புது வரவு :
Home » , , » பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு


         வணக்கம் பதிவர்களே.. ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.இது குறித்து அவ்வப்போது செய்திகளை இட்டு வருகிறோம். சமீபத்தில் பதிவர் சந்திப்புக்கான தோராயமான நிகழ்ச்சி நிரலை வெளியிட்டிருந்தோம்.அதில் குறிப்பிட்டதோடு மட்டுமின்றி இன்னும் சில நிகழ்வுகளை சேர்த்து சந்திப்பை இனிமையாய் மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


          இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடுகிறோம்.

       இந்த சந்திப்பிற்கு  மின்னல் வரிகள் என்ற வலைப்பூவின் மூலம் பல்வேறு தலைப்பில் சுவையாய் எழுதிவரும் பிரபல பதிவரான மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றுவார்..

       'நான்பேச நினைப்பதெல்லாம்' வலைப்பூவில் ஓயாது எழுதி தற்போது தமிழ் மணம் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வரும் பிரபல பதிவர் ஐயா சென்னைப்பித்தன் அவர்கள் தலைமை தாங்குவார்.

          இச்சந்திப்பின் அடுத்த கட்டமான கவியரங்கத்திற்கு முன்னாள் தமிழக தமிழாசிரியர் கழக தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்று 'புலவர் கவிதைகள்' எனும் தலைப்பில் மரபு கவிதைகளை ஓயாமல் எழுதி வரும் பிரபல பதிவர் புலவர் இராமாநுசம் அவர்கள் தலைமை தாங்குவார்.

          நிகழ்வின் இறுதியில் நாள்தோறும் புயல் வேகத்தில் 'தென்றல்' என்ற வலைப்பூவில் கவிதைகளை எழுதிவரும் பிரபல பதிவர் சசிகலா அவர்கள் நன்றியுரை ஆற்றுவார்.

          சந்திப்பில் நடக்கவிருக்கும் மொத்த நிகழ்வுகளையும் 'தூரிகையின் தூறல்' என்ற வலைப்பூவில் எழுதிவரும் மதுமதி தொகுத்து வழங்குவார்.

         இதற்கிடையில் இன்னும் சில நிகழ்வுகள் இருக்கின்றன.அதை எப்படி செயலாற்றுவது என்பது குறித்து கலந்தாலோசித்து வருகிறோம்.

         இந்நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஒரு பிரபலம் அழைக்கப்படுவார் என்று அறிவித்திருந்தோம் அல்லவா..மின்னல் வரிகள் பால கணேஷ் அழைப்பின் பேரில் அந்த பிரபலம் விழாவிற்கு வருகை தர இசைந்துள்ளார்.

          அந்த பிரபலம் வேறு யாருமில்லை,மாத நாவல்  உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பது மட்டுமல்லாது திரைப்படத்துறையில் பிரபல வசனகர்த்தாவாகவும் வெற்றி நடை போடும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்தான் அந்த சிறப்பு அழைப்பாளர்.

         சந்திப்பின் போது நடைபெற இருக்கும் கவியரங்கத்தில் கவிதை வாசிக்கும் தோழர்களை உறுதி படுத்த சொல்லியிருந்தோம்.சில தோழர்கள் உறுதி படுத்தி வருகிறார்கள்..கவிதை வாசிக்க விழையும் தோழர்கள் உடனே உறுதி செய்து கொள்ளுங்கள்..ஏனென்றால் இறுதி பட்டியல் உடனடியாக தயாரிக்க வேண்டி உள்ளது .இறுதி பட்டியல் தயாரித்த பிறகு ஒருவரை உள்ளே இணைப்பதில் சிரமம்.

          சந்திப்பில் கலந்து கொள்ளும் தோழமைகளும் கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.ஏனென்றால் மற்ற ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாயிருக்கும்.

இதுவரை சந்திப்பிற்கு வருவதாய் இசைந்திருக்கும் பதிவர்கள்:


ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை  
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
சைத அஜீஸ்,துபாய் 
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 


மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
கணக்காயர்,சென்னை  


கவியரங்கில் பங்குபெறுவோர் 

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 

 
  
 தங்களின் வருகையை உறுதி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:

      மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021
      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166
      சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)-94445 12938
      புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)- 90947 66822
      சசிகலா(தென்றல்)-99410 61575

        
          சமூக வலைத்தளங்களில் பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் இன்னும் பல பதிவர்களை சென்றடையட்டும்.. நன்றி..
------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

88 comments:

  1. பதிவர் சந்திப்பு... படைக்கட்டும் புது சரித்திரம்..

    ReplyDelete
  2. கலைகட்டுது வாங்க கலக்குவோம்.

    ReplyDelete
  3. நீண்ட நாள் நினைவில் நிற்கும் நிகழ்வாக இது அமைய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் கவிஞரே... அனைத்துப் பதிவர்களையும் அலைகடலெனத் திரண்டு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வருவார்கள்..

      Delete
  4. சந்திப்பு ஏற்பாடு களைகட்டிவிட்டது
    மகிழ்வளிக்கிறது
    நிகழ்ச்சி சிறப்பாக அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா..

      Delete
  5. பெயர்களைப்பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது.மிகச்சிறப்பாக அமைய இன்னும் பலர் ஒத்துழைப்பு/உதவி வேண்டும்..ஒரு சிறிய ஆலோசனை சந்திப்பு,வரக்கூடிய உள்ளூர்பதிவர்களை இணைத்து,ஒரு நாள் நடத்தலாம் என நினைக்கிறேன். இயன்றால் ஆகஸ்டு முதல் வாரத்தில்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா ..இந்த மாத கடைசியிலேயே உள்ளூர் பதிவர்கள் சந்தித்து பேசினால் நன்றாக இருக்கும்..அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்வோம்..

      Delete
  6. எனக்கு வர ஆசையிருந்தும் என் பெற்றோர் காசிக்கு செல்வதால் வர இயலாத நிலை! பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அடடா..விடுங்கள் பிறகொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்..

      Delete
  7. நினைக்கும் போதே ஆஹா ஆஹா...!

    ReplyDelete
    Replies
    1. அப்படியென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்தால்..

      Delete
  8. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா..உங்கள் வாழ்த்து எங்களுக்கு தேவை..

      Delete
  9. அருமையான சங்கமம்!..இதில் சங்கமிக்கும் வாய்ப்பு எனக்கு
    மிக அரிது ஆனாலும் வாய்ப்புக் கிட்டி இந்த நிகழ்வில் கலந்துகொள்ள
    இருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் இதன் ஒழுங்கமைப்பாளர்களுக்கும்
    எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில்
    நான் மிக மகிழ்ச்சி கொள்கிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ..எங்கே ரொம்ப நாட்களாக உங்களைக் காணவில்லை.

      Delete
  10. விழாவில் சந்திப்போம் சகோ

    ReplyDelete
  11. கணக்காயர் [ஈ.எஸ். ராமன்] அவர்கள் பெயர் இரண்டு முறை வந்திருக்கிறது நண்பரே....

    கணேஷ் ஜி, கணக்காயர் அய்யாவிடம் பேசி விட்டீர்கள் போல... மிக்க நன்றி.

    பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்.

    நட்புடன்

    வெங்கட்
    புது தில்லி.

    ReplyDelete
    Replies
    1. திருத்தி விட்டேன் தோழரே..கணக்காயர் ஐயா ஆரம்பத்திலேயே என்னை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வருகையை உறுதி படுத்திவிட்டார் தோழர்..தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..

      Delete
  12. நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டதாக உணர்கிறேன் ஐயா! வெகு தூரத்தில் (பஹ்ரைன்) இருப்பதால் வருத்தப்படுவதை தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை!

    சந்திப்பு தித்திப்பாக இந்த சிறுவனின் நல்வாழ்த்துக்கள்! (TM 9)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சென்னை வரும்போது சொல்லுங்கள் சிறிய சந்திப்பை நிகழ்த்திவிடலாம்.வாழ்த்துக்கு நன்றி..

      Delete
  13. பதிவர்களின் வருகைப்பதிவேடு சந்திப்பை இன்னும் ஆர்வப்படுத்துகிறது...

    ஒரு வேண்டுகோள்...

    மிகச்சிறந்த தமிழகத்து பதிவர்கள் கலந்துக்கொள்ளும் இந்த விழாவை சிறந்த விழாவாக மாற்ற வேண்டும். அதற்கான வேலை முறையாக செய்ய வேண்டும் ஒரு சில வேலைகளை பகிர்ந்து சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்...

    என்னுடைய விண்ணப்பம்...!

    ஒரு விழா வெற்றி அடைவது என்பது அது நடத்திமுடிக்கும் விதத்தில் தான் இருக்கிறது. நிறைநண்பர்கள் கூடுவதால் அதிக நேரம் அவர்களோடு பேச அறிமுகம் செய்து கொள்ள என அதிக நேரம் எடு்ககும்...

    புகைப்படம் எடுத்துக்கொள்ள என தனியாக நேரம் ஒதுக்கி வையுங்கள்..

    கவியரங்கத்தில் கவிதைப்பாடும் நேரத்தை ஆட்களின் எண்ணிக்கையை வைத்து முடிவுசெய்துக் கொள்ளுங்கள்..

    அறிமுகப்படலம் மிகவும் அவசியம் அதே சமயம். அறிமுகம் அதிக நேரத்தை எடுத்துகொள்ளாததாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நிகழ்ச்சிகள் காலை முதல் துவங்கினால் நன்றாக இருக்கும் அப்போதுதான் தூரத்தில் இருந்து வருபவர்கள் இரவில் வந்து சேர ஏதுவாக இருக்கும்...

    செலவுகள் விஷயத்தில் கவலைக்கொள்ள வேண்டாம் முடிந்த வரையில் பகிர்ந்துக்கொள்ளலாம்.

    தூரத்தில் இருந்து வருபவர்களுக்கு தங்கும் வசதிகள் ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருந்து வருபவர்களுக்கு இப்பிரச்சனை இருக்காது மதுரை ஈரோடு கோவை போன்ற பகுதியில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக இருக்கும்...

    என்னுடைய கணிப்பின் படி கூட்டத்திற்கு வரும் பதிவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டும் என்று கருதுகிறேன்...

    இந்த விழா.. அடுத்து இதுபோன்ற விழா எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும்


    கூட்டத்துக்கு வரும் பதிவர்களும் கண்ணியத்தோடும் மற்றும் விழாவை சிறப்பானதாக நடக்க உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்...

    என்தரப்பில் இருந்து ஏதாவது ஏற்பாடுகளோ அல்லது உதவிகளோ தேவை என்றால் தயவு செய்து கூறுங்கள்...

    விழா வெற்றியயடைய வாழ்த்துகிறேன்...
    அன்புடன்
    கவிதைவீதி சௌந்தர்...
    9042235550
    9443432105
    திருவள்ளுர்.

    ReplyDelete
    Replies
    1. சிறந்த தமிழகத்து பதிவர்கள் கலந்துக்கொள்ளும் இந்த விழாவை சிறந்த விழாவாக மாற்ற வேண்டும். அதற்கான வேலை முறையாக செய்ய வேண்டும் ஒரு சில வேலைகளை பகிர்ந்து சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசையும் கூட..
      நீங்கள் சொன்ன அனைத்தும் யோசிக்க வேண்டிய விசயங்கள்தான் தோழர்..இது குறித்து விரிவாக பேச சென்னை வட்டாரத்தில் இருக்கும் பதிவர்கள் அடுத்த வாரத்தில் சந்தித்து பேசலாம்.நீங்கள் தவறாமல் வாருங்கள்.திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்துவோம்.விரிவான ஆலோசனைகளை கொடுத்தமைக்கு நன்றி தோழர்..

      Delete
  14. ஏற்பாடுகள் அனைத்துப் பதிவர்களையும் உற்சாக வெள்ளத்தில்
    மிதக்க வைக்கிறதே. சந்திப்பு சுரமும் , countdowm உம் இனிதே ஆரம்பம்.
    வாழ்க பதிவர் உலகம் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி சந்திப்பிற்கு கட்டாயம் வந்துவிடுங்கள்..

      Delete
  15. பதிவர் மாநாடு வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. மாநாடு என்று சொல்லிவிட்டீர்களே ஆதிரா.மிக்க மகிழ்ச்சி.இனி இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் போலிருக்கிறதே..

      Delete
    2. பல நாடுகளிலிருந்து வந்து இத்தனை மாபெரும் புள்ளிகளெல்லாம் பங்கு பெறுவதைச் சந்திப்பு என்று கூறுவது பொருத்தமாகாது. மாநாடே. வாழ்த்துகள். மாநாட்டில் ஒரு புள்ளியாக நானும். நாளை அழைத்து உறுதி செய்கிறேன்.

      Delete
  16. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி தோழர்..

      Delete
  17. வாகைக்கான தோகை.
    விரியட்டும் இணைய உறவு.

    ReplyDelete
    Replies
    1. இணைய உறவை மேம்படுத்துவோம்..

      Delete
  18. வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்பு இனியதாக தொடரட்டும்.!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கலந்து கொள்ளலாமே அதிசயா..

      Delete
  19. பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியமை அறிந்து மிக்க மகிழ்ச்சி. சந்திப்பு வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா..தங்களை சந்திக்கும் ஆவல் அதிகரித்திருக்கிறது..

      Delete
  20. வணக்கம் தோழர். என்னை மாதிரி பிரபலமே இல்லாத, சுமாராய் எழுதுபவர்களும் வரலாமா?

    ReplyDelete
    Replies
    1. என்ன தலைவரே..இப்படி சொல்லிபோட்டீங்க..எல்லாமே பிரபல பதிவர் தான்..மறக்காம வந்துடுங்க..

      Delete
  21. மாத இறுதியில் சென்னை நண்பர்கள் கலந்தாலோசனை திட்டம் நன்று. என் தரப்பு வேலைகளை செய்ய காத்திருக்கிறேன். தலைநகர சந்திப்பு சந்தேகமின்றி வெற்றியே.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தோழரே..சந்தித்து பேசி திட்டமிட்டு செய்வோம்..

      Delete
  22. எல்லா தோழமை உறவுகளும்
    கலந்து கொள்ளும் பதிவர் மாநாடு சிறக்க
    என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்

    ReplyDelete
  23. ரைட்.... ரைட்,,,, பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் ஜெட் வேகத்தில் ஆரம்பிச்சிருச்சு....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர்..நீங்களும் ஜெட் வேகத்தில் வந்துவிடுங்கள்..

      Delete
  24. சிறப்பான ஏற்பாடுகள் மகிழ்ச்சியை தருகிறது,வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  25. நிகழ்ச்சி காலையில் தொடங்குகின்றதா..மாலையிலா? அதை பற்றிய விவரம் எதுவும் இல்லை! நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துகள்...!முடிந்த அளவு கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. முதலில் மாலை ஆரம்பிப்பதாய் இருந்தது.இப்போது காலை முதல் மாலை வரை சந்திப்பை நீட்டிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.எனவே அடுத்த பதிவில் அதுபற்றி சொல்லிவிடுகிறோம்..

      Delete
  26. முடிந்தவரை கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன் சகோ:)

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்காதீர்கள் சகோ..கட்டாயம் வாருங்கள்..

      Delete
  27. மிக மகிழ்ச்சி. பட்டுகோட்டை பிரபாகர் என்றும் இளமையானவர். நண்பர் கணேஷ் மூலம் அவரை அணுகி இருப்பீர்கள் என நம்புகிறேன்

    புதிய நண்பர்களை நேரில் காண ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. ஆம்..கணேஷ் அவர்களின் ஏற்பாடே..உங்கள் ஆவல் நிறைவேறும்..

      Delete
  28. காத்திருக்கிறேன் ஆவலுடன் நமது சந்திபிற்காக... இந்த நிகழ்விற்காக சிரத்தை எடுக்கும் ஒவ்வொரு பதிவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள். பட்டுகோட்டை பிரபாகர் சிறப்பு அழைப்பாளர் என்பதை விட சிறந்த அழைப்பாளர் எனபதும் சாலச் சிறந்த்ததாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்.. ஆம்..நீங்கள் சொல்வது சரிதான்..

      Delete
  29. இது தான் நான் கேள்விப்படும் முதல் சந்திப்பு. எனவே நிச்சயம் இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா..கட்டாயம் வாருங்கள் தோழர்..

      Delete
  30. முதல் நாள் வந்தால், தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்துள்ளீர்களா ? வீடு சுரேஷ்குமார் சொன்னது போல், விழா எப்போது ஆரம்பிக்கிறது என்பதையும் அடுத்த பதிவில் (சென்னை சந்திப்பிற்கு பின்) சொல்லவும்..

    ReplyDelete
    Replies
    1. அது குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம்..மற்ற விபரங்களை அடுத்த
      பதிவில் தெரிவிக்கிறோம்..

      Delete
  31. முதல் நாள் வந்தால், தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்துள்ளீர்களா ? வீடு சுரேஷ்குமார் சொன்னது போல், விழா எப்போது ஆரம்பிக்கிறது என்பதையும் அடுத்த பதிவில் (சென்னை சந்திப்பிற்கு பின்) சொல்லவும்..

    ReplyDelete
  32. இந்த இனியதொரு சந்திப்பை எதிர்நோக்கி ஆவலாய் உள்ளேன்...
    சரியான திட்டமிடுதல் மிக முக்கியம் சார் ...
    நிச்சயம் இங்கு இருக்கும் பதிவர்களை அழைத்து ஆலோசனைகளையும் திட்டமிடுதலையும் செய்வது சிறந்தது ...
    கவிதை வீதி பெரியதொரு கருத்தை சொல்லி இருக்கின்றார் ...

    நிகழ்வு சிறக்கும் , இனிமையான நாளாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை சார் ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..அதன்படியே செய்வோம்..கட்டாயம் நிகழ்வு சிறக்கும்..

      Delete
  33. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். கலந்துக் கொள்ள முடியாததில் வருத்தமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்..சென்னை வரும்போது கட்டாயம் சந்திப்போம்..

      Delete
  34. விழா சிறக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலா..நீங்களும் கலந்து கொள்ளலாமே..

      Delete
  35. என்னது? பிரபல பதிவர்கள் சந்திப்பா? அப்போ எங்களை மாதிரி சாதா பதிவர்கள், மொக்கை பதிவர்கள் எல்லாம் வரக்கூடாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்..நல்லாத்தானே போயிட்டு இருக்கு..

      Delete
  36. >>Your comment will be visible after approval.

    ஹி ஹி இது என்னாதிது?

    ReplyDelete
    Replies
    1. பெயரில்லா தோழர்களின் படைப்பாற்றலை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேறு வழி..

      Delete
  37. அன்று ரம்ஜான் பண்டிகையாததால் என்னால் கலந்துகொள்ள முடியாது. மன்னிக்கவும்.பதிவர் சந்திப்பு என்ற மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்று ரம்ஜான் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை தோழர்..மன்னிக்கவும்..

      Delete
  38. Replies
    1. நீங்கள் இல்லாமல் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பா?.

      Delete
  39. பெரும் படை திரளுதே.பொறாமையாவும் சந்தோஷமாவும் இருக்கு.அட்டகாசம்தான்.அத்தனை அன்புள்ளங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் !

    ReplyDelete
  40. ஆம் பெரும்படை திரளும் என்பது உண்மை.உங்கள் வாழ்த்துக்கு நன்றி..

    ReplyDelete
  41. வாழ்த்துகள் .. விழா கண்டிப்பாக நன்றாக நடக்கும்

    ReplyDelete
  42. அண்ணா பெரிய சிக்கல் என் வீசா தொடர்பான கடிதம் கிடைக்கப் பெற்றும் இலங்கை அரசு என் வீசா தர வேண்டிய காலத்தை நீட்டியதால் பிரான்ஸ் அரசு எனக்கு தண்டனையாக இன்னும் மூன்று மாதங்கள் இலங்கையில் இருக்கும் படியும் என் படிப்பை மீண்டும் பணம் கட்டி தொடங்க வேண்டும் என்றும், அகதி பணத்தை நிறுத்தி புதியவர்களுடன் இணை மீள்பதிவு செய்ய வேண்டும் என்றும் பெரிய தண்டனை கொடுத்திருக்கிறது அது மட்டுமல்ல நான் வேறெந்த நாட்டிற்கும் செல்லவும் முடியாது இந்த மூன்று மாதங்களும் இலங்கை அரசு இப்படியும் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கிறது... அண்ணா நான் இப்போதுதான் ஓய்ந்திருக்கிறேன் பதிவில் கூறியிருந்தேனே காணவில்லையா அண்ணா நான் என்ன செய்ய கவலையாக உள்ளது..............

    ReplyDelete
  43. அன்பின் மதுமதி - நிச்சயம் சந்திப்பிற்கு வருகிறேன். வைகையில் தான் முன்பதிவு செதிருக்கிறேன். மாலை 4 மணீக்கு வருகிறேன். நிகழ்ச்சிகள் காலையிலேயே துவங்குமென அறிகிறேன். பயணச் சீட்டு கிடைப்பது தான் கடினம். பார்ப்போம். விழா வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  44. பின் தொடர்பதற்காக

    ReplyDelete
  45. ஆஹா..19,20 என் கணவரின் அண்ணா பெண் திருமணம் (ECR-ல்).வடை போச்சே.அனைவரும் கலந்து கொண்டு இன்னும் நல்லா நண்பர்களாகுங்க....

    ReplyDelete
  46. மி்கவும் நல்லது
    பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்!
    //இவர்கள் மட்டுமல்லாது
    பிரான்ஸ் நாட்டு வலைப்பதிவர்கள் சார்பாக எஸ்தர் சபி(என் இதயம் பேசுகிறது)பிரான்ஸ் அவர்களும்
    நியூசிலாந்து தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக துளசி கோபால், நியூசிலாந்து அவர்களும்
    சிங்கப்பூரிலிருந்து எழுதும் தமிழ் வலைப்பதிவர்களின் சார்பாக சத்ரியன்(மனவிழி) அவர்களும் வர இசைந்திருக்கிறார்கள்...//
    மிகவும் நல்ல செய்தி நண்பரே
    இது வரை எனக்கு வெளி நாடு வாழ் இணைய பதிவர்கள் தங்களுக்கென்று ஒரு அமைப்பு வைத்திருக்கிறார்கள் என் அறியாமல் இருந்தேன் இப்போது தான் தெரிகிறது அவர்கள் அமைப்பு வைத்திருப்பது மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் சார்பாக ஒரு பதிவரை ஒரு பதிவர் சந்திப்புக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்றால் உண்மையில் பெருமை பட வேண்டிய விசயம்
    தான்.
    தகவலுக்கு மிகவும் நன்றி நண்பரே!
    பதிவர் சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  47. விசாக் கிடைத்ததும் எனது வருகையை உறுதி செய்கின்றேன் ! நன்றிகள் ... !!!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com