டி.என்.பி.எஸ்.சி- வினைமுற்று,வினையாலணையும் பெயர் கண்டறிதல் பாகம் 17 - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி- வினைமுற்று,வினையாலணையும் பெயர் கண்டறிதல் பாகம் 17

டி.என்.பி.எஸ்.சி- வினைமுற்று,வினையாலணையும் பெயர் கண்டறிதல் பாகம் 17

வினை முற்று,வியங்கோள் வினைமுற்று, வினையாலணையும் பெயர்        வணக்கம் தோழர்களே..வினைத்தொகை மற்றும் பண்புத்தொகையை எப்படி கண்டறிவது என்று பாகம் 16 ல் பார்த்தோம் அல்லவா.அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

       இன்றைய பதிவில் வினைமுற்று,வியங்கோள் வினைமுற்று மற்றும் வினையாலணையும் பெயரை எப்படி கண்டு பிடிப்பது என்பதை பார்க்கலாம்.

வினைமுற்று என்றால் என்ன?

           முடிவு பெற்ற வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

எ.கா. படித்தான்

            படித்தான் என்றாலேயே ஒருவன் படித்து முடித்துவிட்டான் என்று பொருள்.

            இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினை முற்று.

           'படித்தான்' என்பதில் 'படித்த' என்பது பெயரெச்சம்  (பார்க்க)
                                                      'படித்து' என்பது வினையெச்சம் (பார்க்க)
                                                      'படித்தான்' எனபது  வினைமுற்று..

          பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது.'படித்தான்' என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது.எனவே அது வினைமுற்று.

          கீழ்க்காண்பவனற்றுள் வினைமுற்றைக் கண்டுபிடி என வினா கேட்டால் விடையாக கொடுக்கப்பட்டிருக்கும் நான்கில் எந்த ஒரு விடை முடிவு பெற்றிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு விடையளியுங்கள்.

அ.தெரிநிலை வினைமுற்று
ஆ.குறிப்பு வினைமுற்று
இ.ஏவல் வினைமுற்று
ஈ.வியங்கோள் வினைமுற்று
உ.உடன்பாட்டு வினைமுற்று
ஊ.எதிர்மறை வினைமுற்று

இவ்வாறாக ஒரு வினைமுற்றை வகைப்படுத்திக் காணலாம்.
அ. தெரிநிலை வினைமுற்று

        ஒரு வினைமுற்றானது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம்,
செயப்படுபொருள் ஆகிய ஆறிணையும் வெளிப்படையாக உணர்த்தி வரும். ஒரு செயல் நடந்து முடிந்ததாக தெரியும்.

(எ.கா) ஓவியன் சித்திரம் தீட்டினான்.
             செய்பவன் - ஓவியம்
             கருவி - வர்ணம்
             நிலம் - சுவர்
            செயல் - தீட்டுதல்
             பொருள் - சித்திரம்
            காலம் - இறந்த காலம்.
(எ.கா) எழிலரசி மாலை தொடுத்தாள்.
             செய்பவள் - எழிலரசி
              கருவி - நார், கை
நிலம் - இருப்பிடம்
செயல் - தொடுத்தல்
பொருள் - மாலை
காலம் - இறந்த காலம்.

ஆ.குறிப்பு வினைமுற்று

       திணை, பால் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டி காலத்தை மட்டும்
குறிப்பாக உணர்த்தி வரும் வினைக்குறிப்பே குறிப்பு வினைமுற்று எனப்படும். இது காலத்தை (வெளிப்படையாக) காட்டாது.

(எ.கா) வளவன் தற்போது பொன்னன்.
செங்கண்ணன் கரியன்
பாலன் இன்று செல்வன்

பொன்னன் - பொருள்
மதுரையான், குற்றாலத்தான் - இடம்
ஆதிரையான் - காலம்
செங்கண்ணன் - சினை
இனியன், கரியன் - பண்பு (அ) குணம்
நடிகன், நடையன் - தொழில்

         இவ்வாறாக பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகியவற்றைச் சார்ந்தே குறிப்பு வினைமுற்று அமையும்.

இ. ஏவல் வினைமுற்று
       முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.

ஈ.ஏவல் ஒருமை வினைமுற்று
(எ.கா) நீ நட, நீ செய், நீ போ, நீ படி

உ.ஏவல் பன்மை வினைமுற்று
(எ.கா) நீர் உண்குவீர்
            நீர் வாரீர், நீர் செய்குதும்

எ.வியங்கோள் வினைமுற்று.
       க-இய-இயர் என்ற விகுதிகளைப் பெற்று வரும்.
       வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டிக்கொடல் ஆகிய பொருள்களில் வரும்.இது மூன்று இடங்களையும் ஐம்பால் உணர்த்தி வரும்.

(எ.கா) வாழ்க, வாழிய, வாழியர், வாழ்த்துதல்
              ஒழிக, கெடுக, வைதல், செல்க
              வருக, ஈக, விதித்தல், தருக
              வேண்டல், சிரிக்க, பார்க்க

ஏ.உடன்பாட்டு வினைமுற்று
      (எ.கா) செய்வார், வாழ்வார், துறப்பார்

ஐ.எதிர்மறை வினைமுற்று
      (எ.கா) செய்யார், வாழாதவர், துறவார்

வினையாலணையும் பெயர்:

        ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

(எ.கா) படித்தவன்,
             கண்டவர்
             சென்றனன்

 எப்படி எளிதில் கண்டறிவது?:

            கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர்,அவன்,அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு. கொள்க.

        சென்ற தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு வினா:

'காட்சியவர்' என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

அ) காலப்பெயர் ஆ)இடப்பெயர் இ)வினையாலணையும் பெயர் ஈ) பண்புப்பெயர்

          காட்சியவர் என்ற சொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்..

          வினையாலணையும் பெயரைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை என்றாலும் கூட பாகம் 12 ல் பெயர்சொல் க்ண்டறிவது எப்படி என்பதை தெளிவாக படித்திருந்தாலே காலப்பெயர்,இடப்பெயர்,பண்புப்பெயர் இல்லையென முடிவெடுத்து மீதி இருக்கும் ஒன்றுதான் விடை என முடிவு செய்யலாம்.

       என்ன தோழர்களே.. இன்று பார்த்தவை உங்களுக்கு பயன்படும் என்று நம்புகிறேன்.

         அடுத்தப் பதிவில் உருவகம்,உவமைத்தொகை போன்றவற்றை கண்டறிவது எப்படி என பார்ப்போம்.

         சந்தேகங்களை கருத்துரையில் கேட்கலாம்.
============================================================================
 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
==========================================================================
                                                                                                                                        அன்புடன்

இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

3 comments:

 1. பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டிய பாடம் ..:)

  ReplyDelete
 2. தேவையான நேரத்தில் தேவையா பதிவு
  நல்ல பணி மதுமதி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 3. please sir, i want the 100 gk question. please extremely my send the mail id jensita24@yahoo.com

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com