வணக்கம் தோழர்களே.. நடக்கவிருக்கும் குரூப் 2 தேர்வுக்கு இன்னும் நாட்கள் குறைவாகத்தான் இருக்கிறது. எனவே நன்றாக தயாராகிக் கொள்ளுங்கள். சென்ற வருடம் நடந்த குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் ஆரம்பமாக இருக்கிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்ளப்போகிறார்கள். அதைத் தவிர இன்னும் 3000 க்கும் மேற்பட்ட இடங்கள் அதாவது எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
சென்ற குரூப் 2 தேர்வு எழுத்துத்தேர்வில் தேர்வானவர்களின் மதிப்பெண்களை மட்டுதான் அரசு வெளியிட்டது. தேர்வாகாதவர்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளமுடியவில்லை. இப்போது அவர்களும் தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளும் வகையில் தேர்வாணையம் ஏற்பாடு செய்திருக்கிறது.உங்களின் மதிப்பெண்களைக் காண இங்கே சென்று உங்களின் குரூப் 2 (2011) தேர்வு எண்ணைக் கொடுத்து க்ளிக்கினால் உங்கள் மதிப்பெண்கள் தெரியும்..
சென்ற குரூப் 2 தேர்வானது கிட்டத்தட்ட 6000 க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டதாகும். இப்போது நடக்கவிருக்கும் குரூப் தேர்வு அதில் பாதி இடங்களுக்கானதுதான்.எனவே போட்டி பலமாக இருக்கும்..
சென்ற தேர்வில் தோல்வியைத் தழுவியவர்களுக்கும் பணி நியமன அழைப்பு வரும் எனறு எதிர் பார்க்கபடுகிறது.அதாவது 6000 க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பத்தான் சென்ற வருடம் தேர்வு நடந்தது.அதற்கான ஆட்களையும் தேர்வு செய்தாகிவிட்டது.அதன் பிறகு இன்னும் கூடுதலாக இடங்கள் காலியாக இருப்பதால் அந்த 6000 பேர்களைத் தவிர இன்னும் சில பேருக்கு பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.அதைப்பற்றி தேர்வாணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை.அப்படி நடந்தால் இன்னும் சிலருக்கு நேரடி நியமனம் கிடைக்கும்.எனவே உங்கள் மதிப்பெண்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்..
சரி தோழர்களே.. பாட வாரியாக குரூப் 2 க்கு தேவையான முக்கிய வினா விடைகளை பதிவிட ஆரம்பிக்கிறேன். இந்த தளத்தில் எப்போதும் போல தொடர்ந்து பதிவுகள் வெளியாகும்.. ஆனால் பாடவாரியாக முக்கிய வினா விடைகளை வெற்றி நிச்சயம் என்னும் புதிய தளத்தில் பதிவிட ஆரம்பிக்கிறேன்.. டி.என்.பி.எஸ்.சி பதிவுகளை இட வேண்டும் என்பதற்காகவே இந்தத தளத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
பாட வாரியாக முக்கிய வினா விடைகளையும் உங்கள் மின்னஞ்சல் வாயிலாக பெற விரும்பினால் வெற்றி நிச்சயம் என்னும் தளத்திற்கு வந்து உங்கள் மின்னஞ்சலை வலதுபுறம் மற்றும் பதிவிற்கு கீழ் இருக்கும் பெட்டியில் பதிவு செய்து கொள்ளுங்கள்..இடும் புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் தேடி உடனே வந்துவிடும்..
இரண்டு தளங்களிலும் டி.என்.பி.எஸ்.சி சம்பந்தப்பட்ட பதிவுகள் தேர்வு நாள் வரையிலும் இடைவிடாது இடப்படும்.எனவே இரண்டு தளங்களையும் தொடர்ந்து வாசியுங்கள் ..தளங்களில் இணையாதவர்கள் உடனே இணைந்து கொள்ளுங்கள்..மின்னஞ்சல், முகநூல் மற்றும் கூகுள்+ வாயிலாகவும் தொடரலாம். இரண்டு தளங்களும் உங்களுக்கு உபயோகப்படும்..
வெற்றி நிச்சயம் தளத்தை தொடர விரும்புகிறவர்கள் இங்கே சென்று தொடரலாம்..
தேர்வில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்..
When will TNPSC release next notification for Group exams
ReplyDelete