ஈரோட்டு சூரியன்
வணக்கம் தோழர்..இந்த பக்கத்தைத் தேடி வந்த உங்களை அன்போடு வரவேற்கிறேன்..நானும் ஐயா அவதரித்த ஈரோட்டில் பிறந்ததால் என்னவோ ஐயாவின் கொள்கைகளின் மீதும் அவர் மீதும் ஈடுபாடு அதிகம்..நான் பயின்ற சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளி ஐயா வீட்டின் அருகாமையில் இருந்ததால் மாணவப் பருவத்திலேயே ஐயாவைப் பற்றிய அனைத்தையும் தெரிந்துகொள்ள முடிந்தது..எனக்கு ஒரு வருத்தம் மனிதனுக்கு அறிவும் மானமும் முக்கியம் என்று உணர்த்தி அறியாமை இருளில் இருந்த தமிழனை மீட்டெடுத்த இந்த திராவிட தீபத்தின் வெளிச்சம் உலகெங்கும் அதிக அளவில் பரவாததுதான்..கடவுள் மறுப்பு கொள்கையை அவர் கடைப் பிடித்த காரணத்தால் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஐயா மீது ஆர்வம் காட்டவில்லை..ஆதலால் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டுகள் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு தெரியாமற்போய்விட்டது.எதற்காக கடவுள் இல்லையென்ற நிலைப்பாட்டிற்கு வந்தார் என்று தெரிந்தால் ஆன்மீகவாதிகளுக்கும் நிச்சயம் ஐயாவைப் பிடிக்கும்.தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் ஐயாவின் வாழ்க்கை வரலாறை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்..அதற்காகவே ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் படிக்க எளிதாக இருக்கும் வண்ணம் ''ஈரோட்டு சூரியன்" என்ற தலைப்பிலே கவிதை நடையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.வாசியுங்கள்..கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி (17.09.1879-24.12.1973) |
அத்தியாயங்கள் |
அம்மையும் அப்பனும் |
திராவிட தீபம் தோன்றியது |
அன்பின் மதுமதி - நல்லதொரு துவக்கம் - ஈரோட்டுச் சூரியனைப் பற்றிய தொடர் நன்று. தொடர்க - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா..
Deleteஉங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு. அவரது நாத்திக வாதம், பிராமண எதிர்ப்பு – இவைகளை மட்டுமே பெரியாரின் பிம்பமாக காட்டிவிட்டு, அவர் சொன்ன, செய்த மற்றைய சீர்திருத்தங்களை, சமூக சேவைகளை சொல்லாமல், செய்யாமல் விட்டு விட்டனர்.
ReplyDeleteஆமாம் ஐயா அதுவே உண்மை..
Delete