புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி-இலக்கண குறிப்பறிவது எப்படி?-பாகம்14

டி.என்.பி.எஸ்.சி-இலக்கண குறிப்பறிவது எப்படி?-பாகம்14

                         இலக்கண குறிப்பறிதல்


        வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம் அல்லவா..இந்தப் பதிவில் இலக்கணக் குறிப்பறிவது எப்படி என பார்ப்போம்..

        இலக்கண குறிப்பறிதல் பகுதியிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படலாம். ஐந்திற்கும் எளிதாக விடையளிக்கலாம்

        இலக்கண குறிப்பு கடுமையான பகுதி என சிலர் சொல்வார்கள்.புரிந்து கொள்ளுதலை பொருத்துதான் இலக்கணம் கடுமையானதா இல்லை எளிமையானதா எனத் தெரியும். இலக்கணத்தை புரிந்து கொண்டால் எல்லாமே எளிதுதான்.

         முந்தைய குரூப் 4 வினாத்தாள்களை வைத்து பார்க்கும்போது எளிமையான வினாக்களே கேட்கப்பட்டுள்ளன.

                                               பெயரெச்சம்
                                               வினையெச்சம்
                                               முற்றெச்சம்
                                               வினைமுற்று
                                               வினைத்தொகை
                                                பண்புத்தொகை
                                               வியங்கோள் வினைமுற்று
                                               வினையாலணையும் பெயர்
                                                உருவகம்
                                                உவமைத்தொகை
                                                ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
                                                இரட்டைக்கிளவி
                                                அடுக்குத்தொடர்
                                                எண்ணும்மை
                                                 உம்மைத்தொகை
                                                 உரிச்சொற்றொடர்

             போன்றவற்றிலிருந்துதான் குரூப் 4 வினாக்கள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கிறது. குரூப் 2 தேர்விற்கு இன்னும் கூடுதலாக கேட்கப்படும்.

            மேற்கண்டவைகளை நன்றாக தெரிந்து கொண்டாலே போதுமானது. ஏற்கனவே சொன்னதைப் போல தவறான விடைகளை நீக்கிவிட்டு சரியான விடையைக் கண்டுபிடித்துவிடலாம்.

             சில வார்த்தைகளைக் கண்டதும் எளிதாக அதன் இலக்கண குறிப்பைக் கண்டுபிடித்துவிடலாம்.சில வார்த்தைகளை இனம் காணுவது சற்று கடினம். பெரும்பாலும் கடினமான வார்த்தைகளைக் கேட்க மாட்டார்கள்.எனவே மேற்கண்டவற்றை நாம் தெளிவாகப் பார்த்தாலே போதுமானது.

            பொதுத்தமிழ் பகுதியில் கேட்கப்படும் எல்லா வினாக்களுமே பள்ளித்தமிழ் புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன.எனவே தவறாமல் அவற்றை ஒருமுறை தெளிவாக வாசித்துக் கொள்ளுங்கள்.

            ஒவ்வொரு இலக்கணக் குறிப்பிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டால் போதும் எளிமையாக வேறுபடுத்தலாம்.முடிந்தவரை கொடுக்கப்பட்டுள்ள வார்த்தையின் பொருளைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

           சரி தோழர்களே..அடுத்த பதிவில் இலக்கண குறிப்பறிதல் பற்றி தெளிவாக காண்போம்..நன்றி..
========================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.
========================================================================

                                                                                                                                          அன்புடன்




இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

10 comments:

  1. தேவைப்படுபவர்களுக்கு மிகவும் பயன்படும் பதிவு. உங்கள் உழைப்பு நிச்சயம் வீண் போகாது. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. அனைவருமே தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் தான் அருமை தொடருங்கள் . வலைச்சர ஆசிரியரை அறிமுகப்படுத்துவது கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

    ReplyDelete
  3. கடினமான பகுதியாக கருதுவதில் இதுவும் ஒன்று. நீங்கள் இதை சுலபமாக்கிவிடுவீர்கள் என நம்புகிறேன். வேர்ச்சொல், பெயர்ச்சொல் பகுதிகளும் அருமை. நன்றி :)

    ReplyDelete
  4. அடுத்த பதிவுக்கு வைய்ட்டிங் .. :)

    ReplyDelete
  5. ராஜி..

    நிச்சயம் சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  6. சசிகலா..

    வலைச்சர ஆசிரியர்களை அறிமுகம் செய்யவேண்டும்..அவர்கள் அறிமுகம் செய்யும் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டும் என்று எண்ணினேன்..வேறொன்றுமில்லை சகோதரி..

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  7. புரட்சிமணி..

    தொடர்ந்து வாசித்துவரும் தங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  8. Migavum payanulla pathivugal tholar..

    ReplyDelete
  9. ayyo saami intha maathiriyaana blogai than naan thedikittu irunthen. nanri kadavule.

    ReplyDelete
  10. really very useful. thanks alot. no words to say my thanks to your blog. I surely will share this blog with my friends. Thanks !!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com