புது வரவு :
Home » » உயிரைத் தின்று பசியாறு-அத்தியாயம்-2

உயிரைத் தின்று பசியாறு-அத்தியாயம்-2

                          உயிரைத்தின்று பசியாறு 
                                             மதுமதி
                                                  (க்ரைம்..க்ரைம்..க்ரைம்)

முதல் அத்தியாயம் வாசிக்காதவர்கள் அத்தியாயம்-1 இங்கு சென்று வாசிக்கவும்..

                                                    

                                        அத்தியாயம்-2
                ணி இரவு எட்டு..
               கும்மென்று இருட்டு..அந்த இருட்டை கிழித்துக் கொண்டு வந்த அந்த ஆட்டோ 'காக்கும் கரங்கள்' ஆதரவற்றோர் இல்லத்தின் முன்னால் வந்து நிற்க ,அதிலிருந்து இறங்கினாள் ஸ்ருதி..
                 பர்ஸைத் திறந்து ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு விடுதிக்குள் நுழைந்தாள்..இடது புற மணிக்கட்டைத் தூக்கி மணிபார்த்தாள்..
எட்டு பத்தாகியிருந்தது..முகப்பில் ஒரு டியூப் லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது..கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்..

                அரை ஏக்கர் நிலப்பரப்பிலிருந்தது இல்லம்..நான்கு பெரிய குடில்கள்..
நான்கிலும் கூரை தான் வேயப்பட்டிருந்தது..நாலாபுறமும் நன்கொடைகளைப் பெற்று தனி மனுஷியாய் நின்று இந்த இல்லத்தை நடத்தி வருபவர்தான் மதர் மரியா..
                உள்ளே நுழைந்த ஸ்ருதி இடது புறமிருக்கும் மதர் மரியாவின் அலுவலகத்தைப் பார்த்தாள்..விளக்கு எரிந்து கொண்டிருந்தது..அறையை நோக்கிப் போனாள்.பைபிளை புரட்டிக்கொண்டிருந்த மரியாவைப் பார்த்து,
"வணக்கம் மதர்"
                என்றபடி அறைக்குள் நுழைய, நிமிர்ந்த மரியா முகத்தில் ஒரு புன்னகையை உற்பத்தி செய்துகொண்டே,
"வாம்மா ஸ்ருதி..என்னம்மா இந்த நேரத்துல வந்திருக்கே... வெளிச்சத்திலேயே வரவேண்டியதுதானே.."

"இல்ல மதர் இப்பதான் வேலை முடிஞ்சது..நாளைக்கும் ஃப்ரீ இல்ல அதான் இப்ப வந்தேன்"

"வா இப்படி உட்கார்"
                இருக்கையைக் காட்டிய மதர் மரியாவுக்கு அறுபது வயது இருக்கும்.
இந்திராகாந்தியை ஞாபகப்படுத்தும் நீளமான நாசியில் மூக்கு கண்ணாடி கச்சிதமாய் பொருந்தியிருந்தது..சிவப்பான முகத்தில் வெள்ளையாய் சிரித்தார்..கேட்டார்..

 "நேத்தே உன்னை எதிர்பார்த்தேன்"
"நேத்து கொஞ்சம் உடம்பு முடியலை மதர்..அதான் வரமுடியலை"
                என்று சொல்லிக் கொண்டே மதர் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்..
"ஏம்மா உடம்புக்கு என்னாச்சு?"
               தனது நெற்றியை சுருக்கியபடி கேட்டுக் கொண்டே கையிலிருந்த பைபிளை மூடி மேசைமீது வைத்துவிட்டு ஸ்ருதியின் கன்னத்தை தொட்டுப் பார்த்தாள்.
"என்னம்மா உடம்பு இன்னும் சூடாயிருக்கு ஜூரமா?மழையில நனஞ்சியா?"
                என்று அக்கறையோடு கேட்டபடி செல்லமாய் முறைத்த மரியாவைப் பார்த்து புன்னகைத்த ஸ்ருதி,
"ஆமாம் மதர்..ரெண்டு நாளைக்கு முன்னாடி மழையில நனைஞ்சிட்டேன்..
அதனால லேசான ஜுரம்..இப்ப ஓரளவு பரவாயில்லை மதர்"
               சொல்லிக் கொண்டே எழுந்த ஸ்ருதி ,தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்து மரியாவிடம் கொடுத்துவிட்டு,
"மதர் இதுல பத்தாயிரம் ரூபா இருக்கு.'லட்சுமி அன் கோ' ஐயாயிரம்,சௌம்யா டெக்ஸ்டைல் ஐயாயிரம் கொடுத்திருக்காங்க.அதுமட்டுமில்லாம 'சிராஜ் அட்வர்டைஸிங் கம்பெனி' பத்தாயிரத்துக்கான செக் கொடுத்திருக்காங்க..செக் இதுலயே இருக்கு மதர்"
              என்று சொல்லி சின்னதாய் புன்னகைக்க பணத்தையும் செக்கையும் வாங்கிக்கொண்ட மதர் மரியா,காற்றில் ஒரு சிலுவையை கிழித்து கர்த்தருக்கு நன்றி சொல்லிவிட்டு ஸ்ருதியின் கைகளைப் பற்றிக் கொண்டார்..
"ஸ்ருதி..உன்ன மாதிரி ஆட்கள் உதவி பண்றதாலதான் இந்த விடுதியில இருக்கிற இருநூறு குழந்தைகளும் மூணு வேளை சாப்பாடு ஒழுங்கா சாப்பிடுறாங்கம்மா.. மழை வந்தா ஒழுகிற இந்த ஓலைக் கொட்டகையை பிரிச்சுட்டு ஓடு போட வழியில்லாம திணறிட்டு இருக்கிற நேரம் பார்த்து இவ்வளவு பணத்தை நன்கொடையா வசூல் பண்ணி கொடுத்திருக்கே.. உன்னை எப்பவும் அந்த கடவுள் கைவிடமாட்டாரும்மா"
           
             கலங்கிய கண்களை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார் மரியா.
"ஐய்யய்யோ மதர்.. அப்படியெல்லாம் நான் ஏதும் பெரிசா செஞ்சிடுல.. இனிமே தான் செய்யனும்"

"என்னம்மா இப்படி சொல்லிட்டே..நீ இதுவரைக்கும் செஞ்சுட்டு வர்ற உதவியே பெரிய உதவிதாம்மா"

             மரியா சொல்ல பதிலுக்கு வார்த்தைகளை பயன்படுத்தாமல்
புன்னகையை மட்டும் பயன்படுத்தினாள்..
"சரிம்மா..நீ சாப்பிட்டியா"
"வர்ற வழியில ஹோட்டல்ல சாப்பிட்டேன் மதர்..நீங்க இன்னும் சாப்பிடலையா?''
"இன்னும் இல்லம்மா..இப்பத்தான் குழந்தைங்க தூங்கப் போனாங்க..மேரி டிபன் எடுத்து வச்சுட்டு போயிருக்கா..இனிமேதான் சாப்பிடனும்"
"சரி மதர் நீங்க முதல்ல சாப்பிடுங்க..வாங்க"

"இல்லம்மா நான் சாப்பிட்டுக்கிறேன்..நீ கிளம்பு டைம் ஆச்சு"

'' நீங்க சாப்பிட்டதும் நான் கிளம்பிடுறேன் மதர்"
               என்று ஸ்ருதி சொன்னதும் ,தலையாட்டிய மதர் அலுவலக கதவை மூடிவிட்டு அவரது அறையை நோக்கி நடக்க ஸ்ருதி பின் தொடர்ந்தாள்..
அங்கிருந்து ஐம்பதடி தொலைவில் மரியாவின் அறை.. சுற்றிலும் ஒரே இருட்டு..வெளிச்சப் பற்றாக்குறை..

"இருட்டா இருக்கும் பாத்து வாம்மா..இதோ இந்த கம்பத்துல இருந்த பல்பு பீஸ் போயிடுச்சுன்னு எலெக்ட்ரீசியன் கழட்டினான்.. இன்னும் மாட்டலை..நாளைக்கு மாட்டிடுவேன்னு சொல்லியிருக்கான்.. அதான் குழந்தைங்கள கூட இன்னைக்கு விளையாட விடல"

"ஏன் மதர் கேட்ல வாட்ச்மேன் ஒருத்தர போடலாமே"


"போடலாம் தான்..ஆனா அவனுக்கு சம்பளம் குடுக்கணும்..குழந்தைங்கள பாத்துக்க மேரி இருக்கா ஹனி இருக்கா நாலு ஆயா இருக்காங்க இது போதாதா''

              சொன்ன மரியா அறையை அடைந்து கதவைத் திறந்தாள்..

              இங்கு ஸ்ருதியைப் பற்றி சொல்லியாகவேண்டும்.. இருபத்தி ஐந்து வயதை போன மாதம்தான் நிறைவு செய்திருந்தாள்..பள்ளிப் பருவத்திலேயே அப்பா அம்மாவை இழந்தவள்..கல்லூரி பருவத்தில் தன் அக்காவை இழந்தவள்.
திறமையும் தைரியமும் நிரம்பப் பெற்றவள்.சந்தன நிறத்துக்கு சொந்தக்காரி.
துறுதுறுப்பாய் உருண்டு கொண்டிருக்கும் கரிய பெரிய கண்கள் .மை தீட்ட தேவைப்படாத, தானாக வளைந்த அழகான புருவங்கள் என இயற்கை அழகிலேயே ஜொலிப்பவள்.. நிறத்துக்கு இன்றைய நடிகை த்ரிஷாவை ஒப்பிட்டால் முகவெட்டிற்கு அன்றைய நடிகை சரிதாவை ஒப்பிடலாம்.அழகு நிலையத்தை எட்டிக்கூட பார்க்காதவள்..அப்படி அழகு நிலையம் சென்றால்,
'ஒரு அழகு நிலையமே அழகு நிலையம் செல்கிறதே..ஆச்சர்யக்குறி'என்று பார்த்திபன் ஸ்டைலில் கவிதை எழுதலாம்.
              இளம்வயதில் பெற்ற அனாதைப் பட்டம்தான் அவளை அவ்வப்போது அழ வைத்து வேடிக்கை பார்க்கிறது..சொந்தங்கள் இருந்தாலும் அவர்களது உதவியை எதிர்பாராமல் அடையாறில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில்தான் தங்கி இருக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல உத்தியோகம்.. தானும் அனாதை என்பதால் என்னவோ தன்னால் முடிநதவரை இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடை பெற்றுத் தருவதை தொண்டாக செய்து வருகிறாள்..
             ஒதுக்குப் புறமாயிருந்த மரியாவின் அறைக்குள் இருவரும் நுழைந்தனர்..

ஸ்ருதி டியூப் லைட்டை எரிய விட்டாள்..அது கண்ணை சிமிட்டிக் கொண்டேயிருந்தது..

"அது அப்படிதாம்மா எரியும் ஒரு நிமிசத்துல சரியாயிடும்..லோ வோல்டேஜ்"
"மதர் நீங்க உட்காருங்க நான் டிபன் எடுத்துத்துட்டு வரேன்'
            சொன்ன ஸ்ருதி உள் அறையை நோக்கி செல்ல முற்பட,
"ஏம்மா ஸ்ருதி ஒரு நிமிசம் இப்படி வா"

            என்று சொன்ன மரியா தனது மூக்கு கண்ணாடியைக் கழற்றி ஓரமாய் வைத்துவிட்டு அருகில் வந்து நின்ற ஸ்ருதியைப் பார்த்தார்..
"சொல்லுங்க மதர்"
"ஏம்மா உனக்கு வயசாகிட்டே போகுதே..கல்யாணம் பன்ணிக்கனும்ன்னு எண்ணமே இல்லையா?''
"அப்படி ஒரு எண்ணம் கொஞ்ச நாளைக்கு முன்னால இருந்துச்சு மதர்"
"இப்ப அந்த எண்ணம் இல்லைன்னு சொல்ல வர்றீயா"
             இடைமறித்த மரியாவைப் பார்த்து புன்னகைத்த ஸ்ருதி,
"அப்படியில்ல மதர்.எனக்கேத்த ஒருவர் கிடைச்சாருன்னா கல்யாணம் சாத்தியம்..அப்படி கிடைக்காத பட்சத்துல நானும் உங்களோடயே இந்த விடுதியில் வந்து தங்கி சேவை செய்யலாம்ன்னு இருக்கேன் மதர்"
"ஐய்யய்யோ..உனக்கு தகுந்த துணையை கடவுள் கூடிய சீக்கிரத்துல காட்டுவார்..எதுக்கும் பயப்படாதே"

            மரியா சொல்லி முடிக்க கண்சிமிட்டிக் கொண்டிருந்த டியூப் லைட் பளிச்சென எரிந்தது..

"பாத்தியா சொன்னவுடனே லைட் எரியுது"
            இருவரும் சிரித்தனர்..

"நீ எவ்வளவு நாளைக்குத்தான் தனியா இருப்பே..உனக்கு பாதுகாப்புன்னு ஒண்ணு வேணுமில்லையா..எங்க போனாலும் தனியா போற வர்ற..அதை நெனச்சாத்தான் பயமாயிருக்கு..பாரு மணி ஒன்பது ஆகப்போகுது..
கொஞ்சங்கூட பயமில்லாம இங்க வந்திருக்கே..இப்பவே கிளம்பினாத்தான் பத்து மணிக்கு நீ ஹாஸ்டல் போய் சேரமுடியும்..உன்ன நெனச்சா பயமா இருக்குமா''

''எதுக்கு மதர் பயப்படனும்..என்னை யாரும் ஒண்ணும் பண்ணிடமாட்டாங்க.
நான் நடந்தா போகப்போறேன்..ஆட்டோலதானே போறேன்"

"என்னம்மா ஒரு வயசுப் பொண்ணு பேசறமாதிரியா பேசற."

"......................................"

"நாடு கெட்டு கெடக்குதும்மா..தயவு செய்து இருட்ட ஆரம்பிச்சதுமே நீ ஹாஸ்டல் போயிடு லேட் நைட் எங்கேயும் போகதே சரியா..நைட் டைம்ல நீ இங்க வர்றதே இதுதான் கடைசியா இருக்கனும் சரியா"

"என்ன மதர் இப்படி பயப்படுறீங்க"

"ஆமாம்மா நீ தனியா இருக்குற பொண்ணு ..நீ எங்க போற வர்றன்னு யாராவது உன்னை வாட்ச் பண்லாம் இல்லையா?காலம் கெட்டுக் கெடக்குதும்மா''

            எதுவும் பேசாமல் நின்ற ஸ்ருதியைப் ஒருமுறை பார்த்துவிட்டு,
"ஸ்ருதி நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே"

            என்று மரியா கேட்க நெற்றியை சுருக்கிய ஸ்ருதி,
"இல்ல மதர்..கேளுங்க.."என்றாள்.
"நீ யாரையாவது காதலிக்கிறியாம்மா?அப்படி இருந்தா மறைக்காம என்கிட்ட சொல்லு"
"அப்படியெல்லாம் ஒண்ணு இல்ல மதர்"

             யோசிக்காமல் சொன்ன ஸ்ருதியைப் பார்த்து சிரித்துவிட்டு,
"இல்லம்மா உன்னோட நடவடிக்கைகளப் பாக்கும்போது எனக்கு அப்படியொரு சந்தேகம் வருது"
"அப்படியேதும் இருந்தா உங்ககிட்ட சொல்லாம இருப்பேனா மதர்..இருங்க மதர் டிபன் எடுத்துட்டு வந்திடுறேன்.நீங்க மொதல்ல சாப்பிடுங்க"

"ஆமாம்மா..மொதல்ல சாப்பிடுறேன்..எப்ப கரெண்ட் கட் ஆகும்ன்னே சொல்ல முடியாது"
           மரியா சொல்ல சிரித்துக் கொண்டே உள்ளேபோன ஸ்ருதி மின்விளக்கை எரியவிட்டாள்..அது கண்ணடிக்க ஆரம்பித்தது..அந்த வெளிச்சத்திலேயே பாத்திரத்திலிருந்த இட்லியை தட்டில் போட்டு சாம்பாரை ஊற்றி எடுத்து வந்து மதரிடம் கொடுத்தாள்..
"உனக்கு எதுக்கும்மா சிரமம்.. எடுத்திட்டு வந்தா போதாதா ..நான் போட்டுக்கமாட்டேனா"
''சிரமமெல்லாம் ஒண்ணுமில்ல மதர்"

"உள் ரூம்லயும் லோ வோல்டேஜா..கரெண்ட் கட்டாகுது இல்லைன்னா லோ வோல்டேஜ் நைட்டானா பெரிய தொந்தரவு"

                மரியா புலம்பி முடிக்க,
''ஸாரி மதர் தண்ணி வைக்க மறந்திட்டேன்..இதோ எடுத்துட்டு வந்துடுறேன்"
                 என்று சொன்னவள் உள் அறையை நோக்கி மீண்டும் போனாள்.
"சாம்பார் பத்தாது போல இருக்கும்மா அப்படியே கொஞ்சம் எடுத்துட்டு வந்திடுறியா."
 " சரி மதர் "
               மதர் மரியா சின்னதாய் ஜெபம் செய்துவிட்டு சாப்பிட எத்தனிக்க,
"மத..ர்......."
              உள் அறையிலிருந்து கலவரமாய்க் கத்தினாள் ஸ்ருதி..
 அடுத்த நொடி..
           பட்டென்று கரெண்ட் கட்டாக காக்கும் கரங்கள் இல்லம் முழுவதும் இருளில் மூழ்கியது.. 
---------------------------------------------------------------------(இருள் தொடரும்)
                                                   
மூன்றாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும்.
                                                             ----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த அத்தியாயத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

25 comments:

 1. உள்ளறையில என்னத்தைப் பார்த்தாளோ... திகில் கிளப்பறீங்களே... தொடருங்கள். காத்திருக்கேன்...

  ReplyDelete
 2. சுருதியின்றி அலறலாய் ஸ்ருதி அலறுகையில் நானும்
  கூட சேர்ந்து அலறித்தான் போனேன்...
  ம்ம்
  தொடர்கிறேன்.. எதைப் பார்த்து அலறினாள் என்று
  தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்...

  ReplyDelete
 3. நேற்று சென்னது போலவே இன்று இரண்டாம் பாகத்தை பதிவு செய்துளீர்..அருமை நண்பரே...

  ReplyDelete
 4. இருள் தொடரும் வரை நான் இருட்டில் இருப்பேன் .

  ReplyDelete
 5. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
  தொடர்கிறேன் ...

  தொடர்கிறீர்களா மகிழ்ச்சி..

  ReplyDelete
 6. கணேஷ் கூறியது...
  உள்ளறையில என்னத்தைப் பார்த்தாளோ... திகில் கிளப்பறீங்களே... தொடருங்கள். காத்திருக்கேன்...

  என்னத்தைப் பார்த்தாள் என்று 4வது அத்தியாயத்தில் சொல்லிவிடுகிறேன்..
  நன்றி..

  ReplyDelete
 7. மகேந்திரன் கூறியது...
  சுருதியின்றி அலறலாய் ஸ்ருதி அலறுகையில் நானும்
  கூட சேர்ந்து அலறித்தான் போனேன்...
  ம்ம்
  தொடர்கிறேன்.. எதைப் பார்த்து அலறினாள் என்று
  தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்...

  ஆர்வமாய் உள்ளீரா தோழர் மகிழ்ச்சி..

  ReplyDelete
 8. சேகர் கூறியது...
  நேற்று சென்னது போலவே இன்று இரண்டாம் பாகத்தை பதிவு செய்துளீர்..அருமை நண்பரே...

  ஆமாம் தோழர்..ஞாயிறுதோறும் க்ரைம் என்று சொல்லியிருந்தேன்..அதன்படி இந்த பதிவு.தொடர்வதற்கு நன்றி..

  ReplyDelete
 9. sasikala கூறியது...
  இருள் தொடரும் வரை நான் இருட்டில் இருப்பேன் .

  கத்திருக்கிறீர்களா..மகிழ்ச்சி சகோ..

  ReplyDelete
 10. மிகவும் அருமையாகபெ போகிறது
  அடுத்த பகுதி எப்போது ?

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. பர்ஸ்ட் பார் படிச்சுட்டு செகண்ட்ல ஜாயின் பண்ணிட்டேன் பாஸ்...!

  ஆமா.. இப்டி ஸ்ருதிய கத்த விட்டுட்டு கரண்ட்டையும் ஆஃப் பண்ணிட்டா எப்டி...?

  வெயிட்டிங்..!

  ReplyDelete
 12. புலவர் சா இராமாநுசம் கூறியது...
  மிகவும் அருமையாகபெ போகிறது
  அடுத்த பகுதி எப்போது ?

  புலவர் சா இராமாநுசம்..

  மகிழ்ச்சி ஐயா..அடுத்த அத்தியாயம் வரும் ஞாயிறு ஐயா..நன்றி..

  ReplyDelete
 13. dheva கூறியது...
  பர்ஸ்ட் பார் படிச்சுட்டு செகண்ட்ல ஜாயின் பண்ணிட்டேன் பாஸ்...!

  ஆமா.. இப்டி ஸ்ருதிய கத்த விட்டுட்டு கரண்ட்டையும் ஆஃப் பண்ணிட்டா எப்டி...?

  வெயிட்டிங்..!

  அப்படியா தோழர்..மகிழ்ச்சி..காத்திருப்புக்கு நன்றி..

  ReplyDelete
 14. பயம் பயம்...இருட்டைக் கண்டால் பயம்.தனிய இருக்கப் பயம்.பெரிசா சத்தம் கேட்டால் பயம்.கதிர்காமக் கந்தா பயமாத்தான் கிடக்கு.எண்டாலும் அடுத்த பதிவுக்காய் காத்துக்கிடக்கிறன் !

  ReplyDelete
 15. Sema Thrilling....! Kalakkal. Shruthikku enna acho?

  ReplyDelete
 16. ஹேமா கூறியது...
  பயம் பயம்...இருட்டைக் கண்டால் பயம்.தனிய இருக்கப் பயம்.பெரிசா சத்தம் கேட்டால் பயம்.கதிர்காமக் கந்தா பயமாத்தான் கிடக்கு.எண்டாலும் அடுத்த பதிவுக்காய் காத்துக்கிடக்கிறன் !

  கதிர்காமக் கந்தனை அழைச்சிட்டீங்களா..மகிழ்ச்சி.காத்திருங்கள்..நன்றி..

  ReplyDelete
 17. துரைடேனியல் கூறியது...
  Sema Thrilling....! Kalakkal. Shruthikku enna acho?

  த்ரில்லா இருந்ததா..மகிழ்ச்சி தோழர்..

  ReplyDelete
 18. நான் இப்போதுதான் இரண்டாம் அத்தியாயமே படிக்க முடிந்தது.சரி,மூன்றாவது ஞாயிறு ஏன் க்ரைம் வரவில்லை?

  ReplyDelete
  Replies
  1. அப்படியா தோழர்..பரவாயில்லை..நேரமிருப்பின் வாசியுங்கள்.பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்றதால் பதிவிட முடியவில்லை..

   Delete
 19. நண்பரே, முதல் பாகம் வாசிக்க வில்லை...
  இனி தொடர்கிறேன்.....

  ReplyDelete
 20. முதல் அத்தியாயம் வாசித்து விட்டேன்...

  இதிலும் திருப்பம் அருமை....

  ஆக இரண்டு அதியாத்திலும் சேர்த்து இரண்டு திருப்பங்கள்....

  எங்கு இவைகளின் முடிச்சு அவிழ போகுதோ? வெயிட்டிங்.....

  ReplyDelete
 21. மகிழ்ச்சி தோழர்..இரண்டு அத்தியாயங்களும் வாசித்துவிட்டீர்களா..கட்டாயம் அத்தியாயத்திற்கு அத்தியாயம் திருப்பங்கள் தொடரும்.உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி..

  ReplyDelete
 22. வெகுநாட்கள் கழித்து இன்றுதான் இங்கு வர முடிந்தது. இப்போ இரண்டாம் அத்தியாயமும் படித்தாயிற்று.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com