புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி-பெயர்ச்சொல் வகையறிதல்-பாகம் 12

டி.என்.பி.எஸ்.சி-பெயர்ச்சொல் வகையறிதல்-பாகம் 12

          பெயர்ச்சொல் வகையைக் கண்டறிதல்

    ணக்கம் தோழர்களே! பாகம் 11   ஓரெழுத்து ஒரு மொழியைக் கண்டோம்.. இன்றைய பதிவில் பெயர்ச்சொல்லைக் கண்டறிதல் எப்படி என்பதை பார்ப்போம்.

     பொதுத்தமிழ் பகுதியில் பெயர்ச்சொல்லைக் கண்டுபடி  வினாக்கள் கேட்கப்படும்.மிக மிக எளிதாக கேட்கப்படும் வினாக்களுக்கும் நாம் விடை அளித்துவிடலாம்..மிக எளிமையான பகுதியும் கூட..

       ஒரு பெயர்ச்சொல்லைக் கொடுத்து அது எந்த வகை பெயர்ச்சொல் என கண்டறிக என்று வினா இருக்கும்..

       இந்தப் பகுதியில் நாம் ஆழமாக படிக்க வேண்டியது இருக்காது அடிப்படையான பெயர்ச்சொல் வகைகளை பார்த்தாலே  எனவே அடிப்படைகளை தெரிந்து கொள்வோம்..

 பெயர்ச்சொல் என்றால் என்ன?

    ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம்..

இடுகுறிபெயர்:

           ஒரு பொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல் இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர்..

        எ.கா: மரம்,மலை,மண்

காரணப்பெயர்:

          ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப்பெயர்.

        எ.கா:முக்காலி,நாற்காலி,கருப்பன்,
           
பெயர்ச்சொல்லின் வகைகள்:

          பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

பொருட்பெயர்

(எ.கா) பணம்,மனிதன்,விலங்கு,மரம்
இடப்பெயர்

          பள்ளி,குளம்,வீதி,நாடு,ஊர்

காலப்பெயர்

 மணி,நாள்,வைகறை,இளவேனில்,சித்திரை
சினைப்பெயர்

           கை,கால்,இலை,காம்பு,காய்,பூ
பண்புப்பெயர்

           வட்டம்,நிறம்,அளவு,சுவை,செம்மை
தொழிற்பெயர்

           எழுதுதல்,ஓடுதல்,பாடுதல்,தைத்தல்

        ஒரு பொருளைக் குறித்து வந்தால் அது பொருட்பெயர்.

        ஒரு இடத்தைக் குறித்து வந்தால் அது இடப்பெயர்.

        ஒரு காலத்தைக் குறித்து வந்தால் அது காலப்பெயர்.

        ஒரு உறுப்பை குறித்து வந்தால் அது சினைப்பெயர்.

        ஒரு பொருளின் பண்பை குறித்து வந்தால் அது பண்புப் பெயர்.

(தொல்லை,மாண்பு,மாட்சி,நன்றி,நன்று,நலம்,நன்னர் போன்ற வார்த்தைகளும் பண்பு பெய்ர்கள் தான் குழப்பம் வேண்டாம்)

        ஒரு தொழிலைக் குறித்து வந்தால் அது தொழிற்பெயர்.

(ஆட்டம்,கொலை,அழுகை,பார்வை,கடவுள்,கோட்பாடு,சாக்காடு போன்றவையும் தொழிற்பெர்கள் தான் குழம்பி விட வேண்டாம்.மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்)

 தொழிற்பெயர் இரண்டு வகைப்படும்

அ. முதற்நிலைத் தொழிற்பெயர்
ஆ. முதற்நிலைத் திரிந்த தொழிற்பெயர்

அ. முதல்நிலை தொழிற்பெயர்

         பெரும்பாலும் வேர்ச்சொல்லாகவே வரும் முதலெழுத்து குறிலாக இருக்கும்.

(எ.கா) சுடு, கெடு

ஆ. முதற்நிலைத் திரிந்த தொழிற்பெயர்

        முதற்நிலைத் தொழிற்பெயரின் முதலெழுத்து நீண்டு வருமாயின் அது
முதற்நிலைத் திரிந்த தொழிற்பெயராகும்.

(எ.கா)
சுடுதல் - தொழிற்பெயர்
சுடு - முதற்நிலைத் தொழிற்பெயர்
சூடு - முதற்நிலை திரிந்த தொழிற்பெயர்
சுடுதல் - சுடு - சூடு         நிறைய வார்த்தைகளைச் சொல்லி அதன் வகையைக் கண்டு பிடித்து பாருங்கள்..

          சரி தோழர்களே..பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன்..
-------------------------------------------------------------------------------------------------------
பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்
-------------------------------------------------------------------------------------------------------

நன்றி....
=======================================================================
                                                                                                                                        அன்புடன்
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

14 comments:

 1. புதுபித்துக்கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. தொடருங்கள் நண்பரே.., தொடர்கிறோம் நாங்கள் ..!

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள பதிவு .. நன்றி நண்பா

  ReplyDelete
 4. மிகவும் பயனுள்ள பதிவு சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் நினைவு தான் வருகிறது .

  ReplyDelete
 5. மனசாட்சி..

  வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 6. ராஜபாட்டை..

  நன்றி தோழர்..

  ReplyDelete
 7. சசிகலா...

  அப்படியா மகிழ்ச்சி சகோதரி..

  ReplyDelete
 8. சென்னைப்பித்தன்..

  தங்கள் வருகைக்கு நன்றி ஐயா..

  ReplyDelete
 9. 12 வரைக்கும் பாடம் போயிருக்கா மதுமதி.இனித்தான் எல்லாத்தையும் பார்க்கப்போறேன் !

  ReplyDelete
 10. நல்ல பதிவு ...

  முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
  பார்க்க

  தமிழ் DailyLib

  அவசியம் logo ஐ இணைத்து கொள்ளுங்கள்

  To get the Vote Button and Logo
  தமிழ் DailyLib Vote Button


  Thanks,
  Krishy

  ReplyDelete
 11. காகம் ,விலங்கு இவைகள் காரண பெயரா?

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com