புது வரவு :
Home » » திராவிட தீபம் தோன்றியது

திராவிட தீபம் தோன்றியது

ஈரோட்டு சூரியன்


முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இந்த சுட்டியில் செல்லவும்


அம்மையும் அப்பனும்


திராவிட தீபம் தோன்றியது


தவமிருந்து
பெற்ற குழந்தைக்கு
கிருஷ்ணசாமி 
என்று பெயரிட்டனர்..
பெயரிட்ட குழந்தைக்கு
உயிரிட்டது
இறைவன் என்றனர்;
அவன் வழி நின்றனர்;

பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கியும் தங்கை கண்ணம்மாளும்

இரண்டாண்டு
இடைவெளியில்
சின்னத்தாயம்மை
மீண்டும் கருவுற
இன்பம் இரட்டிப்பானது..

அவர்களுக்குத் தெரியாது..
கருவில் வளர்வது
சிசுவல்ல-அது
பகுத்தறிவு பசு என்று..

பாரெல்லாம்
பகுத்தறிவு பாலை
புகட்டப் போகிறது என்று
அன்றறியவில்லை அவர்கள்.

பகுத்தறிவு பழமாக பெரியார்

தீண்டாமையைத்
தின்ன வந்த 
திமிங்கலம் அது..

மூடநம்பிக்கையின்
முதுகெலும்பை
உடைக்க வந்த
சுத்தியல் அது..

திராவிடம்
என்ற வார்த்தைக்கு
விளக்கம் 
சொல்ல வந்த
அகராதி அது..

விதவைகளின்
இருண்டு போன
இல்லறத்தை
வெளிச்சமாக்க வந்த
நெருப்பு அது..

ஆரியர்களின்
அடக்குமுறைகளை
அடக்க வந்த
முரட்டுக் காளை அது..

சாதிச் சண்டையில்
காயம் பட்டவர்களுக்கான
முதலுதவி பெட்டி அது..

சாதி மதங்களை
கொன்று புதைக்க வந்த
கோடரி அது..

பாசிச 
பார்ப்பனர்களின்
குடுமியை
அறுக்க வந்த
அரிவாள் அது..

ஆமாம்..
செப்டம்பர் 17 1879
இந்த நாளில்தான்
ஈரோட்டிலே
இன்னுமொரு சாக்ரடீசை
ஈன்றெடுத்தார் சின்னத்தாயம்மை..

பெரியார் பிறந்த வீடு
ஈரோடு..

இராமனையே
விமர்சிக்கப் போகிற
அந்த வித்தகனுக்கு
இராமன் என்றே
பெயர் சூட்டினர்;
இறை பக்தியை
மெதுவாய் ஊட்டினர்;

ஆமாம்..
அந்த இராமன் தான்
அர்த்தமற்ற
சம்பிரதாயங்களை
சமாதியாக்க வந்த
சாமானியன்..

ஆமாம்..
அந்த இராமன் தான்
திராவிடன்
இழந்திருந்த
மானத்தையும்
மரியாதையையும்
மீட்டெடுக்க போராடிய
போராளி..
-------------------------------,
(ஈரோட்டு சூரியன் உதிக்கும்)
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

27 comments:

  1. ஈரோட்டுப் பகலவன் இராமசாமி சிசுவாய் உங்கள் கவிதையில் உதித்திருக்கிறார். இளமைப் பருவ படத்தைப் போடாமல் பகுத்தறிவுப் பழத்தின் போட்டோ வைத்துள்ளீரே கவிஞரே... கவிதை நடையில் பெரியாரின் சரிதம் படிக்க நன்றாக உள்ளது. சூப்பர்ப். தொடருங்கள்...

    ReplyDelete
  2. முதலாவதாக வந்து வாசித்து வாக்களித்து கருத்துரைத்தமைக்கு நன்றி ஐயா..இளமைப் பருவ படங்கள் தான் இருக்கின்றன..அந்த பருவத்தில் பதிகிறேன்..குழந்தைப் பருவ படங்கள் கிடைக்க வில்லை..ஆதலால் பகுத்தறிவு பழத்தின் படத்தையே பிறப்புக்கும் பயன்படுத்திவிட்டேன்..

    ReplyDelete
  3. கமெண்ட்ஸ் கூட ஈரோட்டுக்காரங்களுதா வருதே?

    ReplyDelete
  4. ஈரோட்டு சூரியனின் வாழ்க்கை வரலாறை, இதைவிட எளிய நடையில் எடுத்துச்சொல்ல யாராலும் இயலாது என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நல்ல பதிவு தந்தை பெரியாரை பற்றிய புதிய செய்திகளை தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  6. பகுத்தறிவு தந்தை, பிறப்பு கவிதை வரியில்...தொடரட்டும்

    ReplyDelete
  7. ஈரோட்டு சூரியனுக்கு மறைவு கிடையாது..

    ReplyDelete
  8. " பாசிச
    பார்ப்பனர்களின்
    குடுமியை
    அறுக்க வந்த
    அரிவாள் அது..."

    ஒப்புமைகள் வெகு அழகு.
    சாலப் பொருத்தம்.

    ReplyDelete
  9. கவிதை நடையில் பெரியாரின் வரலாறை படிப்பது புதிய அனுபவம்.

    ReplyDelete
  10. Theriyatha Unmaigal. Azhagana padaippu. Thodarkiren.

    TM 8.

    ReplyDelete
  11. ஒரு வகையில் நானும் ஈரோடுகாரன் என்பதில் பெருமை கொள்கிறேன்....

    ReplyDelete
  12. பகுத்தறிவுப் பகலவன்
    ஈரோட்டு வேந்தன்
    பற்றிய கவிதை மிகவும் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
    அருமை...அருமை...

    நன்றி..

    ReplyDelete
  14. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    கமெண்ட்ஸ் கூட ஈரோட்டுக்காரங்களுதா வருதே?

    அப்படியா..

    ReplyDelete
  15. வே.நடனசபாபதி கூறியது...
    ஈரோட்டு சூரியனின் வாழ்க்கை வரலாறை, இதைவிட எளிய நடையில் எடுத்துச்சொல்ல யாராலும் இயலாது என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்!

    மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி..
    /கோவிந்தராஜ்/மனசாட்சி/

    ReplyDelete
  17. /கோவி/மாசிலா/

    நன்றி..

    ReplyDelete
  18. ஸ்ரவாணி கூறியது...
    " பாசிச
    பார்ப்பனர்களின்
    குடுமியை
    அறுக்க வந்த
    அரிவாள் அது..."

    ஒப்புமைகள் வெகு அழகு.
    சாலப் பொருத்தம்.

    நன்றி சகோ..

    ReplyDelete
  19. ரஹீம் கஸாலி கூறியது...
    கவிதை நடையில் பெரியாரின் வரலாறை படிப்பது புதிய அனுபவம்.

    11 ஜனவரி, 2012 6:15 பிற்பகல்


    Rathnavel கூறியது...
    அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  20. துரைடேனியல் கூறியது...
    Theriyatha Unmaigal. Azhagana padaippu. Thodarkiren.

    TM 8.

    11 ஜனவரி, 2012 7:15 பிற்பகல்


    சேகர் கூறியது...
    ஒரு வகையில் நானும் ஈரோடுகாரன் என்பதில் பெருமை கொள்கிறேன்....

    11 ஜனவரி, 2012 7:35 பிற்பகல்


    புலவர் சா இராமாநுசம் கூறியது...
    பகுத்தறிவுப் பகலவன்
    ஈரோட்டு வேந்தன்
    பற்றிய கவிதை மிகவும் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  21. புத்தகமாய்ப் படித்தது, இங்கு கவிதைநடையில் கச்சிதமாய் இனிக்கிறது. பெரியாரின் மனிதாபிமானக் கருத்துக்கள் பெருவாரியான மக்களைச் சென்றடையாதது பெரும் வருத்ததுக்குரிய செய்தி. சொன்னவிதத்தில் பலருக்கும் அவர்பால் அதிருப்தி உண்டாகியிருக்கலாம். ஆனால் அது காலத்தின் கட்டாயம். பழமையில் ஊறிய மனங்களின் மத்தியில் அவரது கருத்துக்கள் அறைந்து சொல்லப்பட்டிருக்காவிடில் இந்த அளவு விழிப்புணர்வு உண்டாகியிருக்குமா என்பதும் கேள்விக்குறியே.. தங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டி வரவேற்கிறேன்.

    ReplyDelete
  22. படித்துக்கொண்டே இருக்கிறேன்...

    ReplyDelete
  23. அன்பின் மதுமதி - ஈரோட்டுப் பகலவன் தந்தை பெரியாரினைப் பற்றிய தொடர் துவல்லமே அருமை. பிறப்பினைப் பற்றிய கவிதையும் படங்களும் மிக மிக அழகு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com