வணக்கம் தோழமைகளே.. தேர்வில் வெல்லும் நோக்கோடு பாடங்களைப் படித்துக் கொண்டிருப்பீர்கள்.. நம் தளத்தில் இட்டுவரும் பதிவுகளும் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன். இந்தமாதம் 30 ந் தேதி நடக்கவுள்ள கிராம நிர்வாக அலுவலர்க்கான தேர்வு நடக்கவுள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மறு தேர்வு நடக்கவுள்ளது.எனவே இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து திட்டமிட்டு படித்துக் கொள்ளுங்கள்..
நான் அடிக்கடி சொல்வது என்னவென்றால் குரூப் 4(வி.ஏ.ஓ) தேர்வுக்கும் குரூப் 2 தேர்வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.எனவே வி.ஏ.ஓ தேர்வு பத்தாம் வகுப்பு தகுதிக்கானது தானே என்று அலட்சியமாக இருந்துவிடவேண்டாம்.
சரி தோழர்களே குரூப் 4 தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.ஆந்தத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் இப்போதே தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பத்திருக்கும் தோழர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று தங்களின் விண்ணப்ப படிவ எண்ணை கொடுத்து குரூப் 4 க்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !