வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி?
1)'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:
அ)சென்ற ஆ)சென்று இ) செல் ஈ)சென்றனன்
2)பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:
அ)பேசி ஆ)பேசு இ)பேசிய ஈ)பேசுதல்
அன்புடன்..
வணக்கம் தோழர்களே..பெயர்ச்சொல் வகையறிவது எப்படி என்று பாகம் 12 ல் பார்த்தோம்.அப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
இந்தப் பதிவில் வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
பகுபத உறுப்பிலக்கணம் படித்திருப்போம்.இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும்.அப்படி மறந்திருந்தாலும் கவலை இல்லை.வேர்ச்சொல்லை மிக எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.
வேர்ச்சொல்:
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..
(எ.கா) பார்
'பார்' என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.
அப்படியானால் 'வந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா?
'வந்தான்' என்பதன் வேர்ச்சொல் 'வா'.
அவ்வளவுதான்.வார்த்தையைப் பார்த்தவுடனே எளிதாக வேர்ச்சொல்லைக் கண்டறியலாம்.
இதைப் போலவே ஏதோவொரு வார்த்தையைக் கொடுத்து அதன் வேர்ச்சொல்லைக் கண்டுபிடி என ஐந்து கேள்விகள் கேட்கப்படும்.
மாதிரி வினாக்கள்:
1)'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:
அ)சென்ற ஆ)சென்று இ) செல் ஈ)சென்றனன்
2)பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:
அ)பேசி ஆ)பேசு இ)பேசிய ஈ)பேசுதல்
மேற்கண்ட வினாக்களில் விடையைக் கண்டு பிடிக்க முடிகிறதா.. இல்லையெனில் எளிதாக கண்டுபிடிக்க வழி இருக்கிறது..
முதலில் கொடுத்த சொல்லை நன்றாக வாசியுங்கள்.பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள்.அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி இருக்கிறதோ அந்தச் சொல்லே வேர்ச்சொல் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பாருங்கள்..அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் கட்டளைச் சொல் எதுவென்று தெரிகிறதா?
ஆமாம்.முதல் வினாவிற்கு விடை 'செல்'.அச்சொல்தான் கட்டளைச்சொல்.
இரண்டாவது வினாவிற்கு விடை 'பேசு'.அச்சொல்தான் கட்டளைச்சொல். இப்போது எளிதாக உள்ளதா..
மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன்.வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும்.இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
என்ன தோழர்களே..இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்குமென நினைக்கிறேன்..நன்றி.
பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
==========================================================================அன்புடன்..
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
தொடர்ந்து படிச்சிட்டே வந்தேன். நான் மட்டும்
ReplyDeleteஇந்த பரீட்சை எழுதியிருக்க நிச்சயம் சித்திதான்....
///டி.என்.பி.எஸ்.சி - வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி?//
ReplyDeleteதொடர் பதிவை இத்தனை நாட்களாய் எப்படி படிக்காமல் விட்டேன் என்று முந்தைய பதிவு நினைக்கச் செய்தது, ஓய்வு நேரத்தில் அனைத்து பதிவுகளையும் வாசிக்கிறேன்..,
தொடருங்கள் தொடர்கிறோம் ..!
திகில்தொடரை விட, இந்தத் தொடரைத்தான் அதிகம் ஆவலோடு எதிர்பார்க்கிறேன், தொடருங்கள்.
ReplyDeleteஒரே ஒரு குறை... கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் கண்களுக்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறது. :) மாற்றவேண்டும் என்பது இல்லை. மாற்றினால் உதவியாக இருக்கும்.
அருமையான முயற்சி..உபயோகமான பதிவுகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
mikavum nanraga ullathu.. nantri
ReplyDelete