புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி - பண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்

டி.என்.பி.எஸ்.சி - பண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்

         ணக்கம் தோழமைகளே.. குரூப் 4 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் தவிர்த்து பொது அறிவிலும் தமிழ்நாடு,இலக்கியம், தமிழக வரலாறு போன்றவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.அவற்றுள் முக்கியமானவை பண்டைய மன்னர்களும் அவர்களின் புனைபெயர்களும்.இவற்றை தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். 

சேரன் செங்குட்டுவன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
உதியஞ்சேரல் பெருஞ்சோற்றுதியன்
நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன்,ஆதிராஜன்
முதலாம் பராந்தகன் மதுரை கொண்டான்,மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்
இராஜாதித்யன் யானை மேல் துஞ்சிய சோழன்
இரண்டாம் பராந்தகன் சுந்தரச் சோழன்
முதலாம் இராஜராஜன் மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி, இராஜகேசரி
முதலாம் இராஜேந்திரன் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்
முதலாம் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்,
இரண்டாம் குலோத்துங்கன் கிருமி கண்ட சோழன்
மூன்றாம் குலோத்துங்கன் சோழ பாண்டியன்
மாறவர்மன் அவனி சூளாமணி மாறவர்மன், சடய வர்மன்
செழியன் சேந்தன் வானவன்
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாடு கொண்டருளிய
முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பொன்வேய்ந்த பெருமாள்
முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் கொல்லம் கொண்ட பாண்டியன்
நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையானங்கான செருவென்ற
முதலாம் மகேந்திரவர்மன் சித்திரகாரப் புலி,விசித்திர சித்தன், மத்த விலாசன், போத்தரையன், குணபரன், சத்ருமல்லன், புருஷோத்தமன், சேத்தகாரி
முதலாம் நரசிம்மன் வாதாபி கொண்டான்
இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜ சிம்மன், ஆகமப் பிரியன்
மூன்றாம் நந்தி வர்மன் காவிரி நாடன், சுழல் நந்தி, சுழற்சிங்கன், தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன்

         இப்பதிவை தரவிறக்கம் செய்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

7 comments:

  1. நட்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அரிய தகவல்கள் - பயன படும் தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி மதுமதி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. சேமித்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com