வணக்கம் தோழர்களே..எப்படியிருக்கிறீர்கள்? செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். மட்டுமின்றி விரைவில் நடைபெறவிருக்கும் ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பீர்கள்.வாழ்த்துகள்..
பணிச்சுமை காரணமாக தேர்வு சம்பந்தமான பதிவுகளை இடமுடியவில்லை. ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இனி தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.
இறுதியாக நடந்த இரண்டு தேர்வுகளின் வினாக்களை ஆராயும் போது தமிழ்,தமிழ் இலக்கியம்,தமிழ்நாடு போன்ற தலைப்புகளின் கீழ் கிட்டத்தட்ட 120 வினாக்கள் வரை வந்திருப்பதை அறிவோம். இவற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம் ..
பொதுத்தமிழ் 100 வினாக்களுக்கான பதிவுகளை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.அதை வாசிப்பவர்கள் இங்கே சென்று வாசித்துக் கொள்ளவும்.இன்றைய பதிவிலிருந்து தமிழகம் பற்றிய செய்திகளை பதிகிறேன். இனி மேல் இடும் பதிவுகளை இலவசமாய் மின்னஞ்சல் மூலம் பெற வேண்டும் என விரும்பினால் பதிவின் கீழே உள்ள பெட்டியில் தங்களின் மின்னஞ்சல் முகவரியை இட்டு தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. ஒவ்வொரு பதிவும் உங்கள் மின்னஞ்சல் தேடி வந்துவிடும்..
தமிழ்நாடு மாநிலக் குறியீடுகள்
மாநிலச் சின்னம் - திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
(இது 108 வைணவ திருத்த தலங்களில் ஒன்றாகும் .1949 ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.தென்னிந்தியாவின் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று)
மாநில விலங்கு - நீலகிரி வரையாடு
(மேற்குத்தொடர்சி மலைகளில் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கிறது)
மாநில மலர் -செங்காந்தள் அல்லது கார்த்திகைப்பூ
மாநில பறவை -மரகதப் புறா
மாநில மரம் -பனை மரம்
மாநில விளையாட்டு - கபடி
மாநில பாடல் - தமிழ்த்தாய் வாழ்த்து
(மனோமணீயம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது)
இப்பதிவை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
தொடரட்டும் சேவை (TM 1)
ReplyDeleteநன்றி..!
ReplyDeleteத.ம.2
ReplyDeleteபல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்!
தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு..நன்றி அண்ணா..
ReplyDeleteபலருக்கும் உதவும்... நன்றி... (TM 5)
ReplyDeleteகிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!
Thanks Madhu Sir.......
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தொடருங்கள்
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDelete