தெரிந்த விசயங்களை விட
தெரியாத விசயங்களை
தெரிந்து கொள்ளவே
எண்ண அலைகள்
ஆர்ப்பரிக்கிறது..
எதற்கென்று
தெரியாத போது
இருந்த ஆர்வம்
அதற்கென தெரிந்ததும்
அடக்கமாகி விடுகிறது..
தெரியாதவற்றை
தேடித் திரியும் போது
தெரிந்து கொள்ள
தேவையில்லாதவற்றையும்
தெரிந்து கொள்ள முடிகிறது..
தெரியாதவைகளை
தெரிந்து கொள்ளும்போது
தெரிந்தவைகளில் சில
தெரியாமல் போகிறது..
தெரியாதவை
எவையென
தெரிந்து கொள்ளவே
தெரியாமற் போகிறது..
தெரியாதவை
எது எனக் கேட்டால்
தெரியவில்லை..
அவைதான்
தெரியாதவை ஆயிற்றே..
...................................................
அருமையாக இருந்தது சார்.
ReplyDeleteஎனக்கு எதுவும் தெரியவில்லை. சற்று ஆழ்ந்து யோசித்து விட்டுச் சொல்கிறேன் கவிஞரே....
ReplyDeletetherindha vatraiyum theriyada vatraiyum patri therindho theriyamalo thelivaga kooriulleer...arumai
ReplyDeleteஐயா தமிழ் புலவரே...
ReplyDeleteதலை சுத்துது...மீண்டும் ஸ்டடியா.... வாரேன்
தெரிந்தது தெரியாதது குறித்து
ReplyDeleteதெரியாதவர்களும் மிக அழகாகத் தெரிந்து கொள்ளும்படியாக
தாங்கள் வடித்துள்ள பதிவுஅருமை
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
Tha.ma 2
ReplyDeleteகண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
ReplyDeleteகற்பனை தீர்ந்துவிடும்....
கண்ணில் தோன்றா காட்சியில் தான்
கற்பனை நீண்டு வரும்...
-- ஒரு திரை இசை..-
அருமை!
ReplyDeleteமிக கலக்கல் அன்பரே ..
ReplyDeleteதெரியாடஹ்வைகள் மீது எப்பவுமே ஒரு ஈர்ர்ப்பு அதிகமாத்தான் உள்ளது ..
தெரியாதவைகளை
ReplyDeleteதெரிந்து கொள்ள முயலும்போது
தேவை இல்லாமல் சிலதை
தெரிந்து கொள்ள நேரிடுகிறது
அதேகணம்
தெரிய முயன்றது
தெரியாமல் போகிவிடும்
எவ்வளவு பெரிய உண்மை
ரெம்ப அழகா ஆழமாய் சொல்லிடீங்க கவிஞரே
கவிதையில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து
ReplyDeleteவெவ்வேறு பொருள்தந்து,இருக்கும் வார்த்தை விளையாட்டு
அருமை மது!
புலவர் சா இராமாநுசம்
தெரியாததைப் பற்றி நன்றாகத்
ReplyDeleteதெரிந்து கொண்டேன்!
படித்து முடித்தது தெரிந்ததெல்லாம் தெரியாமல் போய் விட்டது!
ReplyDeleteஎன்னவோ எனக்கு தெரிஞ்சாகனும் . அருமைங்க .
ReplyDelete"தெரியாதவைகள
ReplyDeleteதெரிந்து கொள்ளும்போது
தெரிந்தவைகளில் சில
தெரியாமல் போகிறது.."
தெரியாதது என்னவென்று
தெரிந்து கொள்ளலாமென வந்தேன்
இந்த வரிகள் என்னை
தெரிந்து கொண்டதை மட்டும்
தெரிந்தவையாக வைத்துக்கொள்
தெரியாதவையை தெரிந்தவையாக
மாற்றிவிட
தெரிந்துகொள்ள வேண்டியது
ஆயிரம் இருக்கிறது என
தெரிந்து கொண்டேன்......
அப்பாட ஒரு வழியா முடிச்சிட்டேன்.....
திரைப்பட இயக்குனர் விசு [மக்கல் அரங்கம்] பாணியில் நல்லவே எழுதியிருக்கீங்க.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
enna sollanunu-
ReplyDeletetheriyala!
theriyaathatha -
sollavun theriyala!
மனம் கவர்ந்த பதிவு
ReplyDeleteதெரியாததை அருமையா தெரியவச்சுருக்கீங்க.....
ReplyDeleteகவிதையில் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறீர்கள். இரசித்தேன். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஒன்றுமே தெரியவில்லை.
ReplyDeleteமகளிர்தின நல்வாழ்த்துகள்
இன்னுமொருக்கா நிதானமாக வாசித்தால்தான் புரியும்போல இருகிகிறது. ஆயினும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தெரியாதவை
ReplyDeleteஎவையென
தெரிந்து கொள்ள
தெரியாமற் போகிறது..//நல்வாழ்த்துகள்
காலை வணக்கம்
ReplyDelete//தெரியாதவற்றை
ReplyDeleteதேடித் திரியும் போது
தெரிந்து கொள்ள
தேவையில்லாதவற்றையும்
தெரிந்து கொள்ள முடிகிறது..//
இங்க மட்டும் ‘முடிகிறது’ என்பதற்கு பதில், ‘வேண்டியிருக்கிறது’ என்று முடித்திருந்தால் கச்சிதமாய் இருந்திருக்கும்..! :)
ஆமாம் திவயா சரிதான்..அப்படியே மார்றிவிடுகிறேன்..நன்றி..
ReplyDeleteதெரியாதனவற்றை தெரிந்து கொள்ள முற்படும் போது தான் மனிதன் தெளிவடைகின்றான் அன்றேல் அவனுடைய வளர்ச்சி என்றோ சாய்ந்திருக்கும்.
ReplyDeleteநற்கவி படைத்தமைக்கு நன்றி