புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி-ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

டி.என்.பி.எஸ்.சி-ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
        வணக்கம் தோழர்களே..பெரும்பாலும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்தே அதற்கு மிகச் சரியான தமிழ் வார்த்தை கண்டறிக என வினா அமையும்.எனவே சில வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். இன்னும் சிலவார்த்தைகளை சொல்லிப்பார்த்து பயிற்சி எடுங்கள்.

ஆங்கிலச்சொல்   தமிழ்ச்சொல்     ஆங்கிலச்சொல்     தமிழ்ச்சொல்
Admission                        சேர்க்கை              Agency                              முகவாண்மை
Accident                          நேர்ச்சி                   Automobile                        தானியங்கி
Bench                              விசிப்பலகை       Binding                              கட்டமைப்பு
chalk piece                       சுண்ணக்கட்டி    Ever silver                          நிலைவெள்ளி
Lorry                               சரக்குந்து              Plastic                                நெகிழி
Photocopy (Xerox)          ஒளிப்படி              Company                           குழுமம்
Tea  Stall                         தேனீர் அங்காடி Document                          ஆவணம்
Passport                          கடவுச்சீட்டு        Visa                                    நுழைவு இசைவு
Champion                        வாகை சூடி          Proposal                            கருத்துரு
Visiting card                     காண்புச்சீட்டு    Central Government            நடுவண் அரசு
Agent                              முகவர்                  Allergy                               ஒவ்வாமை
Technical                         தொழில்நுட்பம்  Key                                   திறவுகோல்
Irregular                          ஒழுங்கற்ற          Licence                              உரிமம்
Lift                                  மின்தூக்கி            Laptop                               மடிக்கணினி
Planet                             கோள்                     Search Engine                    தேடுபொறி
Fax                                தொலை நகலி    Missile                               ஏவுகணை
Bonafide                        ஆளறி சான்றிதழ் Deposit                           இட்டு வைப்பு
Receiver                        அலை வாங்கி     Print out                             அச்சுப் படி
Tele Print                       தொலை அச்சு     Telex                                  தொலை வரி
Password                      கடவுச் சொல்      Mammal                              பாலூட்டி
Photo Graph                  நிழற்படம்             Insurance                            ஈட்டுறுதி
Assurance                     காப்பீடு                   Traitor                                 துரோகி
Attestation                     சான்றொப்பம்     Fiction                                புனைக்கதை
Compounder                 மருந்தாளுநர்      Research Centre                 ஆராய்ச்சி நிலையம் E-Mail                          மின்னஞ்சல்         Probationary Period            தகுதிகாண் பருவம்
Temporary                    தற்காலிகம்          Mortuary                            பிணக்கிடங்கு
Permanent                     நிரந்தரம்                Keyboard                          விசைப்பலகை
 Attendance  Register     வருகைப் பதிவேடு    Interview                  நேர்காணல்

Ultra Sound Scanning    மீயொலி வரிக் கண்ணோட்டம்
Remote Sensing            தொலை உணர்தல்
Acknowledgement Card  ஒப்புகை அட்டை
=========================================================================
 பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
=========================================================================
                                                                                                                                         அன்புடன்..
பதிவை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பில் செல்லவும்.


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

14 comments:

 1. திருத்தங்கள் சில..

  தொழில்நுட்பம் என நீட்டிக்கொள்ள வேண்டாம், நுட்பம் போதும். விசிட்டிங் கார்ட்டுக்கு ஏலவே முகவரி அட்டை எனும் எளிய சொல் புழக்கத்திலுள்ளதே.
  Liftக்கு தூக்கி போதும் மின் என்ற முன்னொட்டு தேவையில்லை. Proposalக்கு முன்னீடே சாலச் சிறந்தது. Receiver-பெறுவி, champion - வாகையர், fiction - புனைவு, புனைகதை. Visa - அனுமதி போல் நுழைமதி. தகுதிகாண் என்பது qualifying, qualification போன்ற பொருளில் ஆளப்படுவது. துரோகி, நிரந்தரத்துக்கு மாற்றாய் நல்ல தமிழ்ச்சொல் தேடியிருக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. தோழரே..கருத்திடுவதோடு நில்லாமல் தங்கள் பெயரையும் குறிப்பிடுங்கள்..தமிழ் வார்த்தையை மொழி பெயர்க்க ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதே பிரச்சனை.நான்கு பேர் நான்கு பொருளைச் சொல்வார்கள்.ஆனாலும் சொல்லுக்கு பொதுவான பொருள் என்று ஒன்று உண்டு அதுவே இப்போதைய தேவை.Technical என்றால் தொழில்நுட்பம் தான்.அதில் மாற்றுக்கருத்து இல்லை.technic என்றாலே நுட்பம்.இங்கே கொடுக்கப்படும் lift என்ற வார்த்தை மின் தூக்கி என்றே மொழி பெயர்க்கப்படும்.lift என்ற வார்த்தையை முதலில் நாம் பயன்படுத்தியதே மின் தூக்கியை சொல்லத்தான் என்பதை மறந்திடவேண்டாம்.வெறுமனே தூக்கி என சொல்ல இயலாது.பொருள் மாறுபடும்.proposal க்கு கருத்துரு தான் சரி..முன்னீடு என்று விடைகளில் இருக்காது கவனம்.. .Receive என்றால் பெறு ஆகையால் Receiver என்றால் பெறுவி என சொல்கிறீர்கள்.Receiver என்ற வார்த்தையை நாம் முதலில் பயன்படுத்தியதே அலைவாங்கியை அழைக்கத்தான் என்பது நினைவிருக்கட்டும்.பெறுவி என்பதற்கு வாங்கு என்று பொருள்.சரியாகச் சொன்னால் பிள்ளைபெறுவித்தல் என பொருள்.champion - வாகையர் எனச் சொல்கிறீர்கள். வாகையர் என்பது பன்மை.வாகையர் என்றால் வென்றவர்கள் எனப் பொருள் தரும் அது எப்படி பொருந்தும்.இங்கே ஒருமைதான் பயன்படுத்த வேண்டும்.வெற்றியாளன்,வென்றவன் என பலவாறு சொன்னாலும் வாகை சூடி என்பதே பொருத்தம்.Visa - அனுமதி போல் நுழைமதி என்கிறீர்கள்.. அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.Visa என்றால் தற்போது நுழைவு இசைவு தான். Probationary Period என்றால் தகுதிகாண் பருவம்.qualification -தகுதி. குழப்பம் வேண்டாம்.துரோகி, நிரந்தரம் சுத்த தமிழாக இல்லாவிட்டாலும் பயன்பாட்டில் இருப்பதால் வேறுசொல் தேவையில்லாமற்போய்விட்டது.இதுவரை தேர்வுகளில் கேட்கப்பட்ட தொகுப்பே இது ..உங்கள் கருத்துக்கு நன்றி..

   Delete
 2. நன்று.தொடருங்கள்

  ReplyDelete
 3. padhivu payanulladhaaga irundhadhu nandri
  surendran

  ReplyDelete
 4. tholara vanakam my name is aruna tnpsc exam ku thankalathu website romba use full a eruku ungalathu pani thodara ennudaya valthukkal

  ReplyDelete
 5. Mr.Madhu excellent explanantions for all queries.Thanks.
  Aside to all: Mr.Madhu has collected from previous question papers and everyone must have to read this page to score atleast 2 marks from non tamizh word to tamizh word translation.

  It's pleasure to have many important words in a single place.

  ReplyDelete
 6. Hi friend i am mathan i am prepare for tnpsc exam the explanation is really help me a lot thanks friend i am sorry to use the word friend

  ReplyDelete
 7. "Tea Stall - தேனீர் அங்காடி" - னு பதிவு செய்திருக்கிங்க, தேனீர் இல்லை தேநீர் தான் தமிழ் சொல் என்று தெரியும் அல்லவா, பிறகு ஏன் வழுஉச் சொல் பயன்படுதிருக்கிங்க? காரணம் ஏதும் இருக்கிறதா?

  ReplyDelete
 8. powerpoint என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை கூற முடியுமா?

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com