப்போம்ன்னு மட்டும் தோணுது..வேற எதுவும் தோணலை ஐ லவ் யூ ஸ்ருதி"
"சும்மா சும்மா அதையே சொல்லிட்டிருக்காதீங்க மதன்..ப்ளீஸ் நான் கிளம்பறேன்"
          என்று சொல்லிவிட்டு ஸ்ருதி நகர,
"ஸ்..ருதி"
          என்றழைத்தவனை கோபமாய்த் திரும்பிப்பார்த்தவள்,
"என்ன மதன் இப்ப என்னை  என்ன பண்ண சொல்றீங்க..இப்ப உங்களை லவ் பண்றேன்னு சொல்லணுமா"
"------------------------------------------------------"
          பதில் பேசாத மதன் அவளையே பார்த்தான்.
"மறுபடியும் கேட்கிறேன்.என்னைப் பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா"
"------------------------------------------------------"
"நான் ஒண்ணு சொன்னா அதிர்ச்சி ஆயிடமாட்டீங்களே"
          ஸ்ருதி சொல்ல அவளை கேள்வியாய்ப் பார்த்தான் மதன்.
"என்ன மதன் பதிலையே காணோம்"
"சொல்லுங்..க ஸ்ருதி"
           ஸ்ருதி சொல்ல உண்மையாகவே மதன் அதிர்ந்தான்.
==========================================================================
                                                                                (அதிர்ச்சிகள் தொடரும்)

ஏழாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும்..
  -------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த அத்தியாயத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

7 comments:

  1. இன்று என்ன ஆச்சு அண்ணாவுக்கு தொடர்ந்து பதிவுகளாய் வந்து கொண்டே இருக்கு. எல்லாம் சேர்த்தா வெளியிடுகிறீங்க. எங்கடா முடிக்க மாட்டீங்க என்னு நீனச்சன் ஓகே உயிரை தின்று பசியாறு தொடர்கின்றது. என்ன வாசிச்சு கொண்டு வந்தன் முடிவில் அதிர்ச்சிகள் தொடரும் என்று விட்டீர்கள். சூப்பர் அண்ணா

    ReplyDelete
  2. சொல்லி முடித்து அவன் பதிலுக்காய் காத்திருந்த ஸ்ருதியை ஆற்றாமையுடன் பார்த்தான் மதன்.

    விறுவிறுப்பான கதை1

    ReplyDelete
  3. காக்க வைத்தாலும், சஸ்பென்ஸ் குறையவில்லை. ஸ்ருதி சொன்னது என்ன என்பதை யூகிக்க முடியவில்லை. அதை அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. எஸ்தர்..

    ஆமாம் தங்கையே..நீண்ட நாள் இடைவெளி அல்லவா..

    ReplyDelete
  5. ஸ்ருதி என்ன சொல்லியிருப்பாள் என்று இன்னும் யூகித்துக் கொண்டேதான் இருககிறேன்... தொடரட்டும் விறுவிறுப்பு!

    ReplyDelete
  6. //ஸ்ருதி சொல்ல உண்மையாகவே மதன் அதிர்ந்தான். //
    முக்கியமான இந்த இடத்தில் ...... (அதிர்ச்சிகள் தொடரும்) ;)

    ReplyDelete
  7. பாஸ், கேப் அதிகமாயிருச்சே...

    விடாது தொடருங்கள் கிரைமை

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com