தனுஷை பாலிவுட் ஏற்றுக் கொள்ளுமா-கொக்கரக்கோ - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , » தனுஷை பாலிவுட் ஏற்றுக் கொள்ளுமா-கொக்கரக்கோ

தனுஷை பாலிவுட் ஏற்றுக் கொள்ளுமா-கொக்கரக்கோ

                      கொக்கரக்கோ

 "ஏனுங்க மாமா இன்னைக்கு பேப்பர பாத்தீங்களா?''
          என்று கேட்டுக் கொண்டே சின்ராசுவிடம் வந்தாள் அம்மணி..
"இன்னும் இல்ல அம்மணி..இப்பத்தானே மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்தேன்..உனக்கு தெரியாதா?
"இல்லீங்க மாமா..மார்கெட்டுல கீது பேப்பர படிச்சீங்களோன்னு கேட்டேன்"
"இல்ல அம்மணி காய்கறிகள போட்டுட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டேன்.. ஏதாவது முக்கிய சேதியா புள்ள"

"முக்கியமான சேதியெல்லாம் ஒன்னுமில்லீங் மாமா..மெட்ராஸ்ல் நகை வாங்குற மாதிரி ஒருத்தன் நகைக்கடைக்குள்ள பூந்து அந்த சேட்டை கொண்ணுபோட்டு நகைய கொள்ளை அடிச்சுட்டு போனானே"
"ஆமா..கடையில மாட்டி வச்சிருந்த கேமராவுல கொலகாரனோட மூஞ்சி பதிவாயிருக்குன்னு கூட போலீஸ் சொன்னாங்களே"
''ஆமா மாமா..அதேதான்..அந்த கொலகாரன் அந்த சேட்டுக்கிட்ட நகை எவ்வளவுன்னு விசாரிச்சதும் அந்த சேட்டு நகை எடுத்து அவங்கிட்ட காட்டுறதும் அந்த கேமராவுல 12 நிமிசம் படமாட்டம் பதிவாயிருக்காம் ..அந்த கேமாராவுல பதிவான கொலகாரனோட போட்டோவ இன்னைக்கு பேப்பர்ல போட்டிருக்காங்க..அந்த போட்டோவ எல்லா போலீசு டேஷன்லயும் கொடுத்துட்டாங்களாம்"

கொலையாளி வீடியோ பதிவில்

"அப்ப இன்னும் ரெண்டொரு நாள்ல அவனை புடிச்சுப் போடுவாங்கன்னு சொல்லு"
"கட்டாயம் புடுச்சுப் போடுவாங்க மாமோவ்"
"அப்புறம் வேறென்ன புள்ள சேதி"
"ஒடிசா மாநிலத்துல ஒரு எம்.எல்.ஏ வ மாவோயிஸ்டுக கடத்திட்டு போனாங்களே"
"அது ஒடிசா இல்ல புள்ள ஒரிஸா"
"என்னங்க மாமா இன்னும் நீங்க அந்த காலத்தில்யே இருக்கீங்க..ஒரிஸாங்கிற பேரை மாத்தி ஒடிசா ன்னு வெச்சு எத்தனை நாளாச்சு"
"அட அப்படியா அம்மணி..எனக்கிது தெரியாமப் போச்சே..நாட்டு நடப்ப துல்லியமா தெரிஞ்சு வச்சிருக்கியே"
"என்ன மாமா இப்படி சொல்லிபோட்டீங்க..நம்மள மாதிரி கிராமத்து ஆளுங்க நாலு விசயம் தெரிஞ்சுக்கிட்டாத்தானே நாடு முன்னேறும்"
"ஆமா அம்மணி அதுவும் சரிதான்..சரி அந்த எம்.எல்.ஏ நெலமை என்னாச்சு?..நேத்து அஞ்சு மணி வரைக்கும் கெடு குடுத்திருந்தாங்களே"
"ஆமா மாமா..அவுங்களோட கூட்டத்த சேந்தவங்க 29 பேரு ஜெயில்ல இருக்காங்க இல்லையா"
"ஆமா"

"அவுங்க எல்லாத்தையும் விடுதலை செஞ்சா..நாங்க எம்.எல்.ஏ ஹிஹாகாவை விடுதலை செய்றோம் அதுக்கு இத்தனை நாள்ன்னு கெடு வச்சிருந்தாங்க இல்லையா"
"என்ன அம்மணி எம்.எல்.ஏ  வோட பேரெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கே"
          என்ற சின்ராசு அம்மணியைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க,செல்லமாய் கோபித்த அம்மணி,
"இங்கபாருங்க மாமா கிண்டல் பண்ணினீங்கன்னா நான் ஒண்ணத்தையும் சொல்லமாட்டேன் பேப்பர எடுத்து நீங்களே படிச்சிக்குங்க"
"என்ன அம்மணி இதுக்கு போய் கோவுச்சிக்கிற..சொல்லு சொல்லு"
"அந்த் கெடு நேத்து 5 மணியோட முடிஞ்சு போச்சு..அதனால் அரசுமேல எங்களுக்கு நம்பிக்கையில்ல..எம்.எல்.ஏ முடிவ நாங்க மக்கள் கோர்ட்டு மூலமா தீர்மானிக்கப் போறோம்ன்னு பேசி ரெக்கார்டு பண்ணி கேசட் அனுப்பியிருக்காங்க" அதைக் கேட்ட கவர்மென்டு, அப்பிடீன்னா அதுல பாதி பேரோட வழக்க வாபஸ் வாங்கிட்டு அவுங்கள மட்டும் விடுதலை பண்றோம் அதனால எம்.எல்.ஏ வ விடுவிக்கனும்ன்னு  முதலமைச்சர்  வேண்டுகோள் விடுத்திருக்காராம்"
"நாளைக்கு நாளான்னிக்குள்ள முடிவு தெரிஞ்சிடும்"
"ஆமா மாமா..ஒடிசாவ பத்தி பேசும்போது இன்னொரு விசயம் ஞாபகம் வருது..
கண்டம் விட்டு கண்டம் பாயுற அக்னி ஏவுகனை சோதனைய தள்ளி வச்சாங்கில்ல"
"ஏன் அம்மணி என்னாச்சாம்"
"வானத்துல ஏவுகனைய செலுத்த எல்லாம் ரெடியாம்..ஆனால் வானிலை செரியில்லையாம் ..மின்னல் வெட்டிகிட்டே இருந்ததாம்.அதனால் இன்னைக்கு காலைல எட்டு மணிக்கு ஏவுகனைய செலுத்தினாங்க..சோதனை வெற்றிகரமாமுடிஞ்சிது"

                             அக்னி ஏவுகனை விண்ணில் பாய்ந்த காணொளி

"அப்படியா ரொம்ப சந்தோசம்..ஏன் அம்மணி இந்தியாவோட எல்லா ஏவுகன சோதனையும் ஒடிசாவுலதான் நடக்குமா என்ன"
"ஆமா மாமா எல்லா சோதனையும் அங்கதான் நடக்கும்"
"ஏன்..ஏதாவது காரணமா அம்மணி"
"பின்ன இல்லையா..மாமா ஏவுகனைய சோதன பண்ணும்போது என்னவேன்னா நடக்கலாம் இல்லையா ஒரு வேளை ஏவுகனை வேலை செய்யாம கீழே  நிலத்து மேல விழுந்துடக் கூடாதில்லையா.. அதனால ஒடிசாவுல இருக்கிற "வீலர் தீவு" ங்கிற இடத்துல இருந்துதான் ஏவுகனைய ஏவுவாங்க ஒருவேளை ஏவுகனை சரியா வேலை செய்யலைன்னா நிலத்துல விழாம கடல்ல விழுந்திடும் அதான்" 
         விபரம் சொன்ன அம்ம்ணியை ஆச்சர்யமாக பார்த்தான் சின்ராசு..
"ஏன் மாமா எனக்கொரு சந்தேகம் ரஜினிகாந்த இன்று படப்பிடிப்புக்கு கேரளா போனார்ன்னு போட்டோவோட செய்தி போடுறாங்களே என்ன கொடுமை மாமா..என்னமோ மத்திய மந்திரி தண்ணி பிரச்சனைய தீக்க கேரளா போறார்ங்கிற மாதிரி செய்தி போடுறாங்க..அவுரு சம்பளம் வாங்குனாரு சூட்டிங் போறாரு..இதை பொது மக்கள் தெரிஞ்சு என்ன பண்ணப் போறாங்க"
"அவரை விடு புள்ள அவரோட மருமகன் தனுஷ் ஹிந்தி படத்துல நடிக்கிறாராமே"
"ஆமா மாமா அப்படிதான் செய்தி படிச்சேன்..இந்த கொல வெறி பாட்டு ஹிட்டாச்சில்ல அதை வச்சிக்கிட்டு ஹிந்தி படம் நடிக்க போயிருக்காரு"
"ஏன் அம்மணி..பொதுவா வட நாட்டு சினிமா ரசிகருங்க நம்மூரு நடிகர்களை ரசிக்க மாட்டாங்க..ரஜினி கமலே திரும்பி வந்துட்டாங்க தனுஷை ஏத்துக்குவாங்கன்னு நெனைக்கிறியா"
"நீங்க சொல்றது சரிதான் மாமா ஷாரூக்கான்,சல்மான் கான்,ரித்திக் ரோஷன்னு பாத்து பழக்கப்பட்டவங்களுக்கு தனுஷ் புதுசாத்தான் தெரிவாரு..தனுஷ் அவுங்கள மாதிரி அழகா இல்லைன்னாலும் அவுங்களவிட நல்லா நடிக்கிற நடிகரு மாமா.அதுக்கு ஆதாரமாத்தான் தேசிய விருது வாங்கினாரு"
"அது சரி அம்மணி தமிழ் படத்துல ஓங்கி அடிச்சா ஒன்பது பேர் பறக்கற மாதிரி  நடிப்பாரே அதே மாதிரி அங்கயும் நடிச்சார்ன்னா அந்த ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க..காதல் கதையில தான் நடிக்கனும்.அப்படி நடிச்சாலும் காதல் நாயகனா பெண் ரசிகைகள் ஏத்துக்கனும்.அதுக்கு பதிலா அவர் தமிழ்ல் வந்த புதுசுல நடிச்சாரே ''காதல் கொண்டேன்"  மாதிரியான கதைகளா தேர்ந்தெடுத்து நடிக்கனும்."
"ஆமா மாமா தனுஷே சொல்வாரே என்னை பாத்தவுடனே பிடிக்காது பாக்க பாக்கதான் பிடிக்கும்ன்னு"
"அது சரி நல்லா நடிச்சு முதல்ல ரசிகர்கள படத்தை பாக்க வைக்கட்டும்.. புடிக்குதா புடிக்கலையான்னு அப்புறம் பாத்துக்கலாம்"
"ஆமா அம்மணி.தனுஷ் இங்க காட்டுற ஹீரோயிசம் எல்லாம் அங்க எடுபடாது.
இங்க அவர் பிரபலமா இருக்கலாம் அங்க அவர் புதுமுகம்தான்.இயக்குனர் சொல்றத கேட்டு நடிச்சாருன்னா படமும் ஜெயிக்கும் இன்னும் ரெண்டு படம் சேந்தாப்புல நடிக்கலாம்.இல்லைன்னா மறுபடியும் இங்க வந்து சொந்தப்படம்தான் எடுக்கனும்"
"ஆமா மாமா"
         அம்மணி சொல்ல,
"அம்மா அம்மோவ் ..பசிக்குதும்மா வந்து சோத்தப் போடும்மா"
          மகனின் சத்தம் இடைமறித்தது.
"அம்மணி பையனுக்கு மொதல்ல சோத்தப் போட்டுட்டு வா..அப்பறம் பேசிக்கலாம்"
           என்று சின்ராசு சொல்ல சொல்ல அம்மணி எழுந்து வீட்டிற்குள் சென்றாள்..
 =========================================================================
 (தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..ஆனால் ஓட்டுப்பட்டை செயல்படவில்லையென நினைக்கிறேன்.எனது முகவரி மாற்றத்தினால் ஏற்பட்ட பிரச்சனை இது.தெரிந்தவர்கள் தீர்க்க வழி சொல்லுங்கள்)
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

24 comments:

 1. //ஒரு வேளை ஏவுகனை வேலை செய்யாம கீழே நிலத்து மேல விழுந்துடக் கூடாதில்லையா.. அதனால ஒடிசாவுல இருக்கிற "வீலர் தீவு" ங்கிற இடத்துல இருந்துதான் ஏவுகனைய ஏவுவாங்க ஒருவேளை ஏவுகனை சரியா வேலை செய்யலைன்னா நிலத்துல விழாம கடல்ல விழுந்திடும் அதான்"

  //

  புது தகவல் நன்றி

  ReplyDelete
 2. தனி டொமைன்க்கு மாறி இருந்தால் மீண்டும் ஒருமுறை தமிழ் மணம் தளத்தில் Register செய்யவேண்டும்.

  ReplyDelete
 3. ராஜபாட்டை ராஜா..

  இந்த செய்தி நிறைய பேருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இதை குறிப்பிட்டேன்..நன்றி..

  ReplyDelete
 4. பிரபு கிருஷ்ணா..

  தகவலுக்கு நன்றி..ஆனால் மறுமுறையும் தமிழ் மணத்தில் பதிவு செய்துவிட்டேன்..ஆனாலும் பிரச்சனை தொடர்கிறது.

  ReplyDelete
 5. நாட்டு நடப்பையும் நடிப்பு செய்தியையும் சொல்லிய பதிவு ரசித்தேன்.

  ReplyDelete
 6. கொக்கரக்கோ செய்தி வாசித்தமை அருமை .நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் .

  ReplyDelete
 7. தினசரி செய்திகளை அம்மணி சுவைப் பட சொல்லியிருக்காங்க.

  ReplyDelete
 8. தமிழ்மணம் இரண்டு நாட்களாக பிரச்சனை அவர்கள் ஏதோ கட்டமைப்பு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் முடிந்ததும் நிலமை சீர் அடையும் என்றே நினைக்கிறேன் மதுமதி!

  ReplyDelete
 9. தனுஷ் இந்தியிலையா...நாசமாபோச்சு....இனி சைக்கோ படமா வரும்!

  ReplyDelete
 10. மீண்டும் சின்ராசு - அம்மணியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பேப்பரில் படிக்கத் தவறிய விஷயங்களைக் கூட இவர்கள் மூலம் அருமையாய் அறிந்து கொள்ள முடிகிறது. தொடரட்டும்!

  ReplyDelete
 11. அண்ணா நல்ல ரசனையுடன் பகிர்ந்துள்ளீர்கள்...

  அன்பான ஒரு சின்ன வேண்டு கோள்... தங்களின் எழுத்துரு நிறங்கள் வாசிப்பின் கவனத்தை சிதறடிக்கிறது கவனத்திலெடுப்பீங்களா?

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

  ReplyDelete
 12. சசிகலா..

  அப்படியா ரொம்ப சந்தோசம்..

  ReplyDelete
 13. கோவை டூ தில்லி..

  சுவயாக இருந்ததா சகோ..மகிழ்ச்சி.

  ReplyDelete
 14. வீடு சுரேஷ்..

  தகவலுக்கு நன்றி சுரேஷ்..

  எல்லாம் கொலவெறி பண்ற வேலை..என்ன பண்றது..

  ReplyDelete
 15. கணேஷ்..

  மீண்டும் அம்மணியை சந்திப்பதில் மகிழ்ச்சியா..எனக்கும் மகிழ்ச்சியே..

  ReplyDelete
 16. மதி.சுதா..

  வருகைக்கு நன்றி சுதா..

  எனக்கும் ஒரு உறுத்தல் இருந்தது மாற்றிவிடுகிறேன்..

  ReplyDelete
 17. அழகாக சொல்லிருக்கீங்க நண்பா

  ReplyDelete
 18. நாட்டு நடப்பை புட்டு புட்டு வைத்ததற்கு நன்றி சகோ

  ReplyDelete
 19. மாமாவும் அம்மணியும் பேசுவது படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 20. நாட்டுநடப்புகளை கொக்கரக்கோ
  எனக் கூவி சொன்னமை
  இயல்பாய் படிக்க உதவுகிறது..

  ReplyDelete
 21. இந்த கொலைவெறி என்னல்லாம் பண்ணுது?ம்ம்ம்

  ReplyDelete
 22. நாட்டு நடப்பு சொன்ன விதமும் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com