வணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம். இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற்கு தொடர்ந்து வந்து வாசித்து கருத்திட்டு செல்லும் தோழர்கள் இப்பக்கத்தில் இடம்பெறும் பதிவர்களின் கவிதைகளையும் வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பதிவர் கவிதைகள் பகுதியில் வெளியாகும் மூன்றாவது கவிதையை எழுதியிருப்பவர் என் இதயம் பேசுகிறது வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி எஸ்தர் அவர்கள்.. பிரான்ஸ் நாட்டிலிருந்து எழுதும் சகோதரியின் பெரும்பாலான படைப்புகள் சமூகத்தின் மீதான் கோபங்களை வெளிப்படுத்தும்.
பூக்கள் புலிகளாயின
அழகாய் பட்டுடுத்தி
கால் சதங்கை அணிந்து
வலம் வந்த கால்கள்
காட்டிலும் முட்களிலும்
பள்ளம் மேடு பற்றைகளிலும்
மேய்ந்தது ஏன் - எம்
தமிழினத்திற்காகவன்றோ..
பூவாய் இருந்தது
போதும் என எண்ணி
புலியானீர்..
எத்தனை பேர் பலியானீர்!..
தமிழ் பெண்களையும்
தமிழ்க் குழந்தைகளையும்
தமிழ்த் தேசத்தையும் காக்க
ஈழத்து ஜான்சி ராணிகளானீர்..
பாரதம் கண்டதோ
ஒரேரொரு லட்சுமி பாயை..
தமிழீழம் கண்டது
ஆயிரக்கணக்கான லட்சுமி பாய்களை!..
பாவாடை தாவணியில்
நல்லூர் கோவலில்
சுழன்றாட வேண்டிய வயதில் - காட்டில்
நீள காற்சட்டையுடன்
பதுங்கி பாய்ந்தீர்களே-எம்
தமிழினத்திற்காகத்தானே..
மற்ற பெண்கள்
காதல் கல்யாணம் குழந்தை
என குடும்பத்திற்காய் இருக்க
நீங்கள் தமிழினத்திற்கென்றே
இருந்தீர்களே..
உங்களுக்கு யாரை நான் ஈடு சொல்ல?
தலை பின்னி மல்லிகை பூ
சூடவேண்டிய உங்கள் கூந்தல்
தோட்டாக்களை சுமந்ததேன்.?
குடம் தூக்கி நீர் இறைக்க வேண்டிய
உங்கள் இடுப்பு ஆட்றோளி சுமந்ததேன்?
அழகாய் குழந்தை தூக்கி
கொஞ்ச வேண்டிய உங்கள் தோள்கள்
வெடி குண்டுகள் சுமந்ததேன்?
படிக்க புத்தகமும் பேனாவும்
ஏந்த வேண்டிய உங்கள்
கைகள் துப்பாக்கி ஏந்தியதேன்.?
காதல் வானில் வட்டமிட்டு
நிலவை பார்த்து கவிதை
பாடவேண்டிய நீங்கள்
புரட்ச்சி கவிதைகள் வெடித்ததேன்.?
எல்லாம் முடிந்ததென்று இன்று
வெறி கொண்ட நாய்களிடம் சிக்கி
மூளைசிதறி அம்மணமாகி
கற்பையும் தமிழிற்காய் பறி கொடுத்து
மண்ணானதேன்? - எல்லாம்
தமழினத்தை காக்கவன்றோ!..
வாழ்க நீவிர்.. எஸ்தர் சபி
பிரான்ஸ்
மேலும் இவரது கவிதைகளை வாசிக்க இங்கே செல்லவும்..
இந்தக் கவிதையை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
நல்ல முயற்சி தோழரே!!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteநல்ல அறிமுகம்... அவரது படைப்புகள் சிறந்தவை... அவரை அறியாதவர்கள் குறைவே எனலாம்... சகோதரி எஸ்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
நன்றி அங்கிள் தங்கள் கருத்துக்கு........
Delete// எல்லாம் முடிந்ததென்று இன்று
ReplyDeleteவெறி கொண்ட நாய்களிடம் சிக்கி
மூளைசிதறி அம்மணமாகி
கற்பையும் தமிழிற்காய் பறி கொடுத்து
மண்ணானதேன்? - எல்லாம்
தமழினத்தை காக்கவன்றோ!..
வாழ்க நீவிர்..
//
எழுதியவருக்கு என் பாராட்டுக்கள்..
நன்றி அக்கா தங்கள் கருத்துக்கு ..............
Deleteநல்லது..
ReplyDeleteநன்றி அங்கிள்......
Deleteகவிதை படிக்கும்போதே மனம் துடிக்கிறது. அன்றைய நாட்களின் கோரங்கள் மனதிற்குள் வந்து செல்கிறது. கண்ணீர் விட்டு வற்றி இரத்தம் வடித்து உடைமைகள் இழந்து உயிரிழந்து பெண்களின் கற்பிழந்து பிஞ்சு குழந்தைகளின் உயிர்ப்பூ பறித்த கொடுங்கோல்காரர்களை நினைத்தால் மனம் பதறுகிறது. அதை வரிகளில் கொண்டுவந்து வாசிப்போர் மனதில் ஆவேசம் வரவைத்தது...
ReplyDeleteஅருமையான கவிதை என்று சொல்லிவிட்டு போக இயலவில்லை.. பெண்களின் நிலை ஈழத்தில் எத்தனை மோசமாக இருந்திருக்கிறது என்று அறியமுடிகிறது.
நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாமல் தன் உணர்வுகளை கொன்று தமிழ் இனத்துக்காக சர்வமும் தொலைத்த அந்த வீரப்பெண்மணிகளுக்கும் கவிதையில் நெருப்பை சாட்டையாக்கி சுழற்றிய அன்புச்சகோதரிக்கும் என் அன்பு வணக்கங்கள்....
மிக்க நன்றி அக்கா என் வரிகளில் உள்ள வேதனைகளை தெளிவாக்கியமைக்கு..................
Deleteசொல்ல முடியா துயரங்கள்...
ReplyDeleteகனவிலும் நினைத்து பார்க்க முடியா கொடுமைகள்...
என்று மாறுமோ இந்த அவலநிலை...
நெஞ்சே பதறுகிறது தினமும் இருபத்து நான்கு மணி நேரமும்...
நிம்மதியில்லாமல் உறக்கமில்லாமல் நம் உறவுகள் சகோதரிகள்...
மாறவேண்டும் இந்த மயானத்தின் கொடுமை...உயிருடன் எரியும் நிலை...
கருவிலேயே அழிந்து போகும் நம் சொந்தங்களின் உயிர்கள் வாழவேண்டும்...
உதிரம் சிந்துவது நிற்கவேண்டும்...அதற்கு அங்கே நிறுத்தவேண்டும்....
அருமை என்று பாராட்ட முடியவில்லை என்னால்...
காரணம் நம்மவர்கள் படும் துயரத்தை படம்பிடித்து காட்டியதால்....
சந்தோசம் என்று சொல்லவும் முடியாது இதை...
ஏனென்றால் அப்படி பட்ட விஷயமும் கிடையாது இது....
தோழரே உங்களின் முயற்சியில் இது மூன்றாவது வெற்றி என்று மட்டும் என்னால் சொல்ல முடிகிறது...
சகோதரி எஸ்தரின் ஆதங்கம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை....
மிக்க நன்றி இரா. தேவாதிராஜன் என் வரிகள் ஒட்டு மொத்த ஈழத்து பெண்களின் குமுறலாக அமைந்தது...
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டு ஒரு நன்றி......
தங்களின் மூன்றாவது வெற்றி நண்பரே...
ReplyDeleteவாழ்த்துக்கள் தங்களின் பயணத்தில் யாவும் வெற்றியே...
நன்றி அங்கிள் தங்கள் கருத்துக்கு..........
Deleteஈழத்தில் உள்ள நிலையை வரிகளில் படம் பிடித்துக் காட்டும் சகோதிரி அனல் பறக்கும் வரிகளால் சிந்திக்க வைக்கும் சகோதரிக்கும் தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தொடருங்கள் அடுத்த கவிஞதை எதிர் நோக்கும் ஆவலில்.
ReplyDeleteநன்றி சசி அக்கா ஈழத்து பெண்கள் அவல நிலை எல்லோருக்கும் புரிந்தால் சந்தோஸம்....
Deleteஅன்பின் எஸ்தர் - இலங்கையில் பெண்கள் போராளிகளாக மாற வேண்டிய சூழ்நிலை - அவர்கள் படும் பாட்டினைக் கவிதையாக வடித்தமை நன்று. கவிதை வரிகள் விரல் நுனியில் இருந்து வரவில்லை - இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த வரிகள் - காலம் மாறும் - காத்திருக்க.
ReplyDeleteநல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா
மிக்க நன்றி தோழரே...
Deleteஎன் ஆதங்கள் துிர்வானால் சந்தோஷமே............
கவிதையில் பெண்மையின் வீரமும் தியாகமும் தெரிகிறது..நல்ல கவிதை வாழ்த்துக்கள் சகோ..
ReplyDeleteமிக்க நன்றி........
Deleteபெண் புலிகளைப் பற்றிய கவிதை அருமை..இத்தனை கஷ்டப்பட்டும் இன்னும் தனி ஈழம் அமையாதது மன வருத்தத்தை அளிக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள் எஸ்தர்..வாழ்த்துகள்..
ReplyDeleteமிக்க நன்றி மது...
Deleteதமிழச்சியாக பிறந்ததாலோ?
ReplyDeleteதமிழச்சி என்ற திமிறினால்....
Deletefainted
ReplyDeleteohh sorry...
Deleteசகோதரி எஸ்தர், நீ எழுதிய இந்த கவிதையை நான் படிக்கும் போது மெய்சிலிர்த்தேன்... அருமையடி! பெருமையடி என் சகோதரி இப்படி ஒரு சிறப்பான கவிதையை படைத்தமைக்கு... இந்த கவிதையை பகிர்ந்த அண்ணன் மதி அவர்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி அக்கா.. உன் வருகைக்கும் கருத்துக்கும்....
Delete