அளபெடை
வணக்கம் தோழர்களே..அளபெடையில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம்.ஆகவே இதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.
அளபெடை
ஓர் செய்யுளில் ஓசை குறையும்போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.
அ.உயிரளபெடை
ஆ.ஒற்றளபெடை
1.உயிரளபெடை
உயிரெழுத்தைத் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது
உயிரளபெடையாகும்.
செய்யுளிசையளபெடை (அ)
இன்னிசையளபெடை (உ)
சொல்லியைளபெடை (இ)
என இது வகைப்படும்.
செய்யுளில் ஓசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர் நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசையளபெடை என்பதாகும். இதன் வேறு பெயர் இசைநிறையளபெடை.
(எ.கா) தொழாஅர்
உழாஅர்
நல்ல படா அ
ஆதூம்(ஆஅதூம்)
ஓஓதல்
நடுவொரீஇ
தூஉம், தொழுஉம், தரூஉம், வெரூஉம்
சொல்லிசையளபெடை (இ)
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் பெயர்ச்சொல்லை வினையெச்ச
சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவதே சொல்லிசையளபெடை
என்பதாகும்.
(எ.கா) குடிதழீஇ
அடிதழீஇ
உரனசைஇ
செய்யுளில் ஓசை குறையாதபோதும் செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு உயிர்குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசையளபெடை ஆகும்
(எ.கா) உண்பதூஉம்
கொடுப்பதூஉம்
உடுப்பதூஉம்
2.ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்யும்பொருட்டு சொல்லில் மெய்யெழுத்து அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை என்பதாகும்.இதில் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வரும்.
(எ.கா) கண்ண் கருவினை
கலங்ங்கு நெஞ்சமில்லை
இலஃஃகு முத்தின்
மடங்ங்கலந்த.
சந்தேகங்ககளை கருத்துரைப் பெட்டியில் கேட்கவும்..
பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
அன்புடன்..
பதிவை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் இடுகைகள். நன்றி மதுமதி.
ReplyDeleteநடுவொரீஇ this word added in seeyulisaialabedai is this correct sir?
ReplyDelete