புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி-எந்தெந்த புத்தகம் படிக்கலாம்-பாகம்-6

டி.என்.பி.எஸ்.சி-எந்தெந்த புத்தகம் படிக்கலாம்-பாகம்-6


                வணக்கம் தோழமைகளே பாகம் 5 ல் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு போன்ற பிரிவுகளுக்கு எத்தனை மதிப் பெண்கள் என்று பார்த்தோம் அல்லவா.. அடுத்த பதிவில் பொதுத்தமிழ் பகுதியில் இதுவரை எந்தெந்த பகுதியில் இருந்து எந்த மாதிரியான வினாக்கள் கேட்டப் பட்டிருக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம்.இப்போது அதே மாதிரிகளின் அடிப்படையில் தான் கேள்விகள் வரும் அதில் ஏதும் மாற்றமிருக்காது..

              தேர்வுக்கு படிக்கும் அளவிற்கு நம்மிடம் பாடங்களின் தொகுப்பு இல்லையே எனக் கருதி கடைகளில் கிடைக்கும் பல வினா விடை புத்தகங்களை வாங்கி பலர் படிப்பார்கள்..அவர்களுக்கு சின்ன வேண்டுகோள்.. அப்படி கடையில் புத்தகம் வாங்கி படிப்பதில் தவறில்லை.ஆனால் அப்புத்தகத்தை யார் எழுதியிருக்கிறார்கள்.அதை தரமான பதிப்பகம் வெளியிட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும் ஏனென்றால் பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு புத்தகங்கள வியாபாரம் செய்கின்றன.அவற்றில் சில புத்தகங்கள் மட்டுமே வினாக்களுக்கு மிகச் சரியான பதில்களைக் கொண்டும் அச்சுப் பிழை இல்லாமலும் இருக்கின்றன. எனவே நல்ல புத்தகங்களை மட்டுமே வாங்குங்கள் .தேர்வில் ஓரிரு மதிப்பெண்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.எனவே நமக்கு ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம்..

                அதற்கு சிறந்த வழி என்று பார்த்தால் கடை சரக்குகளை விட்டுவிட்டு நான் ஏற்கனவே சொன்னதைப் போல 6 ம்வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரையிலான பழைய அல்லது புதிய புத்தகங்களை வாசிப்பதே சிறந்தது. அந்த புத்தகங்களிலிருந்து கிட்டத்தட்ட 180 வினாக்கள் கேட்டகப்படுகின்றன. ஆகவே தோழர்களே பாடப்புத்தகங்களை தவறாமல் வாசியுங்கள்.அவைதான் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வழித்துணைவன்.

             அப்படியானால் மீதி 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள் எங்கிருந்து கேட்கப்படுகின்றன எனக் கேட்கிறீர்களா..வரும் பதிவில் குறிப்பிடுகிறேன்.
குறிப்பாக 6 ம் வகுப்பிலிருந்து 10 ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் புத்தகங்களை ஒரு வரி விடாமல் வாசித்து விட்டீர்களானால் 160 மதிப்பெண்கள் உங்களுக்கு சொந்தமாகிவிடும்.

  
           
    வ்வொரு பாடத்தின் முடிவிலும் இடம் பெற்றுள்ள மொழிப் பயிற்சிகளை கட்டாயம் வாசியுங்கள்..மொழிப்பயிற்சியில் பின் தங்கியிருக்கும் தோழர்கள் கட்டாயம் பயிற்சி செய்யுங்கள்..ஏனென்றால் மொழிப்பயிற்சி வகையில் மட்டுமே ஏராளமான கேள்விகள் கேட்கப்படும்.மிகவும் எளிமையான நாம் அன்றாடம் பேசும் மொழிதானே தமிழ்..ஆகவே புரிந்து கொள்வதில் ஒன்றும் உங்களுக்கு சிரமம் இராது..எனவே ஒருமுறை ஒவ்வொன்றையும் ஆழ்ந்து வாசித்தாலே போதுமானது மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும்..

              அதே போல் 7 ம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரையிலான சமூக அறிவியல் புத்தகங்களை வாசித்தலே உங்களுக்கு கிட்டத்தட்ட 75 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.ஆனால் அவற்றை கவனமாக படிக்க வேண்டும்.ஆழ்ந்து படிக்க வேண்டும்.படித்தவுடன் மறந்து விடும்..அதனால் சமூக அறிவியல் பாடத்தை படிக்கும் போது மனதை அலைபாயவிடாதீர்கள்.. ஏனென்றால் புரியாமல் போய்விடும்.நன்கு புரிந்து படித்தால் உங்களுக்கே ஆர்வம் அதிகரிக்கும்.

           அதே போல  6 ம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரையிலான அறிவியல் புத்தகங்களை கட்டாயம்  வாசியுங்கள் உங்களுக்கான 30 மதிப்பெண்கள் அதில் இருக்கிறது.அறிவியல் என்றாலே கொஞ்சம் கடினமானதுதான்.எனவே நேரம் அதிகம் ஒதுக்கி வாசிக்கவேண்டும்.

            கணிதத்தை பொறுத்தவரையிலும் அப்படித்தான் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு கணித புத்தகங்களில் உள்ள சாதாரண வகை கணக்குகளே இடம் பெறும்.உங்கள் மூளைக்கு வேலையாக இருக்கும்.எனவே அவற்றை போட்டு போட்டு பாருங்கள்.கணிதத்தில் பத்து வினாக்கள் கேட்கப்படும் 15 மதிப்பெண்களை பெற்றுத் தரும்..

குரூப் 2 தேர்வெழுதும் மாணவர்கள் 12 ம் வகுப்பு வரையிலான புத்தகங்களை வாசிக்கவும்..

             சரி தோழர்களே படித்துக் கொண்டே இருங்கள் அடுத்தப் பகுதியில் இதைப் பற்றி விரிவாக காணலாம்..
==========================================================================
 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.

==========================================================================
                                                                                                                                          அன்புடன்இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

 1. வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
  vanakkam plz add your post in http://www.valaiyakam.com/

  ReplyDelete
 2. வணக்கம் தோழரே/ஐயா, :)
  தேர்வுகள் சம்பந்தப்பட்ட உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை. உங்கள் பதிவுகளை தினமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  சமச்சீர் புத்தகத்தை படிப்பது நல்லதா அல்லதா பழைய புத்தகங்களை படிப்பது நல்லதா ?
  இம்முறை பழைய பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள் கேட்க்கப்படும் என்று செய்தித்தாளில் செய்தி வந்துள்ளதாக நண்பர் ஒருவர் கூறினார். இருப்பினும் அவராலும் அதை உறுதி செய்யமுடியவில்லை. தங்களுக்கு இதுபற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  நன்றி :)

  ReplyDelete
 3. மிக்க மகிழ்ச்சி புரட்சிமணி..இந்த தேர்வுக்கான கேள்விகள் பழைய பாடத்திட்டத்தின் கீழ்தான் கேட்கப்படும்.ஒருவேளை சமச்சீர் கல்வியென்றால் அரசு முறையாய் அறிவித்திருக்கும்..என்னைப் பொறுத்தவரை பழைய பாடத்திட்டங்களுக்குட்பட்ட புத்தகங்களை முழுமையாக வாசித்தாலே குரூப் 4 ல் எளிதாக வெற்றி பெறலாம்..ஆனால் குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்றவற்றிற்கு நீங்கள் சமச்சீர் கல்வியையும் சேர்த்து படிப்பது நல்லது.ஏனென்றால் அதில் புதிய தகவல்கள் நிறைய இருக்கிறது..

  ReplyDelete
 4. தங்களுடைய பதிலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com