வணக்கம் தோழர்களே.. குரூப் 2 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பீர்கள். நான் அடிக்கடி சொல்வது என்னவென்றால் தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் பொதுத்தமிழை நன்றாகப் படித்துக்கொள்ளுங்கள் அதுவே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைத்தான்.
முதலில் நமக்குத் தெரிந்த, நாம் படித்த பாடங்களை நன்றாகப் படித்துக்கொள்ளுதல் அவசியம் ஆகும். இதைத்தான் நாம் சென்ற தேர்வின் போதே படித்துவிட்டோமே என்று விட்டுவிட வேண்டாம்.தேர்வுக்கு தயாராகும் அனைவருமே அனைத்துப் பாடங்களையும் படித்து இருப்பார்கள். ஆனால் அதில் வினாக்கள் கேட்டால் முதலில் குழப்பம் தான் வரும்..படித்த பாடங்களை திரும்பத் திரும்ப படித்தலே தேர்வுக்கு தயாராகும் முறை ஆகும்.
உதாரணமாக சென்ற தேர்வில் கேட்கப்பட்ட பல தமிழ் வினாக்கள் மிக எளிமையானவை தான்.அவற்றை தெளிவாக படித்துக்கொண்டு போகாத காரணத்தினால் குழம்பி தவறான விடைகளை நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.தம்பிரான் தோழர் சுந்தரர்தான் என்று எல்லோரும் படித்திருக்கிறோம்.ஆனால் வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளைப் பார்க்கும் போது அப்பரராக இருக்குமோ மாணிக்கவாசகராக இருக்குமோ என்ற குழப்பம் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடுகிறது.ஆனால் அதை தெளிவாக தெரிந்து கொண்டு போனவர்கள் குழப்பமில்லாமல் விடையளித்தார்கள்.இதைப் போல தான் குறிஞ்சிப்பாட்டில் சொல்லப்பட்ட பூக்கள் தொண்ணூற்று ஆறா தொண்ணூற்று ஒன்பதா போன்ற குழப்பத்தில் நிறைய பேர் தவறான விடையை எழுதிவிட்டு வந்திருக்கிறார்கள்.
இதைத் தவிர்க்க எந்தவொரு பாடத்தையும் தெளிவாக படிக்க வேண்டும்.படித்த பாடங்களை திரும்ப திரும்ப படிக்க வேண்டும். அப்படி படிக்கும்போதே குழப்பம் இல்லாமல் ஒரு செய்தி அடிமனதில் தங்கும். பெரும்பாலும் தேர்வுக்கு படிப்பவர்கள் கடைசி வாரத்திலேயே படிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் அது முற்றிலும் தவறு. ஏனென்றால் கடைசி வாரத்தில் புதிய பாடங்களை படிக்கவே கூடாது.படித்த பாடங்களை மீண்டும் திருப்பி பார்க்கவேண்டிய காலம் அது.அப்போது விடுபட்ட பாடங்களைப் படித்தால் அது மனதிலும் நிற்பதில்லை.தேவையில்லாத பயத்தை ஏற்படுத்தி விடும்.
எனவே இதுவரை படிக்க ஆரம்பிக்காதவர்கள் உடனே படிக்க ஆரம்பியுங்கள்.உங்களுக்கான இரண்டாவது வாய்ப்பு இது.சென்ற குரூப் 2 தேர்வு சரியாக எழுதவில்லையே என்று ஏங்கியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக எழுதுங்கள்.
ஒரு பாடத்தை எடுத்தால் அதை முடித்துவிட்டு அடுத்த பாடத்திற்கு செல்லுங்கள். பலர் அப்படி செய்வதில்லை. தமிழை படித்துக்கொண்டிருக்கும்போது புவியியல் ஞாபகம் வந்தால் ஐயய்யோ இன்னும் புவியியல் படிக்கவில்லையே என தமிழைப் போட்டுவிட்டு புவியியலுக்கு தாவுவது. அடடா.. தமிழில் இன்னும் பாக்கியிருக்கிறதே என மீண்டும் தமிழுக்கு தாவுவதும் தவறான செயல் ஆகும். இப்படி செய்யும்போது இரண்டும் முழுமையடையாமல் போய்விடுகிறது.
எனவே கடந்த முறை எந்தெந்த பாடத்தில் தவறு செய்தீர்கள என்பதையெல்லாம் மனதில் நிறுத்தி அந்தத் தவறுகளை திருத்தி வரும் தேர்வுக்கு தயாராகுங்கள்..
சரி தோழர்களே..இனி தொடர்ந்து தேர்வுக்கான பதிவுகள் நம் தளத்தில் வெளியிடப்படும் தொடர்ந்து வாருங்கள்.. வாசியுங்கள்.இனி எழுதப்படும் பதிவுகளை தங்களின் மின்னஞ்சலில் இலவசமாகப் பெற உங்களது ஈமெயிலை கீழக்காணும் பெட்டியில் இட்டு பதிவு செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே மின்னஞ்சலை பதிவு செய்திருக்கும் தோழர்களுக்கு வழக்கம்போல புதிய பதிவுகள் மின்ஞ்சல் தேடி வரும்..
தளத்தில் உறுப்பினராக இணைவதன் மூலமும் முகநூல் வட்டத்தில் இணைவதன் மூலமும் கூகுள் பிளஸ்ஸில் என்னோடு இணைவதன் மூலமும் புதிய பதிவுகளை உடனுக்குடன் பெறலாம்.

பலருக்கும் உதவும்... நண்பர்களிடம் பகிர்கிறேன்... நன்றி...
ReplyDelete