வணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம். இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற்கு தொடர்ந்து வந்து வாசித்து கருத்திட்டு செல்லும் தோழர்கள் இப்பக்கத்தில் இடம்பெறும் பதிவர்களின் கவிதைகளையும் வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பதிவர் கவிதைகள் பகுதியில் வெளியாகும் இரண்டாவது கவிதையை எழுதியிருப்பவர் கரைசேரா அலை வலைப்பூவில் எழுதி வரும் தோழர் அரசன் அவர்கள்.. ராஜா என்ற தனது பெயரை தமிழாக்கி அரசன் என வைத்துக்கொண்டவர்..
வறுமைக்கு வளர்ப்பு பிள்ளை
வழிதவறியவனுக்கு அவசரத்துணை!
பலரது பசிக்கு பலியான
பாதை தவறிய பேதை ...
பருவங்களின் மோகப்பார்வைக்கு
பலமிழந்த பாவை!
மதிமங்கிய மன்மதர்கள்
அருந்திப்போன மதுக்கிண்ணம்!
எனக்கான பெயரும் மறைந்து
அரிதாரமே முகவரியுமானது!
மலர் வாசனை நுகர்ந்தவள்
பணவாசனை நுகர்ந்து
பிணமாகி போகிறேன்!
வண்ணக்கனவுகளும்
நெஞ்சுக்குழி காதலும்
கலைந்தே போயின!
அரசன் |
சுகம் தரும் புதையல் என
சுரண்ட முயலுகின்றன
முகவரி தெரியா
மனித முண்டங்கள்
என் சுகத்தை கேளாமலே!
அடுக்கடுக்கான படையெடுப்புகளில்
சிதைந்த சிற்பமானேன்
உமிழ்ந்த எச்சமானேன்!
அரசன்
உ.நா.குடிக்காடு
மேலும் அரசனின் கவிதைகளைக் காண இங்கே செல்லவும்..
எனக்கான பெயரும் மறைந்து
ReplyDeleteஅரிதாரமே முகவரியுமானது!
அற்புதமான உண்மையை அழகான இரண்டு வரிகளில் சொல்லும் சகோவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் தொடரட்டும் கவிச்சரம்.
மகிழ்ச்சி.. மிக்க நன்றி..
Deleteநன்றிங்க அக்கா
Deleteகவிதை அருமை!!!
ReplyDeleteஅண்ணே நன்றிங்க அண்ணே
Deleteஅருமையான தலைப்பில் ஒரு சாட்டையடி கவிதை.
ReplyDeleteநன்றிங்க மேடம்
Deleteஅற்புதான படைப்பு..
ReplyDeleteஅரசனை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்க்ள...
நன்றிங்க சவுந்தர் அண்ணே
Deleteவாழ்த்துக்கள் ராஜா..தமிழால் அரசனான நண்பருக்கு...
ReplyDeleteஅரசனின் பயணம் தொடர்ந்தாள் நாடே செழுமையாகும்...
அப்படித்தான் இங்கும் தமிழ் மேலும் செம்மையாகட்டும்...
அன்பின் வாழ்த்துக்கு என் நன்றிகள் சார்
Deleteஎனக்கான பெயரும் மறைந்து
ReplyDeleteஅரிதாரமே முகவரியுமானது!
மலர் வாசனை நுகர்ந்தவள்
பணவாசனை நுகர்ந்து
பிணமாகி போகிறேன்!
உறைந்து போனது நெஞ்சம்
கவிதையின் ஆழம் அப்படி !...
வாழ்த்துக்கள் கவி தந்த அன்பு
சகோதரருக்கும் .இதைப் பகிர்ந்துகொண்ட
சகோதரரே உங்களுக்கும் .
மிகுந்த நன்றிகள் மேடம்
Deleteநல்ல கவிதை, தோழர் அரசனுக்கு வாழ்த்துக்கள், இதை பகிர்ந்த மதுமதி அண்ணன் அவர்களுக்கு நன்றி....
ReplyDeleteநெஞ்சார்ந்த நன்றிகள் மேடம்
Deleteவாழ வழியின்றியோ, வலுக்கட்டாயமாகவோ புதைகுழிக்குள் தள்ளப்பட்ட முகவரியற்ற மனங்களின் சார்பாக எழுதப்பட்ட இக்கவிதை நெகிழ்த்துகிறது. அரசனுக்கும் அருமையான கவிதையை இங்குப் பகிர்ந்து அவரை கௌரவித்த தங்களுக்கும் நன்றியும் பாராட்டும்.
ReplyDeleteநன்றிங்க அக்கா
Deleteகவிதையின் கடைசி வரிகள் மனதில் ஒரு சோகத்தை உண்டாக்கியது உண்மை. கவிஞர் அரசனுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉள்ளம் நிறைந்த நன்றிகள் அய்யா
Deleteஎனது கிறுக்கல்களையும் அங்கீகரித்து அதை நம் நண்பர்களுக்கு தங்களது வலையின் மூலம் பகிர்ந்து கொண்டமைக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்...
ReplyDeleteஎன் படைப்பை அங்கீகரித்து, வாழ்த்துக்களை வழங்கி வரும் தோழமைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
உண்மையான அக்கறை வாழ்க-
ReplyDeleteஅடுக்கடுக்கான படையெடுப்புகளில்
சிதைந்த சிற்பமானேன்
உமிழ்ந்த எச்சமானேன்!
அன்பின் அரசன் - கவிதை அருமை - கருத்து அழகாக குறுஞ்செய்தியாகக் கூறப்பட்டிருக்கிறது. சட்டென மனதைக் கவரும் வண்ணம் கவிதை அமைக்கப் ப்ட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள் அரசன் - நட்புடன் சீனா
ReplyDeleteகவிஞர் அரசனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeletekavithai nandru arasan.
ReplyDeleteபாருய்யா!!
ReplyDeleteசிறப்பான கவிதை
ReplyDeleteநல்ல கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_3.html) சென்று பார்க்கவும்...
நன்றி…
றொம் வித்தியாசமான பக்கம் பதிவர் ஊக்கவிப்புக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா..............
ReplyDelete