புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி- பிழை நீக்கி எழுதுதல் பாகம்-25

டி.என்.பி.எஸ்.சி- பிழை நீக்கி எழுதுதல் பாகம்-25

          வணக்கம் தோழர்களே பாகம் 24 ல் பொருந்தாச்சொல்லை எப்படி கண்டுபிடிப்பது என பார்த்தோம்..இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது எனப் பார்ப்போம்..

              பிழை நீக்கி எழுதுதல்

1. சந்திப்பிழை திருத்தி எழுதுதல்
2. மரபுப்பிழை நீக்கி எழுதுதல்
3. வழூஉச் சொல் நீக்கி எழுதுதல்
4. வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்
5. ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்

           மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் அமையும். இவற்றை  ஒருமுறை ஆழ்ந்து படித்தால் மனதில் நின்றுவிடும்.ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு வினா என் ஐந்து வினாக்கள் கேட்கப்படலாம்.
 1.சந்திப்பிழை நீக்கி எழுதுதல்எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால்,
எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம்.

வல்லினம் மிகும் இடங்கள்

1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம்
மிகும்.
(எ.கா)அந்தத் தோட்டம்
             இந்தக் கிணறு
             எந்தத் தொழில்
             அப்படிச் செய்தான்
             இப்படிக் கூறினான்
             எப்படிப் பார்ப்போம்
-------------------------------------------------------------------------------------------------------------
2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும்.
(எ.கா)பொருளைத் தேடினான்
             புத்தகத்தைப் படித்தான்
             ஊருக்குச் சென்றான்
            தோழனுக்குக் கொடு
------------------------------------------------------------------------------------------------------------
3. ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின் வல்லினம் ஆகும்.
(எ.கா)படிப்பதாகச் சொன்னார்
            போய்ச் சேர்ந்தான்
--------------------------------------------------------------------------------------------------------------
4. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வல்லினம் ஆகும்.
(எ.கா)சாலப் பேசினான்
             தவச் சிறிது
------------------------------------------------------------------------------------------------------------
5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.
(எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி
------------------------------------------------------------------------------------------------------------
6. ஒரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின்பகும்.
(எ.கா)தைப்பாவை
            தீச்சுடர்
------------------------------------------------------------------------------------------------------------
7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.
(எ.கா)ஓடாப்புலி, வளையாச் சொல்
----------------------------------------------------------------------------------------------------------
8. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
(எ.கா)பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
------------------------------------------------------------------------------------------------------------
9. முற்றியலுகர சொற்களின் பின் வல்லினம் மிகும்
(எ.கா)திருக்குறள், பொதுச்சொத்து
-----------------------------------------------------------------------------------------------------------
10. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
(எ.கா)மழைக்காலம், பனித்துளி
------------------------------------------------------------------------------------------------------------
வல்லினம் மிகா இடங்கள்

1. வினைத்தொகையில் வில்லினம் மிகாது
(எ.கா)விரிசுடர், பாய்புலி
-------------------------------------------------------------------------------------------------------------
2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
(எ.கா)காய்கனி, தாய்தந்தை
------------------------------------------------------------------------------------------------------------
3. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது
(எ.கா)தமிழ் கற்றார், கதை சொன்னார்.
------------------------------------------------------------------------------------------------------------
4. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது
(எ.கா)கற்க கசடற, வாழ்க தமிழ்
-------------------------------------------------------------------------------------------------------------
5. விளித்தொடரில் வலி மிகாது
(எ.கா)கண்ணா பாடு, அண்ணா பாடு
------------------------------------------------------------------------------------------------------------
6. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களுக்குப்பின் வலி மிகாது...
(எ.கா)அத்தனை பழங்கள், இத்தனை பழங்கள், எத்தனை கால்கள்
----------------------------------------------------------------------------------------------------------
7. இரட்டைக் கிளவியிலும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது.
(எ.கா)கலகல, பாம்பு பாம்பு
------------------------------------------------------------------------------------------------------------
8. அவை இவை எனும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
(எ.கா)அவை சென்றன, இவை செய்தன
------------------------------------------------------------------------------------------------------------
9. அது இது எனும் எட்டுச் சொற்களின் பின் வலி மிகாது
(எ.கா)அது பிறந்தது, இது கடித்தது
------------------------------------------------------------------------------------------------------------
10. எது, அது எனும் வினைச்சொற்களின் பின் வலி மிகாது
(எ.கா)எது பறந்தது, யாது தந்தார்
-----------------------------------------------------------------------------------------------------------
 அடுத்தப் பகுதியில் மரபுப் பிழை நீக்குவதைப் பற்றி காண்போம்..
----------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.
(எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி

       மேற்ண்டவை புரியவில்லை என கீர்த்தி அவர்கள் கருத்துரையில் குறிப்பிட்டதன் காரணமாக  அதற்கான விளக்கம் தர விழைகிறேன்..

உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன?

     ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அவற்றை விளக்கும் பயனும் மறைந்து வருவது உடனும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

(எ.கா)
      நீர்க்குடம்

      அதாவது நீரை உடைய குடம்.இதில் 'ஐ' என்னும் 2 ம் வே.உருபும் 'உடைய' என அதை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

நீர்க்குடம்                                          -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்         
                                                                உடன் தொக்க தொகை
மட்பானை                                        -மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
                                                                உடன் தொக்க தொகை
கூலிவேலை                                   -நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
                                                                உடன் தொக்க தொகை
தொட்டித் தண்ணீர்                       -ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்
                                                                உடன் தொக்க தொகை
வீட்டுப்பூனை                                 -ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
                                                                உடன் தொக்க தொகை

        ஆறாம் வேற்றுமைத் தொகையில் பயன் தரும் சொல் மறைந்து வருவதில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
--------------------------------------------------------------------------------------------------------------

                                                                                                                                          அன்புடன்

பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.

டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

16 comments:

  1. தொடர்கிறேன் தொடருங்கள்

    ReplyDelete
  2. ஐயா,

    1) வல்லினம் மிகும் இடங்கள் Point 2'ம், வல்லினம் மிகா இடங்கள் Point 3'ம் ஒன்றே.

    2) வல்லினம் மிகும் இடங்கள் point 5, புரியவில்லை.

    3) முற்றியலுகரம் என்றால் என்ன.

    ஆகியவற்றை விளக்கவும்.

    நன்றி
    Keerthi

    ReplyDelete
  3. மனசாட்சி..
    நன்றி தோழர்..

    ReplyDelete
  4. 1) வல்லினம் மிகும் இடங்கள் Point 2'ம், வல்லினம் மிகா இடங்கள் Point 3'ம் ஒன்றல்ல..

    இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ'

    இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.
    (எ.கா)தமிழ் கற்றார்('ஐ' மறைந்து வரும்)
    இரண்டாம் வேற்றுமைத் தொகை விரிந்தால் மட்டுமே வலிமிகும்.
    (எ.கா)தமிழைக் கற்றார்('ஐ' வெளிப்படையாக வரும்)

    ReplyDelete
  5. கீர்த்தி..
    2) வல்லினம் மிகும் இடங்கள் point 5, புரியவில்லை.

    பின் குறிப்பு என பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. கீர்த்தி..

    3) முற்றியலுகரம் என்றால் என்ன?

    ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்காமல் தன் மாத்திரை அளவிலே ஒலித்தால் அது முற்றியலுகரம் எனப்படும்..
    எ.கா.. திரு,பொது

    இதில் 'திரு' என்பதற்கு பின் 'குறள்' என்ற வார்த்தையை சேர்க்கும் போது வல்லினம் மிகும்..திரு+குறள்=திருக்குறள்..

    ReplyDelete
  7. ஐயா,
    சந்தேகம் தீர்த்தது(முன்பு கேட்ட இரண்டுக்கும் சேர்த்து).
    மிக்க நன்றி!
    Keerthi

    ReplyDelete
  8. Thank You Sir!

    மேலும் கீழே உள்ள வரியை விளக்கவும்.

    5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.

    Keerthi

    ReplyDelete
  9. ஐயா, மன்னிக்கவும்!
    Comment ஐ சரியாக படிக்கவில்லை.
    இப்போது சந்தேகம் தெளிந்ததுவிட்டது.

    மிக்க நன்றி!

    ReplyDelete
  10. தங்களின் சிறந்த பணிக்கு நன்றி.
    பொது தமிழுக்கு படிக்க வேண்டிய பிரத்யேக நூல்கள் எவை? உதரணத்திற்கு குரூப் 2தேர்வில் கேட்கப்பட்ட
    1 .பெண்பாற்புலவர் குறுநில மன்னர் மற்றும் புகழ் பெற்ற சங்க பெண்பால் புலவர் கரும்பு சாகுபடியை ஒரு குறு நிலா மன்னர் அறிமுகம் செய்ததாக கூறியுள்ளார்.
    2 .மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர், புதுக் கவிதையின் மலர் பார்த்தவர் ' என்று பாராட்டப் படுபவர்
    3 .ஆதி மனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தேன் தான் ' என்று பாடியவர்
    போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க எந்த நூல்களைப் படிப்பது பயன் தரும்?. தயவு செய்து உதவவும்.நன்றி.

    ReplyDelete
  11. தில்லித் தமிழ்ச்சங்கம் என்று எழுதுவது சரியா?
    தில்லி தமிழ்ச்சங்கம் என்பதே சரியாகத் தோன்றுகிறது.

    ReplyDelete
  12. தில்லித் தமிழ்ச்சங்கம் என்று எழுதுவது சரியா?
    தில்லி தமிழ்ச்சங்கம் என்பதே சரியாகத் தோன்றுகிறது.

    ReplyDelete
  13. தில்லி தமிழ்ச்சங்கம் என்பதே சரி..

    ReplyDelete
  14. உவமைத் தொகையில் வலிமிகும்..
    விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் இப்பக்கத்தில் இல்லை.

    ReplyDelete
  15. உவமைத் தொகையில் வலிமிகும்.. விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் இல்லை..

    ReplyDelete
  16. உங்கள் பணி தொடரட்டும்!!!!!!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com