புது வரவு :
Home » , , , , » குரூப் 2- தேர்வெழுதும் தோழர்களே..தெரிந்து கொள்ளுங்கள்..

குரூப் 2- தேர்வெழுதும் தோழர்களே..தெரிந்து கொள்ளுங்கள்..

        வணக்கம் தோழர்களே..நடக்கவிருக்கும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? விண்ணப்பிக்காதவர்கள் முதலில் விண்ணப்பித்துவிட்டு அடுத்ததாக படிக்க அமருங்கள். கடைசி கட்ட மன உளைச்சல் என்பது தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தேவையில்லாதது.

        சரி தோழர்களே.. தேர்வுக்கான வினாத்தாள் அமைப்பினை தேர்வாணையம் முற்றிலும் மாற்றி அமைத்துவிட்டது என்பதை இப்போது அறிவீர்கள். சென்ற ஆண்டு குருப் 2 தேர்வு எழுதியவர்களுக்கு அப்போதே தெரியும் ஏனென்றால் அப்போதைய வினாத்தாள் மிகவும் கடினமானதாக இருந்ததெனச் சொன்னார்கள்.

 
tnpsc,group 2,group 4,exam,exam tips
            ஆகவே இனி வரும் தேர்வுகள் மிகக் கடுமையானதாக இருக்கும். ஏனென்றால் முன்பெல்லாம் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளைப்பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு . இன்று அப்படியில்லை. அன்று காஞ்சீபுரத்தில் மட்டும் தான் எனக்குத் தெரிந்த அளவில் பயிற்சி வகுப்புகள் நடந்தன. ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை. ஊருக்கு ஊரு பயிற்சி வகுப்புகள்.

       ஆகவே தேர்வில் இதுவரை எந்த மாதிரியான வினாக்கள் கேட்கப்படும் என்று விலாவரியாகத் தெரிந்துகொண்டு அதை மட்டுமே படிக்கும் படி ஒரு வட்டம் போட்டுக் கொடுத்தார்கள்.ஆனால் இனி அப்படியில்லை. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராவதைப் போலத்தான் இதற்கும் தயாராக வேண்டியுள்ளது. இந்தப் பிரிவிலிருந்துதான் வினாக்கள் வரும் என்று யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உதாரணமாக வரலாறு என்றால் அதைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

         முந்தைய தேர்வுகளில் ஒற்றை வார்த்தையில் விடையளிக்கும்படிதான் வினாக்கள் வந்தன.அதாவது,

         அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த வருடம் எது?

         அ)கி.மு 400 ஆ) கி.பி. 200 இ) கி.மு.225 ஈ) கி.மு. 326

         மேற்கண்ட படி வினா இருக்கும்.அலெக்ஸாண்டைப் பற்றி மேலோட்டமாகத் தெரிந்திருந்தாலே விடை  ஈ) கி.மு. 326 என்று எளிதாக விடையளித்து விடலாம். இதைப் போலதான் 90 சதவீத வினாக்கள் வந்தன. எளிதாக விடை அளிக்க முடிந்தது.ஆனால் இப்போது அதே வினா கீழ்க்கண்டவாறு கேட்கப்படுகிறது.

    அ)கி.மு 326ல் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தார்
    ஆ)அவர் போரஸ் மன்னரிடம் சரணடைந்தார்
    இ) அவர் சொந்த நாட்டுக்கு திரும்பும் வழியில் மரணமடைந்தார்  

    அ) அ மட்டும் சரி  ஆ) அ,ஆ இரண்டு மட்டும் சரி இ) அ,இ இரண்டு மட்டும் சரி
 ஈ)அனைத்தும் சரி


         இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டுமானால் அலெக்ஸாண்டரைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

         இதற்கான விடை -இ) அ,இ இரண்டு மட்டும் சரி

       முன்பெல்லாம் ஒரு தெரிந்த வினாவுக்கு விடையளிக்க மூன்று வினாடிகள் போதும்.ஆனால் வரும் தேர்வுகளில் தெரிந்த வினாவிற்கு யோசித்து பதிளிக்கவே இன்னும் நேரம் தேவைப்படுகிறது.நேரக்கட்டுப்பாடு மிக அவசியம்.

        பொதுத்தமிழ் வினாக்களும் சரி பொது அறிவு வினாக்களும் சரி பெரும்பாலும் யோசித்தால் தான் சரியான விடை காணமுடியும்.. 60 சதவீத வினாக்கள் இவ்வாறு வர வாய்ப்பிருக்கிறது.

         எனவே எதைப்படித்தாலும் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுதல் அவசியம்..புரிந்து படித்தல் அவசியம்..

         அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணிகளுக்கான ஆட்கள் யோசிக்கும் அறிவு பெற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்று அரசு மேற்கொண்ட முடிவு வரவேற்கத்தக்கது.

          கண்ணை மூடிக்கொண்டு ஏ.பி என்று டிக் செய்து அதிர்ஷ்டவசமாக தேர்வில் வென்ரவர்களும் உண்டு. அவர்களைத் தடுக்கவே இந்த வினாத்தாள் அமைப்பு மாற்றம் என்று கருதுகிறேன்..

           சென்ற ஆண்டு குரூப் 2 தேர்வு கிட்டத்தட்ட 7000 பதவிகளுக்காக நடைபெற்றது. அதற்கே வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது.
இப்போதைய தேர்வு 3600 காலியிடங்களுக்குத்தான் நடைபெறவிருக்கிறது. அப்படியானால் பார்த்துக் கொள்ளுங்கள்.

       இந்தத் தேர்வில் வென்றல் போதாது தோழர்களே..அடுத்ததாக நேர்காணல் இருக்கிறது.அதிலும் வென்றால் தான் பணி நியமனம் கிடைக்கும் எனவே சற்று ஆழ்ந்து படியுங்கள்.தேர்வில் வெல்லுங்கள்..நன்றி..

        இது குறித்து சந்தேகங்களை கருத்துரைப் பெட்டியில் கேளுங்கள்..

         பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.
                                                                                                                                       அன்புடன்..
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..

டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

19 comments:

 1. sir please give training for group 2

  ReplyDelete
 2. please post the new pattern syllabus for group2

  ReplyDelete
 3. தொடரட்டும் நற்பணி.நன்றிசொல்வார் பலர்.

  ReplyDelete
 4. நல்ல தொண்டு! தொடரட்டும் தங்கள் பணி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 5. தொடரட்டும் தொண்டு (TM 4)

  ReplyDelete
 6. வணக்கம் நண்பரே,
  இலக்கணகுறிப்பில் 'கிளைப்பெயர்,சுட்டுப்பெயர் என்பதை எப்படி அறிவது என விளக்க முடியுமா.
  மேலும் நேர்காணலில் எப்படி கேள்விகள் கேட்பார்கள்.

  ReplyDelete
 7. வணக்கம் நண்பரே.
  நேர்கானலில் எது குறித்து கேள்விகள் கேட்பார்கள். மேலும் இலக்கணகுறிப்பில் கிளைப்பெயர்,சுட்டுப்பெயர் எப்படி தெரிந்துக்கொள்வது என்ற விளக்கம் தர முடியுமா...

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து பதிவுகளை வாசியுங்கள் தோழர்..நேர்காணலைப் பற்றி பதிகிறேன்..சுட்டுப் பெயர்,கிளைப்பெயர் பற்றி முழுமையாக ஒரு பதிவிடுகிறேன்..

   Delete
 8. வணக்கம் ,
  vao வினாக்களை ஆரமியுங்கள் ,உங்களுடைய சேவைக்கு எனது பாராட்டுக்கள்
  நன்றி...
  பாக்கியராஜ்

  ReplyDelete
 9. வணக்கம் நன்பரே,
  குருப் 2 கடினமானதாக இருக்கும் என்பது சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் குறைந்த பணியிடங்களே நிரப்ப படுகின்றன என்பதிலிருந்து புரிகிறது. குருப் 4 ல் கூட வரலாறு பாடத்தில் இருந்து கேள்விகள் மிகக் கடுமையானதாகத்தான் வந்திருந்தன. இருப்பினும் தமிழ் பகுதி கேள்விகளை எளிதாக எதிர் கொள்ள உங்களுடைய தளம் உதவியது. அதற்க்காக நன்றி.
  குருப் 2 வினை எதிர் கொள்ளக்கூடிய அளவிலான பதிவுகளையும் எதிர் பார்க்கிறேன். இப்பொதுதான் நான் முதல் முறையாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராக முயல்கிறேன். அதனால் முந்தைய தேர்வுகளைப் பற்றிய புரிதல் ஏதும் இல்லை. முன்முடிவு ஏதும் இல்லாமல் தேர்வுக்கு தயார் ஆவதில் உள்ள வசதி என்னிடம் உள்ளது. வரும் பதிவுகளில் குருப் 2 தேர்வுக்குத் தேவையான தகவலுடன் இப்போது உள்ள பாடத்திட்ட அடிப்படையில் பயனளிக்கும் வலைத்தளங்களின் தொடர்புகள் கிடைத்தால் பயனளிக்கும். தொடர்ந்து இச்செய்திகளை பதிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பாடத்திட்டம் ஏதும் மாறவில்லை..வினாத்தாள் அமைப்பு மட்டுமே மாறியிருக்கிறது.தொடர்ந்து பதிவை வாசித்து வாருங்கள்..உங்களுக்கு பயன் தரக்கூடும். மற்ற தளங்களைப் பற்றி தெரியவில்லை.

   Delete
  2. மற்ற தளங்கள் என்று நான் கேட்பது link related to tnpsc group 2 that could have info like general knowledge. ஏன் என்றால், சில வலைத்தளங்கள் தகவல்தேடும் பொழுது தேவையற்ற செய்திகளையே தருகின்றன. இதனால் படிக்கும் நேரத்தினை (சிறிது நேரமேனும்)இழக்கிறேன். என்னுடைய ஒரு நண்பன் இதுவரை 5 அரசுப் பணிகளின் தேர்வுகளை எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளான். அவனுடைய தயாரிப்பு முறை சுயமானது, ஆனால் இப்பொழுது அவனுக்கு கிடைக்கும் வெற்றிகளுக்காக தன் வாழ்வின் 5 வருடங்களை செலவழித்துள்ளான். ஆனால் என்னைப்போன்றவர்களுக்கு இவ்வளவு நேரங்களை செலவு செய்வதில் பயன் இல்லை. ஆகவே தாங்கள் பதிவுகளை வெளியிடும் போது மிகவும் பயனுள்ள தங்களுக்கு கிடைக்கும் தரவுகளின் முலங்களின்(source) நேரடி பேட்டி முறையிலும் கூட வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களின் சேவையை மேலும் எதிர்பார்கிறேன்.

   Delete
 10. தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி. குரூப் 2 விற்கு எந்த அடிப்படையில் தயாராக வேண்டும் என்பதற்கான Blue Print ஏதேனும் இணையத்தில் கிடைக்குமா? இருந்தால் பதிவேற்றுங்கள் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. அருமை அருமை நண்பரே.. உங்கள் சேவை பாராட்டதகுந்தது..
  உங்கள் சேவை தொடர வேண்டும்.. வாழ்த்துக்கள் நண்பரே..
  நன்றிகள்..

  ReplyDelete
 12. அருமை அருமை நண்பரே.. உங்கள் சேவை பாராட்டதகுந்தது..
  உங்கள் சேவை தொடர வேண்டும்.. வாழ்த்துக்கள் நண்பரே..
  நன்றிகள்..

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com