வணக்கம் தோழர்களே.. 07.07.2012 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை இன்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டது.
தமிழகத்தில்
உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 718 பணிகளுக்காக ஜூலை
மாதம் 7ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளை
வெளியிடக்கூடாது என்று தர்மபுரியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தனது மனுவில்,
எனக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் 200 கேள்விகளுக்குப் பதில் 195 கேள்விகளே
இடம்பெற்றிருந்தன என்று கூறியிருந்தார். இவ்வழக்கை கடந்த மாதம் 17ம் தேதி
விசாரித்த நீதிபதி, குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை
விதித்தார். மேலும் கேள்வித்தாளில் உள்ள குளறுபடி குறித்து
டி.என்.பி.எஸ்.சி. பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும்
உத்தரவிட்டார்.
பின்னர் இவ்வழக்கு கடந்த 4ம் தேதி
விசாரணைக்கு வந்தது. அப்போது டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
பாதிக்கப்பட்ட 13 பேருக்கு புதிதாக தேர்வு நடத்தப்பட்டது என்று
தெரிவித்தார். இதேபோல் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டுவிட்டதால், எந்தப்
பிரச்சினையும் இல்லை என்று கூறினார். இதையடுத்து, தேர்வு முடிவை
வெளியிடுவதற்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிபதி
உத்தரவிட்டார்.தடை நீங்கியதைத் தொடர்ந்து குரூப்-4
முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இன்று வெளியிட்டது.
தேர்வானவர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்..
TNPSC தளத்தில் இருந்து பதிவிறக்க இயலவில்லை. தாங்கள் பதிவிறக்கி இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்ப இயலுமா?
ReplyDeletedginnah@gmail.com
https://www.box.com/shared/5duwhn6kumxsq560z7fk
ReplyDeletehttp://www.resultlink.in/ check all the results here
ReplyDelete