/விருந்தினர் கவிதைகள்-4/
------------------
மூழ்கத்துடிக்கும்
என்னை விரல் கொண்டு
ஏந்திக்கொள்கிறது
வாழவும் விடாமல்
சாகவும் விடாமல்
கண்ணீரோடு காயமில்லாமல்
சித்ரவதை செய்கிறது -எனக்கு
விடுதலை கொடுக்க மறுக்கும்
உன் அந்தமான் சிறைகள் ...
வணக்கம் தோழர்களே..இது விருந்தினர் கவிதைகள் பக்கம்..இன்றைய
பக்கத்தில் கவிதை எழுதி இருப்பவர் முகநூலில் என்னோடு சேர்ந்து பயணிக்கும்
கோயமுத்தூரை சேர்ந்த சகோதரி சுந்தரி கதிர் அவர்கள்.. மதுரையில் பிறந்து கோவையில் வாசம் செய்பவர்.புகைப்படக் கவிதைகளை
சிறப்பாக எழுதக்கூடியவர்.. இவர் பல் மருத்துவர் என்பது கூடுதல் தகவல்..
சுயமரியாதை இழக்கச்செய்து
உனக்கும்
எனக்குமான
பலமான வாழ்க்கைக்கு
பாலம் கட்டுகிறது
பார்வைகள்..
உனக்கும்
எனக்குமான
பலமான வாழ்க்கைக்கு
பாலம் கட்டுகிறது
பார்வைகள்..
----------------
பெளத்தத்தின்
கட்டளைகள்
கோட்பாடுகள்
நெறிமுறைகளை
கற்றுத்தருகிறது
உன் மெளனம்..
கட்டளைகள்
கோட்பாடுகள்
நெறிமுறைகளை
கற்றுத்தருகிறது
உன் மெளனம்..
------------------
தூரமாய் இருக்கும்
உன்னையும் என்னையும்
கனவுத் தூளி கட்டி
இணைக்கிறது
உறக்கம் தொலைத்த
நம் இரவுகள்..
உன்னையும் என்னையும்
கனவுத் தூளி கட்டி
இணைக்கிறது
உறக்கம் தொலைத்த
நம் இரவுகள்..
என்னை விரல் கொண்டு
ஏந்திக்கொள்கிறது
வாழவும் விடாமல்
சாகவும் விடாமல்
கண்ணீரோடு காயமில்லாமல்
சித்ரவதை செய்கிறது -எனக்கு
விடுதலை கொடுக்க மறுக்கும்
உன் அந்தமான் சிறைகள் ...
--------------------
சுய மரியாதை
இழக்கச் செய்து
உன் இஷ்டத்துக்கு
என்னை வளைக்க
முயற்சி செய்து.,
மேலும் இவரது கவிதைகளை வாசிக்கவும் இவரோடு நட்பு பாராட்டவும்
இந்தக் கவிதையையை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..
இழக்கச் செய்து
உன் இஷ்டத்துக்கு
என்னை வளைக்க
முயற்சி செய்து.,
முடியாமற் போனதன்
தோல்வியை
தாங்கிக்கொள்ள முடியாமல்.....
இயல்பான என்
செயல்களில்யெல்லாம்
மாமியார் பார்வை பார்த்து
குறை தேடுகிறது.,
தோல்வியை
தாங்கிக்கொள்ள முடியாமல்.....
இயல்பான என்
செயல்களில்யெல்லாம்
மாமியார் பார்வை பார்த்து
குறை தேடுகிறது.,
என்னிடம் எதிரே நின்று
நேருக்கு நேர்
ஜெயிக்க முடியாத
உன் குறுக்குபுத்தி..
ஜெயிக்க முடியாத
உன் குறுக்குபுத்தி..
------------------------
சுந்தரி கதிர்
கோயம்புத்தூர்
மேலும் இவரது கவிதைகளை வாசிக்கவும் இவரோடு நட்பு பாராட்டவும்
இங்கே செல்லவும்..
இந்தக் கவிதையையை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..
ம்ம்ம் ..அருமையான கவிதைகள் சார்
ReplyDeleteயதார்த்தமான வரிகள்
நல்ல கவிதைகளை ரசித்து
அதை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கும்
உங்கள் கவிதை ரசனை
சுயநலமற்ற கவிஞர் சார் நீங்கள்
கவிஞர் என்று சொல்வதை விட ஒரு சிறந்த கவிதை ரசிகன் நீங்கள்
நன்றி செய்தாலி..
Deleteநன்றி தோழமையே...
Deleteஇயல்பான கவிதைகள் சார் .. சகோதரிக்கும் , உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அரசன்..
Deleteநன்றி தோழமையே
Deleteபார்வையில் ஆரம்பிக்கும் நேசம் தொடர்ந்து வாழ்க்கைத்துணையாகி நிலைத்து நிற்கச்செய்கிறது என்று அழகாய் சொன்ன முதல் கவிதை சிறப்பு...
ReplyDeleteமௌனத்தை விட பயங்கர ஆயுதம் கிடையாது....அது காதலுக்கும் பொருந்தும் போல.... மௌனத்தால் கொல்லாதே..... எதுவென்றாலும் சொல்லிவிடு.. பேசித்தீர்த்துக்கொள்ளலாம்.. ஹுஹும்... மௌனம் கலைத்துவிட்டால் மதிப்பு குறைந்துவிடும்... சுவாரஸ்யம் குறைந்துவிடும்... அவதிபடட்டும் இரண்டு நாட்களாவது.. இது சின்ன ஊடல் தான் காதலில்.. ஆனால் இந்த ஊடலில் மௌனம் வகிக்கும் பங்கு மிகப்பெரியது, இதை மிக அழகாக சொல்லி இருக்கிறார்....
கனவு மட்டும் இல்லேன்னா வாழ்க்கை மனிதனுக்கு போரடித்துவிடும்... தனிமையை இரவுகள் தின்றுத்தீர்க்கும்... பிரிவும் தூரமும் ஆளை மரணத்தில் கொண்டு விட்டுவிடும்... கனவு என்னும் அற்புதமான வரத்தினை கடவுள் தந்ததால் தான் காதலர்களின் இரவெல்லாம் கனவுகள் மயமாகிவிடுகிறது... அழகிய ஒப்புமை....
அந்தமான் சிறைகள் என்ற உவமை கண்களுக்கு தானே?? வாழவும் விடாமல் சாகவும் விடாமல் காயமே இல்லாமல் செய்யும் அழகிய சித்ரவதைக்கு பெயர் தான் நேசமோ? நேசிப்பவளின் கண்ணில் மணியாக நேசத்துக்குரியவன் நிற்பதையே விரும்புகிறான்... அதை அழகிய வரிகளில் தொகுத்தது சிறப்பு...
கடைசி கவிதை நச்...
இருக்கிறார்கள் இப்படியும் சில மஹானுபாவர்கள்.... மனைவியின் வெற்றியை ஜீரணிக்கமுடியாதவர்கள் சந்தேகப்பார்வையால் மனைவியை குத்திக்கிழிப்பவர்கள்... தாழ்வு மனப்பான்மையால் தன்னை குறுக்கிக்கொண்டு தன் குறுகிய புத்தியால் மனைவியை வதைப்பது..... இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...
எல்லா கவிதைகளுமே முத்துக்கள்.... அத்தனையும் ரசிக்கவைத்த முத்துக்கள்..
அழகிய முத்துக்கள் கொண்ட கவிதை பாமாலை அழகு... அன்புவாழ்த்துகள் சுந்தரிக்கதிர்...
விளக்கமானதொரு கருத்துரையை இட்டுச் சென்ற சகோதரிக்கு எனது நன்றி..
Deleteஎன் எழுத்துவழியில் பயணித்து
Deleteஅருமையாய் கருத்துக் கூறிய
தங்கள் ரசனைக்கு தலைவணங்குகிறேன் நன்றி தோழமையே...
அருமையான வரிகள் சகோவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சசிகலா அவர்களே..
Deleteநன்றி தோழமையே..
Deleteதூரமாய் இருக்கும்
ReplyDeleteஉன்னையும் என்னையும்
கனவுத் தூளி கட்டி
இணைக்கிறது
உறக்கம் தொலைத்த
நம் இரவுகள்..
>>>
கூடவே செல்போனும்ன்னு போட்டுக்கோங்க சகோ. இப்போ ட்ரெண்டுக்கு சரியாய் இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
Deleteசுய மரியாதை
ReplyDeleteஇழக்கச் செய்து
உன் இஷ்டத்துக்கு
என்னை வளைக்க
முயற்சி செய்து.,
முடியாமற் போனதன்
தோல்வியை
தாங்கிக்கொள்ள முடியாமல்.....
இயல்பான என்
செயல்களில்யெல்லாம்
மாமியார் பார்வை பார்த்து
குறை தேடுகிறது.,
என்னிடம் எதிரே நின்று
நேருக்கு நேர்
ஜெயிக்க முடியாத
உன் குறுக்குபுத்தி..
புடியுங்க சகோ பூங் கொத்த .இதப்
பக்குவமா இந்தக் கவிதையை எழுதிய
சொந்தத்தின் கையில் கொடுத்துவிடுங்கள்
அம்பாளடியாள் ஆசையோடு கொடுத்தாள் என்று !!!!:....
மனத்தைக் கவர்ந்த கவிதை !..பகிர்வுக்கு மிக்க
நன்றி வாழ்த்துக்கள் கவிதை மேலும் தொடர இந்தப்
படைப்பாளிக்கும் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் சகோ .
வருகிறேன்..இணைகிறேன்..
ReplyDeleteபூங்கொத்தை மறக்காமல் கொடுத்துவிடுகிறேன் சகோதரி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteபூங்கொத்து கொடுத்து
Deleteஎன்னை ஊக்குவித்த
தோழமைக்கு நன்றி..................
யாருக்காகவும் எப்போதும் இழக்க முடியாதது சுயமரியாதை.
ReplyDeleteஅதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோதரி சுந்தரி.
பெளத்தத்தின் பயனால் ஏதும் செய்ய முடியா கட்டுப்பட்டு
அத்தனையும் மொத்தமாய் வெளிக்காட்டினேன் மௌனமாய்.
குறை சொல்லும் மாமியார் பார்வை அழகாக பயன்படுத்தி
இருக்கிறீர்கள் ஒருசில மாமியாரை.
பயனில்லாது போனது உறக்கம் தொலைத்தும் இரவுகள்.
நேருக்கு நேர் நின்றுவிட்டால் அவர்களும் கதாநாயகர்கள்(ஹீரோ)ஆகிவிடுவார்களே... அதனால்
தான் அவர்களுக்கு இந்த குறுக்கு புத்தி.. என்ன செய்வது வீழ்ந்தாலும்
நாம் தான் ஹீரோ இங்கே... இது அந்த குறுக்கு புத்தி காரர்களுக்கும்
நன்றாக தெரியுமே...
பாராட்டுக்கள் சகோதரி அருமையான வெளிப்பாடு...
அன்பான நண்பர் மதுமதி தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
பயனுள்ள உங்களின் இந்த சேவைக்கு.
மிக்க நன்றி தோழமையே................
Deleteஉங்கள் கவிதைகள் சிலவற்றை முகநூலில் படித்திருக்கிறேன்..விருந்தினர் கவிதைகள் பக்கத்தில் இடம்பெற்று இருக்கும் கவிதைகள் அருமை.நீங்கள் ஏன் வலைப்பூ இன்னும் தொடங்கவில்லை.தொடர்ந்து கவிதைகள் எழுத வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி தோழமையே
Delete//
ReplyDeleteஅருமை! கவிதை எழுதிய கதிருக்கும் கண்டெடுத்துப் போட்ட தங்களுக்கும் மிக்க நன்றி!
நன்றி ஐயா..வருகைக்கும் கருத்துக்கும்..
Deleteஅன்பின் மதுமதி - மஞ்சுபாஷினியின் பார்வையில் குறுங்கவைதைகள் விமர்சனம் அருமை - நான் வழி மொழிகிறேன் - நல்வாழ்த்துகள் கவிஞருக்கு - நட்புடன் சீனா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..
Deleteமிக்க நன்றி ஐயா....
Deleteமிகவும் நன்றி சகோ.....என்னையும் என் தோழமையையும்..மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் நீங்கள்.ரெம்ப சந்தோஷமாக உள்ளது...மிக்க நன்றி
ReplyDeleteவாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை
காணிக்கையாக்குகிறேன் ...
சிறப்பான கவிதைகளின் நல்ல பகிர்வு!
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteநன்றி தோழமையே
Deleteநல்ல வரிகள்... நல்ல பகிர்வு
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteநன்றி தோழமையே
Deleteஅருமையான வரிகள் சகோவிற்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தலைவரே..
Deleteநன்றி தோழமையே
Deleteநன்றி தோழமையே
ReplyDeleteபகிர்ந்த அனைத்தும் ரசித்தேன். சிறப்பான கவிதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே.
ReplyDeleteஎன்னிடம் எதிரே நின்று
ReplyDeleteநேருக்கு நேர்
------காதலித்துடன் கல்யாணம் முடிந்து
மாமியாரையும் குறை சொல்ல வைத்து விட்டீர்கள் --அருமை