புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26

டி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26

                    வணக்கம் தோழர்களே..பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனக் காண்போம்..          
            மரபுப் பிழையை நீக்குதல்

                    பறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்  

பறவைகள்                                                            விலங்குகள்
ஆந்தை - அலறும்                                              நாய் - குரைக்கும்
கோழி - கொக்கரிக்கும்                                     நரி - ஊளையிடும்
குயில் - கூவும்                                                     குதிரை கனைக்கும்
காகம் - கரையும்                                                 கழுதை - கத்தும்
கிளி - கொஞ்சும்                                                  பன்றி - உறுமும்
மயில் - அகவும்                                                   சிங்கம் - முழங்கும்
கோட்டான் - குழலும்                                        பசு - கதறும்
வாத்து - கத்தும்                                                   எருது - எக்காளமிடும்
வானம்பாடி - பாடும்                                          எலி - கீச்சிடும்
குருவி - கீச்சிடும்                                                தவளை - கத்தும்
வண்டு - முரலும்                                                குரங்கு - அலம்பும்
சேவல் - கூவும்                                                    பாம்பு - சீறிடும்
கூகை - குழலும்                                                   யானை - பிளிரும்
புறா - குனுகும்                                                      பல்லி - சொல்லும்
------------------------------------------------------------------------------------------------------------
பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்
புலிப்பரள்             சிங்கக்குருளை
பூனைக்குட்டி      எலிக்குஞ்சு
நாளிணிக்குட்டி கோழிக்குஞ்சு
குதிரைக்குட்டி    கீரப்பிள்ளை
கழுதைக்குட்டி    மான்கன்று
ஆட்டுக்குட்டி      யானைக்கன்று
பன்றிக்குட்டி
----------------------------------------------------------------------------------------------------------
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்
சோளத்தட்டு      முருங்கைக்கீரை
தாழைமடல்        தென்னங்கீற்று
வாழையிலை     பனையோலை
வேப்பந்தழை      மாவிலை
மூங்கில் இலை நெல்தாள்
-------------------------------------------------------------------------------------------------------------
செடி, கொடி மரங்களின் தொகுப்பு
பூந்தோட்டம்                     மாந்தோப்பு                  வாழைத்தோட்டம்
தேயிலைத் தோட்டம்   சோளக்கொல்லை   சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு              பனங்காடு                    வேலங்காடு
---------------------------------------------------------------------------------------------------------------
பொருட்களின் தொகுப்பு பெயர்கள்
ஆடு - மந்தை          மாடு - மந்தை
எறும்பு - சாரை       கல் - குவியல்
சாவி - கொத்து       திராட்சை - குலை
பசு - நிரை                 யானை - கூட்டம்
வீரர் - படை             வைக்கோல்- போர்
விறகு - கட்டு         மக்கள் - தொகுப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
வழூஉச் சொற்களும் தமிழ்ச்சொற்களும்
வழுஉச்சொல்              தமிழ்சொல்             வழூஉச்சொல்              தமிழ்சொல்
உசிர்                       -           உயிர்                                     ஊரளி         -        ஊருளி
ஒருத்தன்             -           ஒருவன்                              கடகால்      -        கடைக்கால்
குடக்கூலி -                     குடிக்கூலி                            முயற்சித்தார் - முயன்றார்
வண்ணத்திப்பூச்சி -     வண்ணத்துப்பூச்சி            வென்னீர் -           வெந்நீர்
எண்ணை -                      எணணெய்                           சிகப்பு -                  சிவப்பு
தாவாரம் -                       தாழ்வாரம்                             புண்ணாக்கு -     பிண்ணாக்கு
கோர்வை -                     கோவை                                வலது பக்கம் -    வலப்பக்கம்
பேரன் -                             பெயரன்                                 பேத்தி -                 பெயர்த்தி
தலகாணி -                      தலையணை                       வேர்வை -           வியர்வை
சீயக்காய் -                       சிகைக்காய்                          சுவற்றில் -          சுவரில்
இருபல் -                          இருமல்                                  அருவாமனை- அரிவாள்மனை
அண்ணாக்கவுரு-         அரைநாண்கயிறு               புஞ்சை -              புன்செய்
புண்ணாக்கு -                  பிண்ணாக்கு                         நாத்தம் -              நாற்றம்
பதனி -                               பதிநீர்                                       அருகாமை -      அருகில்
வெங்கலம் -                    வெண்கலம்                          பேட்டி -               நேர்காணல்
வெண்ணை -                   வெண்ணெய்                       ஒத்தடம் -           ஒற்றடம்
தேனீர் -                              தேநீர்                                        கவுறு -                கயிறு
பயிறு -                               பயறு                                        பாவக்காய் -      பாகற்காய்
ரொம்ப -                             நிரம்ப                                       கோடாலி -        கோடாரி
கடப்பாறை -                    கடப்பாரை                            ஆம்பளை -        ஆண்பிள்ளை
ஈர்கோலி -                        ஈர்கொல்லி                           அவரக்கா -        அவரைக்காய்
---------------------------------------------------------------------------------------------------------------
வேற்றுமொழிச்சொல்-தமிழ்ச்சொல்
பஜனை - கூட்டுவழிபாடு         வைத்தியர் - மருத்துவர்
ஜனம் - மக்கள்                              கர்வம் - செருக்கு
வாபாஸ் - திரும்பபெறுதல்    தபால் - அஞ்சல்
கிஸ்தி - வரி                                  அலமாரி - நெடும்பேழை
முண்டாசு - தலைப்பாகை      சிம்மாசனம் - அரியணை
அகங்காரம் - ஆணவம்             பஜார் - கடைத்தெரு
சாதம் - சோறு                               சபை - அவை
நாஷ்டா - சிற்றுண்டி                 ஆசீர்வாதம் - வாழ்த்து
நமஸ்காரம் - வணக்கம்            லாபம் - ஈவு
இஷ்டம் - விருப்பம்                    வக்கீல் - வழக்குரைஞர்
தராசு - துலாக்கோல்                 ஹாஸ்டல் - விடுதி
சர்க்கார் - அரசு                              கேப்பை - கேழ்வரகு
ஐதீகம் - சடங்கு                            வேதம் - மறை
ஜானவாசம் - மாப்பிளை அழைப்பு அபிஷேகம் - திருமுழுக்கு
யாத்திரை - புனிதப் பயணம்    ஆயுள் - வாழ்நாள்
தீர்த்தம் - புனித நீர்                       ஜனநாயகம் - குடியாட்சி
நதி - ஆறு                                        சந்தா - கட்டணம்
பிரதிநிதி - சார்பாளர்                   பத்திரம் - ஆவணம்
மத்தியாணம் - நண்பகல்          சிபாரிசு - பரிந்துரை
பரீட்சை - தேர்வு                          பிரார்த்தனை - தொழுகை
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் - நடுவண் அரசு
தாலுகா ஆபிஸ் - வட்டாட்சியர் அலுவலகம்
-------------------------------------------------------------------------------------------------------------
 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
-------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                        அன்புடன்





பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

6 comments:

  1. தொடரட்டும் ஆசிரயயர் பணி...

    ReplyDelete
  2. தொடரட்டும் ஆசிரயயர் பணி..

    ReplyDelete
  3. நன்கு puriyum patiyaana viLakkam.

    ReplyDelete
  4. அண்ணா காய்களின் இளமை மரபையும் பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  5. Singam - Garjikkum nu varaadhu???

    ReplyDelete
  6. unga website romba usefula irukku

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com