புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி-அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

டி.என்.பி.எஸ்.சி-அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்
                                                                             - சீவக சிந்தாமணி

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.
                                                                            - திருக்குறள்

செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்
                                                                          - சிலப்பதிகாரம்

www.madhumathi.com,madhumathi,tnpsc,மதுமதி,தூரிகையின் தூறல்,டி.என்.பி.எஸ்.சி
Add caption
இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

நெடுந்தொகை - அகநானூறு

கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை

பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை

புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு

வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை

பாணாறு - பெரும்பாணாற்றுப்படை

பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு

புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை

வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்

சின்னூல் என்பது - நேமிநாதம்

வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்

ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

www.madhumathi.com,madhumathi,tnpsc,மதுமதி,தூரிகையின் தூறல்,டி.என்.பி.எஸ்.சிகுறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

உழத்திப்பாட்டு - பள்ளு

இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

தமிழர் வேதம் - திருமந்திரம்

தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
 - திருவாசகம்

தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

www.madhumathi.com,madhumathi,tnpsc,மதுமதி,தூரிகையின் தூறல்,டி.என்.பி.எஸ்.சி
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

பாவைப்பாட்டு - திருப்பாவை

பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்
=======================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
=======================================================================       நூல்கள் நூலாசியர்களைக் காண இங்கே  செல்லவும்..
-----------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்.. இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பில் செல்லவும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

20 comments:

 1. மிக அருமையான தொகுப்பு, மிக வியப்பை உணர்ந்தேன். பாராட்டுகள்

  ReplyDelete
 2. நீங்கள் நலமா?... அடிக்கடி வர இயலவில்லை...தோழரே.

  ReplyDelete
  Replies
  1. நலம் தோழரே..நேரமிருக்கும்போது வாருங்கள்..

   Delete
 3. நூல்களைப் படிப்பதற்கு அவற்றை ஒரு தொகுப்பாக வகுத்துக் கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, சங்க இலக்கியம் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கணக்கு). பெரும்பாலும் எல்லா நூல்களும் இவற்றிற்குள்ளேயே அடங்கிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே நூல்கள்,நூலாசிரியர்கள் பதிவு போட்டாயிற்று.தாங்கள் சொன்ன
   (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கணக்கு) போன்றவற்றில் 36
   நூல்கள் மட்டும்தான் அடங்கும்.எனவே கீழ்க்கண்ட இணைப்பில் சென்று
   பிற நூல்கள் அதன் ஆசிரியர்களை தெரிந்து கொள்ளுங்கள்..

   Delete
  2. இணைப்பு இல்லையே?

   Delete
  3. பதிவின் கீழே கொடுத்திருக்கிறேன்..பாருங்கள்..

   Delete
  4. நன்றி.

   முதலில் நான் சொல்ல வந்தது நூல் , நூலாசிரியர் பகுதிக்கு விபரங்களைக் கொடுக்கும் போது அவற்றைச் சின்னச் சின்ன பகுதிகளாக சங்க இலக்கியம், சமய இலக்கியங்கங்கள் (சைவம், வைணவம், இசுலாம், கிறித்துவம்), சிற்றிலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்(உரைநடை, கவிதை)என்று கொடுக்கலாம் என்பதே.

   Delete
  5. முயற்சிக்கிறேன் தோழர்..

   Delete
 4. தொடரட்டும்.!

  ReplyDelete
 5. வணக்கம்

  குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் தொன்னூல் விளக்கம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் இலக்கண விளக்கம் தான் சரியானது எனவும் கூறுகின்றனர் எது சரியானது என தெளிவுபடுத்துங்கள்

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா

  குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் இலக்கண விளக்கம் அல்லது தொன்னூல் விளக்கம் சரியானதை விளக்கமாக கூறவும்

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. இலக்கண விளக்கம் என்பதே சரி.

   Delete
  2. /தாமோதரன்/

   குட்டி தொல்காப்பியம் எது என்பதில் சிறு குழப்பம் நீடிக்கிறது.தொண்ணூல் விளக்கம் மற்றும் இலக்கண விளக்கம் என இரண்டும் குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படுகிறது.எனவே கொடுக்கும் விடைகளை வைத்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்..

   Delete
 7. துண்டு என்று அடைமொழியில் குறிக்கும் நூல் எது

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com