சுதந்திரப் போராட்ட வரலாறு
நவீன இந்திய வராற்றில் முக்கிய குறிப்புக்களை சென்ற பாகத்தில் இந்தப் பகுதியிலிருந்து 10 வினாக்கள் இதுவரையிலும் கேட்கப்பட்டிருக்கின்றன.இத்தேர்விலும் எதிர்பார்க்கலாம்.
1857 ம் ஆண்டிலிருந்து 1947 ம் ஆண்டுவரை நடந்தவை சுதந்திரப் போராட்ட வரலாறாக கொள்ளுங்கள்.
விக்டோரிய மகாராணி அமைத்த இந்தியாவின் வைஸ்ராய்கள் யார் யாரென நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.அவர்கள் செய்த சீர்திருத்தங்கள், செயல்பாடுகள் போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள்..இதற்குள் இருந்தே பெரும்பாலும் வினாக்கள் அமையும்..
காந்திய போராட்டம் |
உதாரணமாக இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய ஆங்கில வைஸ்ராய் யாரென கேட்கலாம்.
மேயோ பிரபு 1872 ஆம் ஆண்டு முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினார்.
1885 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோன்றிய போது வைஸ்ராயாக இருந்தவர் டஃப்ரின் பிரபு.இது போன்றவற்றை நன்கு அறிந்து கொண்டால் எப்படி கேட்டாலும் விடையளிக்கலாம்.
எந்த வைஸ்ராயிக்குப் பிறகு எந்த வைஸ்ராய் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..முடிந்தவரை வைஸ்ராய்களின் காலகட்டத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.கர்சன் பிரபு வங்கப் பிரிவினையை எந்த ஆண்டு ஏற்படுத்தினார் என்று வினா வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
சுதந்திர போராட்டத்திற்காக தோன்றிய அமைப்புகள், தோற்றுவித்தவர்கள், அதன் காலம் போன்றவற்றையும் அறிந்திருத்தல் வேண்டும்..
காந்தியக் காலம் பற்றியும் அவர் ஈடுபட்ட போராட்டங்கள் பற்றியும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
முக்கிய நிகழ்வுகளான ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கம், அலிகார் இயக்கம் போன்றவை எந்த வருடம் நடந்தன. யார் முன்னின்று எங்கே நடத்தினார்கள், அதன் காரணம் மற்றும் விளைவுகள், அவை நடக்கும் போது ஆட்சி செய்த வைஸ்ராய் யார் என்பனவற்றை நன்கு அறிந்து கொள்ளுங்கள்..
மௌன்ட்பேட்டன் பிரபு |
சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், தோற்றுவித்த பத்திரிக்கைகள், வருடங்கள் போன்றவையும் முக்கியம்.
1857 ம் ஆண்டிலிருந்து 1947 ம் ஆண்டு வரையிலும் நடந்த சம்பவங்களை ஆழமாகப் படித்துக் கொண்டால் 10 மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.
முக்கிய நிகழ்வுகள் நடந்த காலம் அப்போது இருந்த வைஸ்ராய் போன்றவற்றை மனதில் நன்கு பதித்துக் கொள்ளுங்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி 7 வினாக்களும் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் பற்றி 3 வினாக்களும் கேட்கப்படலாம்..தமிழக சுதந்திர வரலாற்றை அவசியம் படித்துக் கொள்ளுங்கள்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
தொடருங்கள் தொடர்ந்து படிக்கிறேன்.....
ReplyDeleteதொடருங்கள் நற்பணியை
ReplyDeleteungal pani melum sirakka vazhukkal...........kalaimagal kalvi nilayam ,vandavasi
ReplyDeleteungal pani melum sirakka vazhukkal
ReplyDeletesor,enakku india varalaru athavathu mottha patankal,arasarkal ilakkiyankal Nullkal & adaimoli santrorkal,science iduthavira intha exam
ReplyDeletedevaiyanathaium,athai nabakammaka vaikka sila kurippukalum tharungal.Please sor,my name is parvathi,pollachi