புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி - வேற்றுமைத்தொகை கண்டறிதல்

டி.என்.பி.எஸ்.சி - வேற்றுமைத்தொகை கண்டறிதல்

                              வேற்றுமை தொகை

             இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வர சொற்கள் நிற்பது வேற்றுமைத் தொகை ஆகும். முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

வேற்றுமை உருபுகள் 8 வகைப்படும்

                                                            1  - உருபு இல்லை
                                                            2  -ஐ
                                                            3 -ஆல்
                                                            4 -கு
                                                            5 -இன்
                                                            6 -அது
                                                            7 -கண்
                                                            8 -உருபு இல்லை

             மேற்கண்ட உருபுகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்..

1.முதலாம் வேற்றுமைத் தொகை

        பொருளின் இயல்பான பெயரே முதல் வேற்றுமை தொகை. இதற்கு உருபு
இல்லை.

இதன் வேறு பெயர்கள்:

அ. எழுவாய் வேற்றுமை
ஆ. பெயர் வேற்றுமை


(எ.கா) கந்தன் வந்தான்
             ராமன் வந்தான்

2.இரண்டாம் வேற்றுமைத் தொகை (ஐ)

         பால் குடித்தான் - பாலைக் குடித்தான் / மறைந்த உருபு “ஐ”
        மொழி கற்றான் - மொழி+ஐ+கற்றான்
        சிலை செய்தான் - சிலை+ஐ+செய்தான்.
        காளை போன்றவன் - காளை+ஐ+போன்றவன்
        இல்லறம் துறந்தான் - இல்லறம்+ஐ+துறந்தான்
        கோயில் கட்டினான் - கோயில்+ஐ+கட்டினான்.

                இவ்வாறாக “ஐ” என்ற உருபு மறைந்து காணப்படும்.

3,மூன்றாம் வேற்றுமைத்தொகை (ஆல்) - (ஓடு)

      பேனா எழுதினான்
     (ஆல்) - பேனாவால் எழுதினான்
      தலையால் வணங்கினான்
      மரம் வாளால் அறுபட்டது
      புலவரால் பாடப்பட்ட பாட்டு

(ஓடு) - கடிதம் பணம் வந்தது - கடிதத்தோடு பணம் வந்தது
              தாய் தந்தை வந்தார் - தாயோடு தந்தை வந்தார்

4.நான்காம் வேற்றுமைத் தொகை (கு)

      நோய் மருந்து - நோய்க்கு மருந்து
      மயில் போர்வை கொடுத்தான் - மயிலுக்கு போர்வை கொடுத்தான்
      மான் பகை புலி - மானுக்கு பகை புலி

5.ஐந்தாம் வேற்றுமைத் தொகை (இன்) - (இல்)

     பழனி கிழக்கு மதுரை - பழனியின் கிழக்கு மதுரை
     தமிழ்நாடு வடவெல்லை திருவேங்கடம் - தமிழ்நாட்டின் வடவெல்லை
     திருவேங்கடம்
     கொடை சிறந்தவன் குமரன்-கொடையில் சிறந்தவன் குமரன்

6.ஆறாம் வேற்றுமை தொகை (அது)

     கபிலர் பாட்டு - கபிலரது பாட்டு
     கண் பார்வை - கண்ணினது பார்வை
     வினைப்பயன் - வினையினது பயன்
     மலையுச்சி - மலையினது உச்சி
     என் கை - எனது கை
     கந்தன் வீடு - கந்தனது வீடு
     மலர் நீட்டம் - மலரினது நீட்டம்
     மலை உச்சி - மலையினது உச்சி

7.ஏழாம் வேற்றுமைத் தொகை (கண்)

    பால் சுவை - பாலின்கண் சுவை
    மலை மூலிகை - மலையின்கண் மூலிகை
    கிளை பறவை - கிளையின்கண் பறவை

8.எட்டாம் வேற்றுமைத் தொகை

     இதன் வேறு பெயர் விளி வேற்றுமை.இதற்கு உருபு இல்லை.
பெயர்ச்சொல்லின் ஈடுகெடுதல், மிகுதல், திரிதல் போன்றவை எட்டாம்
வேற்றுமைத் தொகை ஆகும்.

(எ.கா) ராமன் - ராமனே
             கந்தன் - கந்தனே
------------------------------------------------------------------------------------------------------------
சந்தேகமிருப்பின் கருத்துரையில் தயங்காமல் கேட்கவும்..
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
------------------------------------------------------------------------------------------------------------

                                                                                                                                         அன்புடன்..




பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

9 comments:

  1. இதெல்லாம் எங்கேயோ படித்தது போல் இருக்கின்றது, ஆனால் கொஞ்சம் கூட ஞாபகத்தில் இல்லையே..நன்றி சார்.

    ReplyDelete
  2. ஐயா,

    ஆறாம்,ஏழாம் வேற்றுமைத் தொகையான அது,கண் ஆகியவற்றிற்கு என்ன பொருள்.

    மேலோட்டமாக பார்த்தால், கீழே குறிப்பிட்டவாறு பொருள் தருகிறது.
    அது - It, That
    கண் - Eye

    Regards,
    Siva

    ReplyDelete
    Replies
    1. அது வேண்டுமானால் சரி..ஆனால் கண் என்பதன் மற்றொரு பொருள் 'உள்ள' எனக் கொள்ளலாம்.

      உதாரணமாக மலையின்கண் யானை
      இது ஏழாம் வேற்றுமைத்தொகை

      மலையில் உள்ள யானை என பொருள்படுத்தலாம்

      Delete
  3. வணக்கம்
    TNPSC தேர்வுக்கு அருமையான வழிகாட்டி
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete
  4. Sir,

    I think TNPSC General Tamil syllabus has been changed. If yes, please update it sir. I tried to write in Tamil. But here there is no such option. So dont mistake me sir

    ReplyDelete
  5. ஏழாம் வேற்றுமைத் தொகையான ,கண் என்பதன் பொருள் என்ன .

    ReplyDelete
    Replies
    1. கண் என்பதன் மற்றொரு பொருள் 'உள்ள' எனக் கொள்ளலாம்.

      உதாரணமாக மலையின்கண் யானை
      இது ஏழாம் வேற்றுமைத்தொகை

      மலையில் உள்ள யானை என பொருள்படுத்தலாம்.

      Delete
  6. Sir irandam vvetrumai urubum payanum udan thokkath thogaiku vilakkam koora mudiyuma

    ReplyDelete
  7. ஐந்தாம் வேற்றுமை தொகையில் ஒரு ஐயம்,
    பழனி கிழக்கு மதுரை - பழனியின் கிழக்கு மதுரை இதனை
    பழனிக்கு கிழக்கு மதுரை
    தமிழ்நாடு வடஎல்லை திருவேங்கடம் - தமிழ்நாட்டின் வடஎல்லை திருவேங்கடம் இதனை
    தமிழ்நாட்டிக்கு வடஎல்லை திருவேங்கடம்
    இவற்றுள் எது சரி, விளக்குக.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com