1.யோசிப்பதற்கு
அதிக நேரம் தேவைப்படலாம்..
முடிவெடுப்பதற்கு
சில நொடிகளே போதும்..
அதிக நேரம் தேவைப்படலாம்..
முடிவெடுப்பதற்கு
சில நொடிகளே போதும்..
2.சில நொடிகளில்
எடுக்கும் முடிவுதான்
பல வருட வாழ்க்கையை
மாற்றியமைத்துவிடுகிறது!..
எடுக்கும் முடிவுதான்
பல வருட வாழ்க்கையை
மாற்றியமைத்துவிடுகிறது!..
-----------------------------
3.ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பாடத்தை
கற்றுத் தருகிறது
கற்றுக்கொள்ள மறுக்கிறோம்..
ஒவ்வொரு பாடத்தை
கற்றுத் தருகிறது
கற்றுக்கொள்ள மறுக்கிறோம்..
4.எதற்காக வாழ்கிறோமென
ஒரு கணம் யோசித்தாலே
அதற்காக வாழ
ஆரம்பித்துவிடுகிறோம்..
ஒரு கணம் யோசித்தாலே
அதற்காக வாழ
ஆரம்பித்துவிடுகிறோம்..
5.கடினப்பட்டு பெற்றதெல்லாம்
சிறப்பானதுமல்ல..
எளிதாகப் பெற்றதெல்லாம்
ஏளனமானதுமல்ல..
------------------------------
6.இதுவரையிலும்
என்ன சாதித்தோம் என
திரும்பிப் பார்த்தவர்களே
சாதிக்க முற்படுகிறார்கள்..
-------------------------------
7.மீட்டெடுக்கவேண்டிய
நினைவுகளை முந்திக் கொண்டு
முன் வரிசையில் வந்து நிற்கின்றன
விட்டொழிக்கவேண்டிய நினைவுகள்..
முக நூல் முனகல்கள் அல்ல
ReplyDeleteமுக நூல் முத்துக்கள்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா..
Deleteமிகவும் பிடித்தது :
ReplyDelete/// இதுவரையிலும்
என்ன சாதித்தோம் என
திரும்பிப் பார்த்தவர்களே
சாதிக்க முற்படுகிறார்கள்... ///
நன்றி தலைவரே..
Delete//மீட்டெடுக்கவேண்டிய
ReplyDeleteநினைவுகளை முந்திக் கொண்டு
முன் வரிசையில் வந்து நிற்கின்றன
விட்டொழிக்கவேண்டிய நினைவுகள்.. //
arumai....
நன்றி தோழரே..
Deleteசிந்தனைக் கவிதை. முகநூலில் இந்த கவிதைக்கு என்ன தலைப்பு வைத்து இருந்தீர்கள் என்பதனையும் சொல்லி இருக்கலாம்.
ReplyDeleteமுகநூலில் தலைப்பிடுவதில்லை ஐயா.ஒவ்வொரு நாளும் இடுவேன்..அவற்றை தொகுத்து இங்கே இட்டிருக்கிறேன்..
Deleteரமணி சார் சொன்னது தான் சரி.... முகநூல் முத்துக்கள்... அத்தனையும் பயனுள்ளவைகள்... ரைமிங்குக்காக இடப்பட்டதா முகநூல் முனகல்கள் என்று ?
ReplyDeleteஆமாம் உண்மையே சில நொடிகளில் ராமர் எடுத்த முடிவினால் தான் அதிக வருடங்கள் ராமனும் சீதையும் பிரிந்திருக்க வேண்டி வந்தது.குழந்தைகளும் தந்தையின் முகம் காண இயலாமல் வளர்ந்தது. சீதையும் ராமனும் ஒன்று சேர முடியாமல் போனது....
உண்மையே... ஒவ்வொரு நாளும் விடிந்தது முதல் தூங்கப்போகும் வரை நமக்கு நடக்கும் அனுபவங்களில் இருந்து நாம் பெறும் பாடங்கள் அதிகமே.... படிப்பினைத் தரும் பாடங்களை அறியவும், அறிந்து தெளியவும் மறுக்கிறோம்... சோம்பலோ அல்லது விட்டேத்தியோ கூட காரணமாக இருக்கலாம்.. அனுபவங்களை படிப்பினையாகப்பெற்று அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்பவனே முன்னேறுகிறான். மற்றவனோ இன்னும் பின் தங்கியே இருக்கிறான் வெட்டிக்கதைகள் பேசிக்கொண்டு விதண்டாவாதம் செய்துக்கொண்டு....
முன் எழுதிய முத்து வரிகளின் தொடர்ச்சியே இதாகும்... என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது.. எது அவசியம் எது அவசியமற்றது... இதைத்தொடர்வதே நாம் வாழ்வது எதற்காக என்பதை அறியமுடியும்.... அப்படி சிந்தித்து அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டாலே வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் நகர்ந்துவிடும்...
ஆமாம் நன்றாய் சொன்ன வரிகள்.... கடினப்பட்டு பெற்றது எல்லாமே சிறப்பானதுன்னு சொல்லமுடியாது தான். அதிலும் அடி சறுக்க வாய்ப்பு உண்டு... எளிதாய் கிடைத்துவிடுபவை ஏளனப்படுத்தி பார்க்க அவசியமில்லை. அதிர்ஷ்டத்தால் கூட ஏழை கோடீஸ்வரன் ஆனதுண்டு...
சாதித்தவர்கள் அக்கடா என்று உட்கார்ந்துவிடுவதால் அடுத்த அடி எடுத்து வைக்க தாமதம் ஆகிவிடுகிறது. அடுத்து பின் தொடர்பவனோ வெற்றியின் இலக்கை இலகுவாக நாமே வாய்ப்பு கொடுத்தமாதிரியும் ஆகிவிடுகிறது. ஆனால் அப்படி ஆகாமல் நாம் சாதித்தவை எப்படி எதனால் என்னென்ன முயற்சிகள் செய்தோம். அனுபவங்கள் பெற்றோம். இந்த வெற்றியின் உழைப்புக்கு உதவினவர்களை நன்றியோடு நினைத்து பார்த்தலும் வேண்டும்.. இப்படி எல்லாம் நினைத்து பார்த்து தொடர்பவன் கண்டிப்பாக வெற்றிச்சிகரத்தை தொடர்ச்சியாய் அடைவான்...
வேதனையான கடைசி முத்தான வரிகள்.... நம்மை அவஸ்தைக்குள்ளாக்கி சிதைத்த உறவுகளை, நட்புகளை அவர்கள் அருகாமை எதுவுமே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும் தேவையே இல்லாமல் அவர்கள் நமக்கு கொடுத்த துன்பமே நம் மனதில் வந்து நம்மை துன்பப்படுத்திக்கொண்டிருக்கும்... இந்த துன்பத்தில் இருந்து நம்மை மீட்க யாராலும் உதவ முடியாது. நாம் தான் நமக்கு உதவவேண்டும். விட்டொழிக்க வேண்டிய நினைவுகளை நினைக்காமல் இருக்க இறைவனை தியானிக்கவேண்டும். நல்ல இசையை கேட்கவேண்டும். நல்லோரின் அரவணைப்பில் அடைக்கலமாகவேண்டும். மூத்தோரின் ஆசியில் அனுக்ரஹம் பெறவேண்டும். குழந்தைகளின் மொழியை ரசிக்க வேண்டும்... மனதில் இருக்கும் சோகங்களை எல்லாம் கடலில் தூக்கி எறியவேண்டும் விட்டொழிக்க வேண்டியவர்களையும் அவர்கள் தந்த துக்கங்களையும் அவர்கள் சகவாசத்தையும்.....
ஒவ்வொரு முத்தும் தரும் கருத்து மிக உயர்வானது... இத்தனை அருமையான அழகான முத்துக்கோர்வையான சிந்தனை முத்துக்கள் என் மனம் நிறைத்தது. நல்லவை எல்லாம் எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கை பாதையில் இவை நமக்கு பயன்படும் பொக்கிஷம் என்பதால்....
அன்புநன்றிகள் சகோ கருத்துள்ள பயனுள்ள முத்தான பகிர்வுக்கு...
மகிழ்ச்சி சகோதரி.. விரிவானதொரு தெளிவுரை கொடுத்திருக்கிறீர்கள.. மிக்க நன்றி..
Deleteஒவ்வொன்றும் அருமை
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteஒவ்வொரு கருத்துமே சிறப்பானவை....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தோழரே....
மிக்க மகிழ்ச்சி தோழரே..
Delete// ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பாடத்தை
கற்றுத் தருகிறது
கற்றுக்கொள்ள மறுக்கிறோம்.//
உண்மைதான் மதி!
ஆமாம் ஐயா..மறுக்கிறோம்..
Deleteஅத்தனையும் 'நச்' 'நச்'!
ReplyDeleteஅனைத்தும் அருமை.
ReplyDelete