இலக்கணக் குறிப்பறிதல்
(உருவகம்,உவமைத்தொகை)
வணக்கம் தோழர்களே..சென்ற பதிவான பாகம் 17 ல் வியங்கோள் வினைமுற்று, வினையாலணையும் பெயர் போன்றவற்றைப் பார்த்தோம். இன்றைய பதிவில் உவமைத்தொகை,உருவகம் போன்றவற்றை பார்க்கப் போகிறோம்.
உவமைத்தொகை:
பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்..
(எ.கா) கனிவாய்
மலரடி
'கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.
அதேபோல 'மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும்.இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.
பெரும்பாலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வரும்படியே வினாக்கள் அமையும்.
எ.கா
1.மலர்முகம்
2.மலர்விழி
3.மலர்க்கை
4.தாய்மொழி
5.கயல்விழி
6.அன்னைத்தமிழ்
மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.
உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா..அப்படியானால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.
அதாவது 'மலரடி' என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.
அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.
'மலரடி' என்ற சொல்லை 'அடிமலர்' என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.
விளக்கம்:
ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கிறீர்கள்..உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள்.இதுவே 'மலர்முகம்'.இது உவமைத் தொகை.
இன்னும் ஒருபடி மேலே போய்,மலரைப்போன்று முகமில்லை.இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம்.அதாவது முகமலர்..(புரிதலுக்காகவே இவ்விளக்கம்)
அவ்வளவுதான் தோழர்களே..இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொண்டீர்களா..
எடுத்துக்காட்டு:

உருவகம்:

உவமைத்தொகை | உருவகம |
மலர்முகம் | முகமலர் |
மலர்க்கை | கைமலர் |
தாய்மொழி | மொழித்தாய் |
கயல்விழி | விழிகயல் |
அன்னைத்தமிழ் | தமிழன்னை |
மலர்விழி | விழிமலர் |
என்ன தோழர்களே..பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்குமென நினைக்கிறேன். பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்..படிப்பவர்களுக்கு பயன் அளிக்கட்டும்.
(மின் அஞ்சல் மூலம் சந்தேகங்களை கேட்கும் தோழர்களுக்கு நான் கொடுக்கும் விளக்கங்கள் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்)
அடுத்த பதிவில் இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர் பற்றி பார்ப்போம்.
நன்றி..மீண்டும் சந்திப்போம்..
-----------------------------------------------------------------------------------------------------------
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.
-----------------------------------------------------------------------------------
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
அருமையான விளக்கம் சகோ உருவகத்திர்க்கும் உவமைக்கும்.., தொடருங்கள் தொடர்கிறோம் ..!
ReplyDeleteகவிதை ஆக்கத்திற்கு மிகவும் உதவியாயிருக்கிறது.தொடருங்கள் !
ReplyDeleteதங்களின் இந்த விளக்கம் மிகவும் அருமையாக , பயனுள்ளதாக இருந்தது. இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete