புது வரவு :
Home » , , , » குரூப் 2 வினாத்தாள் 80 லட்சத்திற்கு விற்பனையா?அதிர்ச்சி தகவல்

குரூப் 2 வினாத்தாள் 80 லட்சத்திற்கு விற்பனையா?அதிர்ச்சி தகவல்

            தமிழகம் முழுவதும் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வினாத்தாள் வெளியானதால் 12.8.12 அன்று நடந்த அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு போலீசார் தனக்கொடி,அவரது கணவர் செந்தில்,வரதராஜன்,சுதாகர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.இதில் வரதராஜனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் போது திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தன.

           ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த வரதராஜனுக்கு குரூப் 2 தேர்வு வினாத்தாள் சென்னையைச் சேர்ந்த பாலன் என்பவரிடத்தில் இருப்பது தெரிய வந்தது. அவர் பாலனை தொடர்பு கொண்டு கேட்டபோது ,பாலன் பல லட்சங்கள் பேரம் பேசியுள்ளார். இறுதியில் 80 லட்சம் கொடுப்பதாக முடிவானது. எனவே பாலன் சென்னையில் இருந்து 11 ந்தேதி வினாத்தாளை அனுப்பி வைப்பதாக தெரிவித்து உள்ளார்.

          உடனே வரதராஜன்,செல்வராஜ்,தர்மராஜ் மற்றும் சிலர் நாமக்கல்லில் உள்ள ஒரு லாட்சில் தங்கியுள்ளனர்.பாலன் குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாளை அனுப்பவில்லை.செல்போனில் பேசினால் தகவல் வெளியாகிவிடும் எனக் கருதிய வரதராஜன் பாலனிடம் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டார்.பின்னர் 12 ந்தேதி அதிகாலை 1 மணிக்கு பாலன் வரதராஜனின் ஈமெயிலுக்கு வினாத்தாளை அனுப்பியுள்ளார்.உடனே நாமக்கல்லில் உள்ள இணடர்நெட் உரிமையாளர் சசிகுமாரிடம் பேசி இண்டர்நெட் மையத்தை திறந்து நகல் எடுத்துள்ளார்.

         ஈரோட்டில் உள்ள செந்திலிடம் பேசி தனது ஈமெயில் உள்ள வினாத்தாளை எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.அவரும் நள்ளிரவே வரதராஜனின் மெயிலில் இருந்து வினாத்தாளை பிரிண்ட் எடுத்து பலருக்கு கொடுத்துள்ளார்.

        செந்திலின் மனைவி தனக்கொடி இரவே 1 முதல் 130 வினாக்களுக்கான பதிலை இரவே படித்துவிட்டு தான் படிக்காத 131 முதல் 200 வரையிலான வினாக்களை மட்டும் தேர்வு மையத்துக்கு எடுத்து வந்துள்ளார்.

        மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து போலீசார் வரதராஜனிடம் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.இது குறித்து திருக்கோவிலூரில் உள்ள 4 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

        பாலனுக்கு குரூப் 2 வினாத்தாள் ஈமெயில் மூலம் எப்படி கிடைத்தது என்பது பற்றி சைபர் கிரம் போலீசரும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்..
                                                                                                           -தினத்தந்தி செய்தி-

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

  1. காலகாலமாக கூறப்படும் குற்றச்சாட்டு இன்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது! களவாணிகள் அரசுத் துறையில் நீக்கமற நிறைந்துள்ளனர்!

    ReplyDelete
  2. From 2008 Group-2 exam cut off marks are goes very high (156-160 out of 200). I talk with some students who got marks 170-190. Talking with one person we can measure the knowledge of one person approximately. My point of view they are all have very poor knowledge and i wonder how they got these marks (Most of the students are from a same group of institute). Recent news shows these may be due to paper leak

    ReplyDelete
  3. அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது
    இன்னும் சிறிது நாளில் மூலவர் யாரெனத் தெரிந்துவிடும்
    என நினைக்கிறேன்

    ReplyDelete
  4. வருத்தப்படும் தகவல்... ...ம்... ? (TM 3)

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com