நவீன இந்திய வரலாறு
வணக்கம் தோழர்களே..சென்ற பதிவில் பண்டைய இந்திய வரலாறு பகுதியில் முக்கியமானவற்றைப் பார்த்தோம்.இன்றைய பதிவில் நவீன இந்திய வரலாற்றைப் பற்றிப் பார்ப்போம்.
இந்தியாவற்கு ஐரோப்பியர்கள் வருகையில்தான் இந்த வரலாறு ஆரம்பிக்கிறது.
இராபர்ட் க்ளைவ் |
முதலில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் யார்? இறுதியில் இந்தியாவை விட்டுச் சென்ற ஐரோப்பியர் யார் எனத் தெரிந்து கொள்ளுங்கள். போர்த்துகீசியர்கள் தான் அவர்கள்.
போர்த்துகீஸ்,பிரெஞ்ச்,ஆங்கிலேயர்,டச்சு போன்றோர் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்களின் செல்வாக்கை இந்தியாவில் நிலை நிறுத்தியவர்கள் யார் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.முக்கிய கவர்னர்களையும்,முதல், இறுதி கவர்னர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்..
ஒரு நாட்டினர் இந்தியாவின் எந்தப் பகுதியில் காலடி எடுத்து வைத்தார்கள்,அவர்கள் எங்கு தலை நகரை அமைத்தார்கள், அவர்கள் உருவாக்கிய நகரங்கள் எவை என்பதைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..
அதே போல ஐரோப்பியர்களுக்கிடையே நடந்த போர்கள், வென்றவர்கள், கைப்பற்றிய இடங்கள், அதன் பின்னணி போன்றவற்றைப் பற்றி தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்ட ஐரோப்பியர்களில் முக்கியமானவர்கள் ஆங்கிலேயர்கள் ஆவார்கள்.அவர்களைப் பற்றி இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ளுங்கள்..
ஏனெனில் அவர்கள் தான் இந்தியாவை அதிக வருடங்கள் ஆட்சி புரிந்தவர்கள்.
எனவே அந்தப் பகுதியில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படலாம்.
யார் காலத்தில் ஆங்கிலேயர்கள் கம்பெனி அமைக்க அனுமதி கேட்டார்கள் என்பது முக்கியமானது.
விக்டோரிய மகாராணி |
ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் அமைய நடந்த போர்கள், இந்தியாவில் எந்தெந்த குறுநில மன்னர்களிடம் ஆங்கிலேயர் ஒப்பந்தம் செய்தார்கள் என்பவை மிகவும் முக்கியமானவை.
வங்காளத்தின் முதல் கவர்னர், இந்தியாவின் முதல் கவர்னர் போன்றவர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ஆங்கிலேய கம்பெனியின் கீழ் நடந்த ஆட்சிக்கு இங்கே நியமிக்கப் பட்ட கவர்னர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.இதிலிருந்து அவ்வப்போது வினாக்கள் கேட்கப்படும்.அந்த கவர்னர்கள் செய்த முக்கிய சீர்திருத்தங்கள்,இயற்றிய சட்டங்கள் போன்றவற்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு இரட்டை ஆட்சி முறை கொண்டு வந்த ஆங்கிலேய ஆளுனர் யார் என வினா வரும்.நீங்கள் ஆளுனர்களைப் பற்றி படித்திருந்தால் இராபர்ட் க்ளைவ் என்று எழுதிவிட்டு செல்லலாம்.
ஒவ்வொரு இந்திய ஆளுனர்களைப் பற்றியும் அவர்களின் ஆட்சி அமைப்பைப் பற்றியும் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்..
இந்தக் கால கட்டமானது இந்தியாவின் முக்கிய காலகட்டம் ஆகும். இவற்றில் இருந்து வினாக்களை எர்திர்பார்க்கலாம்.
ஆளுனர்களில் முக்கியமானவர்களைப் பற்றியும் அவர்கள் செய்த நலத்திட்டங்களையும் பற்றியும் கேட்கலாம்.
உதாரணத்திற்கு இந்திய இரயில்வேயின் தந்தை யார் எனக் கேட்கலாம் .டல்கௌசி பிரபுதான் இந்தியாவில் ரயில்வே,தந்தி போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.எனவே ஒவ்வொரு ஆளுனரைப் பற்றியும் தனித்தனியாக படித்துக்கொண்டால் எப்படி வினா அமைந்தாலும் எளிதாக விடையளிக்கலாம்..
இந்தப் பகுதியில் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப் படுகின்ற சிப்பாய் புரட்சி ஏற்பட்டது.அதற்கான காரணம்,அதன் விளைவுகள் என்ன என்பதையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்..
1857 ம் ஆண்டு சிப்பாய் புரட்சி நடை பெற்றது.அதன் பிறகு விக்டோரிய மகாராணியின் மகாசாசனம் இயற்றப்பட்டது.
நவீன இந்தியாவின் வரலாறு சிப்பாய் புரட்சியோடு முடிவடைகிறது.
சிப்பாய் புரட்சி |
இதில் ஐரோப்பியர்கள் இந்தியாவில் ஆட்சி புரிந்த அம்சங்களில் இருந்தே அதிகம் வினாக்கள் வரும்.
எனவே இவற்றை வாசிக்கும் போது ஆளுனர்களின் பெயர்களையும் அவர்களின் முக்கியத் திட்டங்களையும் அவர்களின் சிறப்புப் பெயர்களையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
=======================================================================
இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.
========================================================================
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
அருமையிலும் அருமை.தொடருங்கள்
ReplyDeleteதெளிவாக சுருக்கமாக அழகாக உள்ளது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தொடரட்டும் சேவை!
ReplyDeleteஅறிந்துகொண்டேன்,
ReplyDeleteதொடருங்கள்.
ஓஓஓஓ என் வரலாறு அண்ணா எனக்கு வரலாறு என்றா் உயிர்..
ReplyDeleteஎன் வரலாற்று பாடத்தில் இந்திய வரலாறு ஒரு பகுதி...
சிப்பாய் கலகத்தில் ஜான்சி ராணி முக்கியமானவர்....
அருமையான வரலாற்று பாடம்.....