புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி-தேர்வெழுத முக்கிய குறிப்புகள்

டி.என்.பி.எஸ்.சி-தேர்வெழுத முக்கிய குறிப்புகள்

                    தேர்வெழுத முக்கிய குறிப்புகள்

1)தேர்வு தொடங்கும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தேர்வு நடக்கும்    இடத்திற்கு சென்று விடுங்கள்.

2)உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எது என அறிந்து கொள்ளுங்கள்.

3)தேர்வு நடக்கும் அறையின் முன்னதாகவோ வளாகத்திலோ அமர்ந்து புத்தகத்தை படிப்பதை தவிர்த்து விடுங்கள்.

4)முதல் முறை தேர்வெழுதும் தோழர்களுக்கு பதட்டம் இருக்கும்.கடைசி கட்ட   புத்தக வாசிப்பு இன்னும் பதட்டத்தை அதிகரிக்கும்.

5)பென்சில்,பேனா இவற்றை மட்டும் மையத்திற்குள் எடுத்துச் செல்லுங்கள்.



6)அருகில் உள்ளவர்களிடம் பேசாதீர்கள்.

7)அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை கட்டுபடுத்தி முழுமையாக தேர்வில் செழுத்துங்கள்.

8)தேர்வுத்தாளை பெற்றவுடன் எந்தெந்த வினாக்கள் வந்திருக்கிறதென பார்ப்பதை தவிர்த்திடுங்கள்..ஏனெனில் நேரம் போதாது.

9)முதலில் பொதுத்தமிழ் வினாக்களுக்கு விடயளித்துவிட்டு பொது அறிவிற்கு வருவது சிறந்தது.

10)பொதுத்தமிழ் பகுதிக்கு விடையளிக்கும்போது மிகக் கவனமாக விடையளிக்கவும்.101 ம் கட்டத்திலிருந்து விடையளிக்க மறந்து விடாதீர்கள்.. 

11)மனதில் ஒரு விடையை வைத்துக் கொண்டு  வேறொரு கட்டத்தை நிரப்பி விடாதீர்கள்.

12)விடைக்கான கட்டத்தை முழுமையாக நிரப்புங்கள்..

13)தவறான விடையை அளிக்கும் பட்சத்தில் அதை அழிப்பான் கொண்டோ பிளேடு போன்றவற்றை பயன்படுத்தியோ அழிக்க முற்படாதீர்கள்.அப்படியான விடைத்தாள்களை தள்ளுபடி செய்யக் கூட வாய்ப்பிருக்கிறது.

14)வேகமாக செயல் பட வேண்டாம்..மித வேகம் நல்லது.

15)சந்தேகப்படும் வினாக்களை விட்டுவிட்டு அடுத்த வினாவிற்கு விடையளிக்கும்போது அதற்கான கட்டத்தை கவனமாக விட்டுவிட்டு அடுத்தக் கட்டத்தில் விடையளிக்கவும்.

16)அனைத்து வினாக்களுக்கும் மறவாமல் விடையளிக்கவும்.தவறான விடைகளுக்கு மதிப்பெண்களைக் குறைக்கப் போவதில்லை. 

இன்று இரவு நன்றாக உறங்குங்கள்.தேர்வை நன்றாக எழுதுங்கள்..
==========================================================================


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
==========================================================================
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

8 comments:

  1. பயன் தரும் அவசியக் குறிப்புகள்!

    சா இராமாதுசம்

    ReplyDelete
  2. நன்றி, ஆசிரியரே

    ReplyDelete
  3. நன்றி

    ReplyDelete
  4. கடைசிநேர பதட்டத்தை குறைக்க உதவும் நல்ல பதிவு!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com