வணக்கம் தோழமைகளே.. இன்றைய இரவு விடிந்தால் போதும் காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கிவிடும்.இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற வேட்கையை அது அதிகரிக்கிறது.
இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத அயல்நாட்டு பதிவர்கள் கூட பதிவர் சந்திப்பை குறித்து நல்லவிதமாகவும் ஆதரவாகவும் எழுதி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி.
பதிவர்களுக்கு உணவு உட்பட சில ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் எம்மை தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம். அதன்படி பதிவர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
மண்டபத்திற்கு வரும் வழி
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள் அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.
இதேபோல் செங்கல்பட்டு,தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் 17 என்று குறியிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.
இந்த நிறுத்தத்தில் இறங்கி லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம்.
தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.
பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும் பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம்.
கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.
தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும்.
திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள் 25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.
வழிகாட்டி
பதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.
இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்
இந்த சந்திப்பில் முக்கிய நிகழ்வாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழாவும் இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.
இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கே சென்று பார்த்துக்கொள்ளவும்.
வருகை தரும் பதிவர்களின் பட்டியல்
சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
பாலராஜன்கீதா,சவூதி அரேபியா
வருகை தரும் பதிவர்களின் பட்டியல்
சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
ரஹீம்கஸாலி,அரசர்குளம்
பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்
கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
சுரேகா,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்
கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
சுரேகா,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
ஸ்ரவாணி(தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை
ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை
குகன்(குகன் பக்கங்கள்)சென்னை
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
கிராமத்து காக்கை ,சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை
சேட்டைக்காரன் ,சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை
மணி(ஆயிரத்தில் ஒருவன்) சென்னை
குருபிரசாத்(இந்தியன் குரல்)சென்னை
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
நா.சுரேஸ்குமார்(அறிவுக்கடல்)காஞ்சீபுரம்
மாடசாமி(வானவில்)சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை
ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை
குகன்(குகன் பக்கங்கள்)சென்னை
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
கிராமத்து காக்கை ,சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை
சேட்டைக்காரன் ,சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை
மணி(ஆயிரத்தில் ஒருவன்) சென்னை
குருபிரசாத்(இந்தியன் குரல்)சென்னை
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
நா.சுரேஸ்குமார்(அறிவுக்கடல்)காஞ்சீபுரம்
அருணன் கோபால்(கவிவனம்)
எண்ணங்களுக்குள் நான்(ஃபாரூக் முகமது)மங்கள நாடு)
லெனின்(கேணக்கிருக்கன்)கீரமங்கலம்
எண்ணங்களுக்குள் நான்(ஃபாரூக் முகமது)மங்கள நாடு)
லெனின்(கேணக்கிருக்கன்)கீரமங்கலம்
மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
பலே பிரபு(கற்போம்)பெங்களூரு
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூருசித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
பலே பிரபு(கற்போம்)பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
பாலராஜன்கீதா,சவூதி அரேபியா
தொடர்பு கொள்ள:
உங்களுக்கு மண்டபம் வருவதில் ஏதும் சிரமம் இருப்பின் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் நண்பர்கள் மண்டபம் வர உதவுவார்கள்/ வழி சொல்லுவார்கள் :
மெட்ராஸ் பவன் சிவகுமார் - 98416 11301
ஆரூர் மூனா செந்தில் - 8883072993
வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சங்கமிப்போம்..
அன்புடன்,
மெட்ராஸ் பவன் சிவகுமார் - 98416 11301
ஆரூர் மூனா செந்தில் - 8883072993
வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சங்கமிப்போம்..
அன்புடன்,
நேற்றிரவு தான் எனக்கான வழி கிடைத்தது.நானும் வருகிறேன்.சந்திப்போம்
ReplyDeleteமண்டபத்திற்கு வரும் வழியை விபரமாக சொன்னதற்கு நன்றி. நாளை சந்திப்போம் கவிஞரே! பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமிழ் வலைப்பதிவர் ‘திருவிழா’ மிகச் சிறப்பாக நடைபெற மீண்டும் மீண்டும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநிரலை இணைத்துக் கொண்டேன்.
தங்களுக்கும் வலையகத்துக்கும் என் நன்றி.
மிக மிக அருமையாக தகவல்களை
ReplyDeleteபகிர்ந்துள்ளீர்கள்.மிக்க நன்றி
தங்கள் பதிவு செய்துள்ள எதிர்பார்ப்புகளை
நிச்சயம் கடைபிடிப்போம்
பகிர்வுக்கு மிக்க நன்றி
பதிவர்களின் திருவிழா என்று இனி ஆகஸ்ட்-26 ஐ ஒவ்வொரு வருடமும் குறிப்பிடலாம் போல.. மிக சிறப்பாக அமைந்திருக்கிறது உங்கள் முயற்சிகள். விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.
திருவிழா சிறப்புடன் நடந்தேற வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDeleteநன்றி! மதுமதி! தங்கள் உழைப்பு மகத்தானது என்பதை எடுத்துச் சொல்ல
கடமைப் பட்டுள்ளேன்!
விரிவான தகவல்களுக்கு நன்றி !
ReplyDeleteவிழா .....
கனி போல இனிக்கட்டும் !
பனி போல குளிரட்டும் !
அணி போல சிறக்கட்டும் !
திருஷ்டி சுத்தி போடவும் கண்டிப்பாக .
சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களது உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள். அதிலும் பதிவர்களுக்கு சொன்ன அறிவுரைகள் அற்புதம். பதிவர் குழும சந்திப்பு எந்த நோக்கத்திற்காக நடைபெறுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு வெற்றிகரமான திருவிழாவாக அறங்கேர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனது தளத்தில்
ஜிமிக்கி + படையப்பா + சாமு!
விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல தகவல் நான் தான் வ்ர இயலாது.ஹ்ஷ்ஷ்..பகிர்விற்கு நன்றி:)
ReplyDeleteசந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்! (TM 10)
ReplyDeleteநாளை சந்திப்போம் நண்பரே...
ReplyDeleteவிழா சிறப்புற வெளிநாட்டு பதிவர்கள் சார்பில் வாழ்த்துகள்.
ReplyDeleteமாநாடு மலை போல் வெற்றியடைய மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன்...
ReplyDeleteஉங்கள் மீது அமைதி நிலவுவதாக...
ReplyDeleteசூப்பர் ரூல்ஸ் சகோ. கலக்குங்க. விழா அசத்தலாக நடைபெற என் பிரார்த்தனைகள்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
வணக்கம்,
ReplyDeleteசென்னையில் நடக்கும் நம் உறவுகளின் "தமிழ் பதிவர்கள் விழா" இனிதே நடைபெற வாழ்த்துக்கள். இந்த நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது. நான் அயல் நாட்டில் உள்ளதால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை, இருந்தும் இந்த நிகழ்வு மிக பெரிய வெற்றி அடைய இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள் என்றென்றும் அணைத்து பதிவு உறவுகளுக்கும் இருக்கும். நன்றி!
நேரில் கலந்து கொள்ள இயலவில்லையே என்னும் கவலையுடனும், நேரலையில் கண்டு களிக்கும் மகிழ்ச்சியுடனும் காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅன்புச்சகோதரன்
மஸ்தூக்கா
நேரில் வந்து கலந்து கொள்ள இயலவில்லையே என்னும் கவலையோடும், நேரலையில் கண்டு களிக்கப் போகும் மகிழ்ச்சியோடும் காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅன்புச் சகோதரன்
மஸ்தூக்கா
நண்பர்கள் அனைவரும் சந்தித்து விழா சிறப்புடன் நடைபெற அன்பு வாழ்த்துகள் அனைவருக்கும்...
ReplyDeleteஅடுத்த வருடம் தான் நாங்கள் வர இயலும்....
அனைவருக்கும் மீண்டும் அன்பு வாழ்த்துகள்..
விழா சிறப்பாக நடக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவர முடியவில்லை இருந்தாலும்...
காலையில் பத்து மணிக்கு டாண்ணு ஆஜராகிடறேன்....
நேரடி ஒளிபரப்பு பார்க்கத்தான்...
பயனுள்ள வழிகாட்டும் தகவல்!.
ReplyDeleteநடக்க இருக்கும் இப்பதிவர் நிகழ்ச்சி இனிதே நடந்தேற மனமார்ந்த வாழ்த்துகள்.
சலாம் சகோ.மதுமதி..!
ReplyDeleteஅட்டகாசமான கருத்துக்கள்..!
அவசியமான ஆக்கப்பூர்வமான பதிவு..!
எண்ணங்கள் அனைத்தும் இனிமை..!
அவை அதிகாரபூர்வமானவை எனபதால் இன்னும் அருமை..!
மிக்க நன்றி சகோ.கவிஞர் மதுமதி..!
கலந்து கொள்ள இயலாத சூழல்...
(இந்தியா வர தற்போது என்னிடம் விடுமுறை இல்லை)
...இருப்பதால் மிக்க ஏக்கத்துடன் உள்ளேன்..!
எனினும் சென்னை பதிவர் சந்திப்பு விழா மகத்தான வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்..!
இதற்காக உழைக்கும் அனைவருக்கும் மிகவும் நன்றி..!
சிங்கார சென்னையில் " தமிழ் பதிவர்களின் சங்கமம் "
ReplyDeleteவிழா இனிதே நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
பி.கு. வரும் காலங்களில் பதிவர் சங்கமம் சென்னையில் நடப்பதாக இருந்தால், புத்தக கண்காட்சி முடிவுறும் அடுத்த நாளில் பதிவர்களின் சங்கமம்
விழா நடைபெற்றால் வெளியூர்களில் இருந்து வரும் நபர்களுக்கு இரட்டை வாய்ப்பு கிட்டுமல்லவா ..!! யோசித்து முடிவெடுக்கவும் ..நன்றி நாசர் குவைத்
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். சில தனிப்பட்ட காரணங்களினால் வர இயலவில்லை மன்னிக்கவும். :-((((
ReplyDeleteதிருவிழா அமர்க்களமாக நடந்தேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுமதி சார்!
ReplyDeleteஅன்பு சகோ மதுமதி...
ReplyDeleteசிறப்பானதொரு நிகழ்வு!!! அதற்கு முன்னோட்டமாக பதிவர்களிடம் தெளிவான எதிர்ப்பார்ப்புகள்
விழா, எதிர்ப்பார்பதை விட சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுடன்.
பதிவர்களின் சகோதரன்
குலாம்.
பெரும் பட்டியல் அய்யா! பதிவர்களுக்கான எதிர்பார்ப்புகளைச் சொல்லியிருப்பதும் அருமை! நிகழ்வு நல்லபடியாக நடந்து சிறக்கட்டும்! முன்னெடுப்புக்கும் முயற்சிகளுக்கும் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்!
ReplyDeleteஇந்த பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் கடல் கடந்து வாழ்ந்தாலும், உங்கள் அனைவரின் சந்திப்பும் சிறந்த முறையில் நடைபெற வாழ்த்துகிறேன். கலந்துக் கொள்ளும் பதிவர்களுக்கான விதிமுறைகளும் அருமை. உங்களின் உழைப்பு வெற்றியடையட்டும் சகோ மதுமதி!
ReplyDelete//3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்/// :)))
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்.. மலேசியாவில் இருந்து... :)
அன்பின் மதுமதி,
ReplyDeleteஅரிய முயற்சி, விழா சிறப்புடன் நடைபெற அன்பு வாழ்த்துகள்பா...