புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி- எதிர்ச்சொல் கண்டறிதல் கண்டறிதல் பாகம் 30

டி.என்.பி.எஸ்.சி- எதிர்ச்சொல் கண்டறிதல் கண்டறிதல் பாகம் 30

            எதிர்ச்சொல் தருக

         ணக்கம் தோழர்களே பாகம் 29 ல் எதுகை மோனை எப்படி கண்டறிவது என்பதைப் பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதிர்ச்சொல் கண்டுபிடிப்பதைப் பற்றி பார்க்கலாம்.

         ஒரு சொல்லுக்கு எதிரான சொல்லைக் கண்டறிவதே எதிர்ச்சொல் கண்டறிதல்ஆகும்.இதை நாம் ஆரம்பப் பள்ளிகளில் படித்திருப்போம்.                      
     
          எளிதாக முழு மதிப்பெண்களை பெற்றுத்தரும் பகுதி இது.

         பெரும்பாலும்  வினாக்கள் மிக எளிமையாகவும் ஓரிரு வினாக்கள் சிறிது கடினமானதாகவும் கேட்கப்படலாம். எனவே கடினமான சில சொற்களையும் அவற்றிற்கான எதிர்சொற்களையும் கீழே காணலாம்.

மருவுக * ஒருவுக                        கடுவன் * மந்தி
மேதை * பேதை                           அருகே * தொலைவு
தன்மை * வெம்மை                    ஆடுஉ * மகடுஉ
மன்னிப்பு * ஒறுப்பு                     ஆகாது *போகாது
அருகு * பெருகு                            இன்சொல் * வன்சொல்
அண்மை * சேய்மை                   இயன்ற * இயலாத
முனிவு * கணிவு                          பகட்டு * எளிமை
வழுத்தல் * இகழ்தல்                  தொண்மை * புதுமை
வளர்ச்சி * தளர்ச்சி                     ஆதி * அந்தம்
அருள் * மருள்                              இன்சொல் * வனசொல்
பனையளவு * திணையளவு   நஞ்சு * அமிர்தம்
ஆழ * மிதப்ப                                 குடியரசு * முடியரசு
எந்தை * நொந்தை                      அமைதி * குழப்பம்
மருள் * தெருள்                            மலர்தல் * கூம்புதல்
தொகுத்து * பகுத்து                     இறுக்கம் * தளர்வு
நல்லார் * அல்லார்                    சுருக்கம் * விரிவு
தளிர் * சருகு                                 ஓடுமீன் * உறுமீன்
ஆண்டான் * அடிமை                மேலை * கீழை
சொந்தம் * அந்நியம்                  வளர்ந்து * தளர்ந்து
இழப்பு * ஆதாயம்                        இடும்பை * இன்பம்
பண்புடை * பண்பிலா               மூதேவி * சீதேவி
களிப்பு * துயரம்                           வடமொழி * தென்மொழி
தமயன் * தமக்கை                      பழமொழி * புதுமொழி
இம்மை * மறுமை                      தனிமை * குழு
--------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவில் சொற்களை ஒழுங்குபடுத்து எழுதுவது எப்படி என்பதைப் பார்ப்போம்..
--------------------------------------------------------------------------------------------------------------
பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்
------------------------------------------------------------------------------------
                                                                                                                                           அன்புடன்

பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. இன்சொல் எதிர்பதம் வன்சொல்லில் புள்ளி இல்லை. மேலும் இன்சொல் என்ற வார்த்தை இரண்டு தடவை வருகிறது.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com