வணக்கம் தோழர்களே..எப்படி இருக்கிறீர்கள்..இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி..உங்களுக்கும் அப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன்..இந்த தளத்தில் கவிதைகள்,தொடர்கதை,நாட்டு நடப்பு,கவிதை நடையில் திருக்குறள்,கவிதை நடையில் பெரியார் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை எழுதி வந்திருக்கிறேன்.இப்போது புதிதாய் ஒரு தொடரை எழுத விரும்பி ஆரம்பிக்கிறேன்.
நீண்ட நாட்களாக மாணவர்களுக்கு வழிகாட்டும் ஒரு கல்வித் தொடரை எழுதலாமென எண்ணிக் கொண்டிருந்தேன்..பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் போது அதற்கான திட்டமிடுதல் குறித்து எழுதலாமென நினைத்தேன்.ஆனால் அது முடியாமற்போய்விட்டது.எனவே தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கும் தேர்வுகளை எழுத ஆர்வமாக இருக்கும் மாணவர்களுக்கு உபயோகப்படும் பொருட்டு அதற்கு தயாராவது குறித்தும் திட்டமிட்டு படிப்பது குறித்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி என்ற தொடரை எழுத ஆரம்பிக்கிறேன்..
இந்த தொடர் தேர்வு எழுத ஆயத்தமாகும் அத்தனை பேருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்..நிறைய பேர் தொடர்ந்து இத் தேர்வுகளை எழுதி வந்தாலும் சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினாலும் எவற்றை படிப்பது எப்படி படிப்பது என்று குழப்பத்துடனே படித்து தேர்வில் தேர்வாக முடியாமல் போய்விடுகிறார்கள்.சிலர் இத் தேர்வுதனை முதல் முறையாக இப்போதுதான் எழுத போகிறார்கள். அவர்களுக்கு இத்தேர்வு குறித்து நிறைய விசயங்கள் தெரியாமற் இருக்கின்றன.அதை அவர்களுக்கு சொல்லித் தர ஆட்கள் இல்லை.
எனவே தேர்வு குறித்து அத்தனை குறிப்புகளையும் இத்தொடரில் எழுதலாமென இருக்கிறேன்.அரசு தேர்வு எழுத இருக்கும் தோழர்களே இந்தப் பகுதி உங்களுக்கான பகுதி வாசிக்க மறக்க வேண்டாம்..அதற்காக மற்ற தோழர்கள் இப்பகுதியை புறக்கணிக்க வேண்டாம்.உங்களுக்கும் இவ்விசயங்கள் பயன்படலாம்..
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கும் தற்போதைய பணி காலியிடங்களின் எண்ணிக்கை 10718 ஆகும். இது குரூப் 4 மற்றும் குரூப் 8 உள்ளடக்கியது..
இந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு 28.4.2012 தேதியிட்ட செய்தித் தாள்களில்
வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரியில் சென்று பார்க்கவும்..
பதவிகள் குறித்தும் அதற்கான தகுதிகள் குறித்த விளக்கங்கள் மற்றும் தேர்வு எழுத தயாரவது குறித்தும் தேர்வில் வெற்றி பெறுவது குறித்தும் அடுத்தடுத்த பாகத்தில் பதியப்படும்..
=========================================================================
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
=========================================================================
மாணவர்களுக்கு வழிகாட்டும் புதிய தொடரின் துவக்க விழாவுக்கு என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அது பயன்படட்டும்.
ReplyDeleteபயனுள்ள பதிவு. பாராட்டுகள்.
ReplyDeleteஉபயோகமான தொடர். தொடரட்டும் உங்கள் பணி!
ReplyDeleteபலருக்கும் பயன்படும் தகவல்களை அளிப்பதற்கு மிகவும் நன்றி.
ReplyDeleteஅன்பு நண்பருக்கு வணக்கம் . தங்களின் இந்த டி.என்.பி.எஸ்.சி பற்றிய தொடர் முழுவதையும் என்னுடைய இமெயில் முகவரிக்கு அனுப்பிதர அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய மெயில் முகவரி
ReplyDeletekrishnaswamyindia@yahoo.com
அன்பு நண்பரே ..,பதிவுகள் தங்கள் இமெயில் முகவரிக்கு இனி வ்ந்து விடும் ..before that you have to verify the url sent to your mail id ...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
ReplyDeleteதிரு வை.கோ
கோவை டூ தில்லி
நடன சபாபதி
கீதமஞ்சரி