வணக்கம் தோழர்களே.. இன்னும் தேர்வுக்கு சொற்ப தினங்களே இருக்கின்றன.அதற்குள் தமிழகம்,இந்தியா,பொது அறிவு என அனைத்து பதிவுகளையும் இடலாம் என்றிருக்கிறேன்.தொடர்ந்து தளத்திற்கு வருகை தந்து வாசித்து பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரையில் நான் தான் நம் தளத்தில் எழுதி வந்தேன்.இப்போது முதன்முறையாக நம் தளத்தின் வாசகரான கன்னியாகுமரியில் வசிக்கும் தோழர் ஐயப்பன் ஒலிம்பிக்போட்டி இதுவரை நடந்த இடங்களின் பட்டியலை தொகுத்து நம் தளத்தில் பதிவிடுமாறு மின் அஞ்சல் வாயிலாக அனுப்பியிருக்கிறார்.அவருக்கு நன்றியை சொல்லிக்கொண்டு கீழே பகிர்கிறேன்.வாசித்து பயன் பெறவும்..உங்ளிடத்திலும் இதுபோல் ஏதேனும் தகவல் இருந்தால் admin@madhumathi.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
ஒலிம்பிக் போட்டி இதுவரை நடந்த இடங்கள் :
வருடம் | இடம் | ஆண்டு | இடம் |
1896 | ஏதென்ஸ், கிரேக்கம் | 1900 | பாரிஸ், பிரான்சு |
1904 | செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா | 1908 | இலண்டன், இங்கிலாந்து |
1912 | ஸ்டாக்ஹோம், சுவீடன் | 1920 | ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் |
1924 | பாரிஸ், பிரான்சு | 1928 | ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து |
1932 | லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா | 1936 | பெர்லின், ஜெர்மனி |
1948 | லண்டன், இங்கிலாந்து | 1952 | ஹெல்சின்கி, பின்லாந்து |
1956 | மெல்போர்ன், ஆஸ்திரேலியா | 1960 | ரோம், இத்தாலி |
1964 | டோக்கியோ, ஜப்பான் | 1968 | மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ |
1972 | ம்யூனிச், ஜெர்மனி | 1976 | மாண்ட்ரீல், கனடா |
1980 | மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் | 1984 | லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
1988 | சியோல், தென் கொரியா | 1992 | பார்சிலோனா, எசுப்பானியா |
1996 | அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா | 2000 | சிட்னி, ஆஸ்திரேலியா |
2004 | ஏதென்ஸ், கிரேக்கம் | 2008 | பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு |
2012 | இலண்டன், ஐக்கிய இராச்சியம் | 2016 | ரியோ டி ஜனேரோ, பிரேசில் |
குறிப்பு - உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
ஐயப்பன் கு
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
நல்லதொரு தொகுப்பு...
ReplyDeleteமிக்க நன்றி...
நல்ல செயல்.
ReplyDeleteதொடருங்கள்.
மூணு இடங்கள் தான் எனக்குத் தெரியும். அதாவது 2000மாவது வருடத்திலிருந்து.
ReplyDelete1896லருந்து குடுத்துருக்கீங்க. ரொம்பவே நன்றிங்க.