வணக்கம் தோழர்களே.உண்மை இதழில் புதுக்கவிதையில் புரட்சிக்காரரின் வரலாறு எனும் பக்கத்தில் ஈரோட்டுச் சூரியன் என்ற தலைப்பில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதி வருவது நீங்கள் அறிந்ததே.தொடரின் இரண்டாவது அத்தியாயமான திராவிட தீபம் தோன்றியது 1.10.2012 உண்மை இதழில் வெளியாகியிருக்கிறது.இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
ஈரோட்டுச் சூரியன் -2
மதுமதி
திராவிடம் தீபம் தோன்றியது
தவமிருந்து
பெற்ற குழந்தைக்கு
கிருஷ்ணசாமி என்று பெயரிட்டனர்..
பெயரிட்ட குழந்தைக்கு
உயிரிட்டது
இறைவன் என்றனர்;
அவன் வழி நின்றனர்;
பெற்ற குழந்தைக்கு
கிருஷ்ணசாமி என்று பெயரிட்டனர்..
பெயரிட்ட குழந்தைக்கு
உயிரிட்டது
இறைவன் என்றனர்;
அவன் வழி நின்றனர்;
இரண்டாண்டு
இடைவெளியில்
சின்னத்தாயம்மை
மீண்டும் கருவுற
இன்பம் இரட்டிப்பானது..
அவர்களுக்குத் தெரியாது..
கருவில் வளர்வது
சிசுவல்ல- _ -அது
பகுத்தறிவுப் பசு என்று..
பாரெல்லாம்
பகுத்தறிவுப் பாலை
புகட்டப் போகிறது
அறியாமை அதனை
அகற்றப்போகிறது என்று
அன்றறியவில்லை அவர்கள்.
தீண்டாமையைத்
தின்ன வந்த திமிங்கலம் அது..
மூடநம்பிக்கையின்
முதுகெலும்பை
உடைக்க வந்த
சுத்தியல் அது..
திராவிடம்
என்ற வார்த்தைக்கு
விளக்கம் சொல்ல வந்த
அகராதி அது..
விதவைகளின்
இருண்டு போன
இல்லறத்தை
வெளிச்சமாக்க வந்த
நெருப்பு அது..
ஆரியர்களின்
அடக்குமுறைகளை
அடக்க வந்த
முரட்டுக் காளை அது..
ஜாதிச் சண்டையில்
காயம் பட்டவர்களுக்கான
முதலுதவிப் பெட்டி அது..
ஜாதி மதங்களைக்
கொன்று புதைக்க வந்த
கோடரி அது..
பாசிசப் பார்ப்பனர்களின்
குடுமியை
அறுக்க வந்த
அரிவாள் அது..
ஆமாம்..
செப்டம்பர் 17,1879
இந்த நாளில்தான்
ஈரோட்டிலே
இன்னுமொரு சாக்ரடீசை
ஈன்றெடுத்தார் சின்னத்தாயம்மை.
இராமனையே
விமர்சிக்கப் போகிற
அந்த வித்தகனுக்கு
இராமன் என்றே
பெயர் சூட்டினர்;
இறை பக்தியை
மெதுவாய் ஊட்டினர்;
ஆமாம்..
அந்த இராமன்தான்
அர்த்தமற்ற
சம்பிரதாயங்களை
சமாதியாக்க வந்த
சாமானியன்..
ஆமாம்..
அந்த இராமன்தான்
திராவிடன்
இழந்திருந்த
மானத்தையும்
மரியாதையையும்
மீட்டெடுக்கப் போராடிய
போராளி..
(ஈரோட்டுச் சூரியன் உதிக்கும்)
இந்தப் பக்கத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
ம்ம்ம்....அருமை சார்
ReplyDeleteஈ வே ரா என்னும் திராவிட தீபம் தோன்றியதை
மிக அழகாக கவிதை வடிவில் ம்ம்ம் ..நச்சுன்னு
நன்றி செய்தாலி..
Deleteவீரியமான வார்த்தைகள் கொண்டு பகுத்தறிப் பகலவன் வாழ்வை விளக்கியிருக்கிறீர்கள் கவிஞரே. மிக ரசித்தேன், இனிவரும் அத்தியாயங்களுக்காய் ஆவலுடன் காத்திருப்பு.
ReplyDeleteமகிழ்ச்சி தலைவரே..15 நாட்களுக்கு ஒரு முறை வெளியாகும்..
Deleteஅழகான கவிதை வரிகள்
ReplyDeleteநன்றி ராஜா..
Deleteசிசுவல்ல- _ -அது
ReplyDeleteபகுத்தறிவுப் பசு என்று..
பாரெல்லாம்
பகுத்தறிவுப் பாலை
புகட்டப் போகிறது // அருமை நண்பரே..
வாங்க தோழரே..மிக்க நன்றி..
Deleteவெகு சிறப்பாய் உள்ளதுங்க சார் ..
ReplyDeleteமகிழ்ச்சி அரசன்..
Deleteரசிக்க வைக்கும் வரிகள் சார்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தோழரே..
Delete1879திலேயே பிறந்து விட்டாரா? அதான் நான் பார்க்கும்போதெல்லாம் வயதானவராகவே இருந்திருக்கின்றார். அவரின் இளமைக் கால படங்களை நான் இதுவரையில் பார்த்ததில்லை. கவிதை அருமை & எளிமை. வாழ்த்துகள்
ReplyDeleteஎன்னங்க சின்னக் குழந்தை மாதிரி கேட்கறீங்க..மலேசிய தமிழ் பாடத்துல ஐயாவைப் பத்தி ஒண்ணுமில்லையா?
Deleteஉண்மையில் வந்த உண்மை வரலாறு! உள்ளம் கவரும் வரிகளோடு கவிதை நன்று!
மிக்க நன்றி ஐயா..
Deleteஇராமரையே இராமசாமியாக
ReplyDeleteஅவதரிக்க வைத்திருக்கிறீர்கள்.
கவிதை அருமை.
நன்றி அருணா..
Deleteபகுத்தறிவுப் பசு, தீண்டாமையைத்
ReplyDeleteதின்ன வந்த திமிங்கலம், முதுகெலும்பை உடைக்க வந்த சுத்தியல் அது.., என்று ஆரம்பித்து, அர்த்தமற்ற சம்பிரதாயங்களை சமாதியாக்க வந்த சாமானியன்..என்பது வரை உவமைகள் அனைத்தும் அருமை நண்பரே! அடுக்கடுக்கான கவிவீச்சு அதிர வைக்கிறது. பெரியாரின் வரலாற்றை புதுக்கவிதையில் எழுதி கலக்குறீங்க!
ரசித்தீர்களா தோழரே..நன்றி
Deleteஅன்பின் மதுமதி - அருமையான கவிதை - பகுத்தறிவுப் பகலவன் பற்றிஅய் கவிதை - அவரது அத்தனை குணங்களையும் வைத்து எழுதப் பட்ட கவிதை - சொற்கள் தேர்ந்தெடுத்துப் போடப்பட்டிருக்கின்றன. நன்று நன்று - நல்வாழ்த்துகள் மதுமதி -நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ஐயா..
Delete//திராவிடன்
ReplyDeleteஇழந்திருந்த
மானத்தையும்
மரியாதையையும்
மீட்டெடுக்கப் போராடிய
போராளி..//
உண்மையிலும் உண்மை, கவிதையும் மிக அருமை!.
ஆமாம் தோழரே..உண்மையிலும் உண்மை..
Delete