தீபாவளி முடிந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிறது.இது குறித்து இப்போது இந்தப் பதிவை எழுதுகிறேன்.தீபாவளியை கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றபோதும் என் வீட்டில் மாமனார் மாமியார் உட்பட கொண்டாடிதான் மகிழ்ந்தனர்.
வழக்கமாக தமிழ்நாட்டில் ஒரு பண்டிகை என்றாலே அனைவரது வீட்டிலும் பலகாரங்கள் தயாரிக்கப்படும். தாங்கள் உண்டு சுவைத்தால் மட்டும் போதாது எனக்கருதி அண்டை வீட்டார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து தாமும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்விக்கும்போது பண்டிகையைக் கொண்டாடிய முழு திருப்தியையும் அந்த மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.
என் வீட்டில் தயாரான இனிப்பு மற்றும் காரங்கள் போன்றவற்றை என் நண்பர் வட்டத்திற்கும் என் வீட்டார் கொடுத்து மகிழ்ந்தார்கள். பண்டிகையைக் கொண்டாவில்லையென்றாலும் வீட்டில் தயாரான லட்டு,மைசூர்பா போன்ற அயிட்டங்களை சுவைக்க மறக்கவுமில்லை மறுக்கவுமில்லை.
முகநூலில் நேரத்தைப் போக்கிக்கொண்டிருக்கும்போது வழக்கம் போல அந்த பெண் பதிவர் வணக்கத்தோடு தொடர்பில் வந்தார்.வீட்டாரின் நலத்தை அவர் விசாரிக்க அவரது வீட்டாரின் நலத்தை நான் விசாரிக்க அடுத்ததாக கேட்டார்.
"தீபாவளிப் பலகாரங்கள் கொடுத்து அனுப்புகிறேன்.. ஒண்ணும் பிரச்சனையில்லையே என்றார். அதாவது சென்னையில் எனது மகளும் சக பதிவருமான ---- படித்துக்கொண்டிருக்கிறாரே. அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். பண்டிகை முடிந்து சென்னை திரும்பும்போது அவரிடம் பலகாரங்களை கொடுத்தனுப்புகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். அந்த வாரிசு பதிவரும் எனக்கு நேரடி பழக்கம் என்பதால் நீங்க ஆசையா கொடுத்தனுப்புற பலகாரங்களை நான் எப்படி மறுப்பேன் கொடுத்தனுப்புங்கள் ஒன்றும் பிரச்சனையில்லை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆனால் ஒன்று என்றேன்..எனனது ஆனால் ஒண்ணு என்று அவர் கேட்க,இங்கப்பாருங்க நீங்க கொடுத்தனுப்புறது இனிப்பா இருந்தா அது கட்டாயம் இனிக்கணும்.காரமாயிருந்தா கட்டாயம் அது காரமாத்தான் இருக்கணும் ..எதுவாயிருந்தாலும் மொத்தத்துல அது ருசிக்கணும் என்றேன்.ஒண்ணும் கவலைப்படாதீங்க நான் எதுவும் பண்ணப்போறதில்லை எங்கம்மாதான் பண்ணுவாங்க என்று சொல்ல, அப்பாடா அப்ப கட்டாயம் கொடுத்தனுப்புங்கள் என்றேன்..
தீபாவளிக்கு அடுத்த நாள் மாலை மூணு மணிக்கு அந்த பதிவரின் வாரிசு பதிவரிடமிருந்து போன் வந்தது.'அங்கிள் நான் இப்ப சென்னைக்கு பஸ் ஏறப்போறேன்.கோயம்பேடு அஞ்சு மணிக்கு வந்துடுவேன்'. என்று சொல்ல 'சரிம்மா பூந்தமல்லி தாண்டியதும் எனக்கு போன் பண்ணு நானே வந்து வாங்கிக்கிறேன்' என்று சொன்னேன்.அதன்படி அந்த இளையபதிவரும் எனக்கு தகவல் தெரிவிக்க 5 மணிக்கு கோயம்பேடில் வந்து காத்திருந்தேன். அந்த இளைய பதிவர் பலகாரங்களை தாங்கிய சின்ன மூட்டையை கொண்டு வந்தார்.அவரிடம் நலம் விசாரித்து சில நிமிடங்கள் உரையாடிவிட்டு அவரை அனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்து பார்சலைப் பிரித்தேன்.அதன் உள்ளே நான்கு பார்சல்கள் இருந்தன.
தனது மகளிடம் பார்சலைக் கொடுத்தனுப்பும்போதே நான்கு பதிவர்களுக்கு கொடுத்தனுப்புகிறேன்.நீங்கள் அவர்களிடத்தில் கொண்டு சேர்த்துவிடுங்கள் என்று சொல்லியிருந்தார்.அதன் படி எனக்கு குழப்பம் ஏற்படுத்தாத வகையில் ஒவ்வொரு பார்சலின் முகப்பிலும் பதிவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.எனக்கான பார்சலை வீட்டில் வைத்துவிட்டு மின்னல் வரிகள் பாலகணேஷ், தென்றல் சசிகலா மற்றும் வீடு திரும்பல் மோகன்குமார் ஆகிய மூவரின் பார்சலையும் எடுத்துக்கொண்டு அண்ணன் பாலகணேஷை சந்தித்து கொடுக்க அவர் தனக்கானதை எடுத்துக்கொண்டு அந்த இருவரிடமும் சேர்ப்பித்துவிட்டார்.
அந்தப் பதிவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பார்சலை பெற்றுக்கொண்ட தகவலைச் சொல்லி சுவைத்துவிட்டு மீண்டும் அழைத்து சுவையைப் பற்றி சொல்கிறேன் என்றேன்.உண்மையில் அவர் கொடுத்து அனுப்பிய இனிப்பும் சரி காரமும் சரி அவற்றோடு அந்தப் பதிவரின் அன்பும் சேர்ந்ததால் என்னவோ சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. உடனே அழைத்து சொல்ல உண்மையில் மனம் மகிழ்ந்து போனார் அந்தப் பதிவர்.சுவை நன்றாக இருந்தால்தான் இதைப் பதிவாகப்போடுவேன் இல்லையென்றால் அமைதியாக இருந்துகொள்வேன் என்று கிண்டலாக நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். எதிர்பார்த்ததைவிடவும் சுவை . இப்போது இந்தப் பதிவின் மூலமாக அந்தப் பதிவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளலாம்.
தன் வீட்டில் சமைத்த பலகாரங்களை அன்போடு தன்னோடு பயணிக்கும் சகபதிவர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்த் அந்தப் பதிவர் வேறு யாருமல்ல ஆரணியிலிருந்து காணாமல் போன கனவுகள் என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரி ராஜிதான்.இளைய பதிவர் தேவதையின் கனவுகள் தளத்தில் எழுதிவரும் அவரின் மகள் தூயா. எங்கள் மீது கொண்ட அன்புக்கு இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவுலகம் இருக்கும் இந்தச் சூழலில் இப்படி ஒரு பதிவு தேவையா என்று கேள்வி எழுப்பும் அன்பர்களுக்கு ஒன்றை சொல்கிறேன்.பதிவுலகில் எத்தனையோ சண்டைகள் நடந்து வருகிறது. பதிவர்கள் என்றால் இணையத்தில் எழுத்து மூலமாக பேசிக்கொள்பவர்கள்தான் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள் உறவு பாராட்டமாட்டார்கள், நட்பு பாராட்ட மாட்டார்கள் என்று நினைப்பவர்களுக்கு அப்படியில்லை என்பதற்கான பதிவுதான் இது. சாதாரணமாக இணையத்தில் வலைப்பூவின் மூலம் எங்கோ இருக்கும் ஒருவரோடு எழுத்துக்களின் மூலம் உறவு பாராட்டலாம், நட்பு பாராட்டலாம். ஆனால் நல்லதொரு அறிமுகத்தோடு குடும்ப உறவுகளாய் தங்களை மாற்றிக்கொள்வது என்பது அரிதானது.அதையும் தாண்டி பதிவர்கள் சக பதிவர்களின் அனைத்து உணர்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்கள் குடும்ப உறவுகளாய் இருக்கிறார்கள் என்பதை பிறர் தெரிந்து கொள்ளவே இப்பதிவு.
அன்பையும், பண்பையும், உணவையும், வாழ்க்கையையும், எண்ணங்களையும், வழக்கங்களையும், புதுமைகளையும், கலைகளையும், கற்றவற்றையும், அறிந்து பெற்றவற்றையும் கலந்து பரிமாறிக் கொள்வதே விருந்தோம்பல்! அன்பை சுமந்து வருவதெல்லாம் இனிப்பு சுவைதான்! நட்பை பாராட்டிய இந்த பதிவும் சுவையாகவே இருக்கிறது.
ReplyDeleteஆமாம் சகோதரி..சரியாகச் சொன்னீர்கள்..நன்றி.
Deleteஅதுமாதிரி நமக்கு ஏதும் கொடுத்தனுப்பலையே...
ReplyDeleteஇருக்கட்டும் இருக்கட்டும்...
நல்லது தலைவரே...
எங்களுக்கு முன்னாடியே உங்களுக்கு வந்திருக்கணுமே சௌந்தர்.
Deleteமிகவும் சந்தோசம்-முடிவில் இந்தப் பதிவைப் பற்றி எழுதிய கருத்துக்கள்...
ReplyDeleteதிண்டுக்கல்லுக்கு கூரியர் மூலம் இனிப்பு அனுப்பாததால் சகோதரி ராஜி அவர்கள் மீது கோபம்... நீங்களும் ஏன் அனுப்பவில்லை...?
இந்தக் கேள்விக்கு சகோதரி ராஜியே பதில் சொல்வார் தலைவரே..
Deleteவெறும் பேச்சளவில் அக்கா தங்கை அண்ணன் தம்பிகளாக இல்லாமல் இப்படி அன்போடு சேர்த்து உறவுகளுக்குள் நிகழும் பரிமாறல்களும் இருப்பது அன்பை அதிகமாக்கியே காட்டுகிறது.
ReplyDeleteசகோ அவங்க வீடு கட்டி முடித்ததும் இருக்கு உங்களுக்கு சீதனம் கொண்டு போக ரெடியா இருங்க.
சகோ அவங்க வீடு கட்டி முடித்ததும் இருக்கு உங்களுக்கு சீதனம்.ஹிஹிஹி
Deleteபரவாயில்லையே அதுக்கெல்லாம் சீதனம் தர்றாங்களா? சிறப்பு.
எனக்கும் பதிவிட்டு நன்றி சொல்ல ஆசை தான் ஏற்கனவே ஒரு பதிவிட்டு அக்காக்கள் இருவரும் என்னை தாக்கும் என்னத்தோடு தேடிக்கொண்டிருப்பது தெரியவந்ததால் பதிவு போடவில்லை.
ReplyDeleteஅப்படியா..அதன் பின்னணி எமக்குத் தெரியாது..
Deleteஎங்க ஊர் பக்கம் தீபாவளி பண்டிகை முடிஞ்சதும் சகோதரர்கள் வீட்டிலிருந்து சகோதரி வீட்டுக்கு சீர் கொண்டு போவங்க. பதிலுக்கு அவங்களும் எதாவது எதிர் சீர் செய்வாங்க. நான் ஒரே பொண்ணுங்குறதால இத்தனை நாள் மத்தவங்களை பார்த்து ஏங்கியிருக்கேன். இப்போ முதல் முறையா என் சகோதரர்களுக்கு குடுத்து விட்டிருக்கேன். இது ஒரு வகையில் என் சுயநலத்துக்குதான். ஒரு வகையில என்னை நீங்கதான் கவுரவ படுத்தி இருக்கீங்க ச்கோ. அதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.
ReplyDeleteமகிழ்ச்சி..மிக்க மகிழ்ச்சி..
Delete
ReplyDeleteரொம்ப மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தது... இனிப்பு பார்சல் கிடைத்த போது. பொதுவெளியில் எழுதுவதில் " சிலருக்கு கிடைத்து சிலருக்கு கிடைக்கலையே என்று கேள்வி வருமே என நான் யாரிடமும் சொல்லலை
வீட்டில் மனைவிக்கு வெளியூரில் இருந்து ராஜி என்கிற பெண் பதிவர் இனிப்பு செய்து கொடுத்து விட்டார் என்பது முதல் ஆச்சரியம். அதிரசம், தட்டை ஆகிய இரண்டும் இம்முறை நாங்கள் செய்யாத பலகாரங்கள்- இரண்டுமே மிக மிக அருமையாய் இருந்தது.
அவர் என்னிடம் சொல்லா விட்டாலும் பலகாரம் தயார் செய்தது அம்மாவாய் தான் இருக்கும் என்று ஊகித்தேன். நம்ம சகோதரியை பற்றி நமக்கு தெரியாதா? :))
அந்தப் பிரச்சனை நமக்கில்லை தோழரே..அதை சகோதரி பார்த்துக்கொள்வார்..ஹிஹிஹி..
Deleteநட்பை பாராட்டிய இந்த பதிவு மிகவும் சுவையாகவே இருக்கிறது.மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவாங்க தோழரே..
Deleteராஜி அக்கா கொடுத்தப் பலகாரத்தை
ReplyDeleteஎங்களுக்கும் பதிவாய்க் கொடுத்த மதுமதி அண்ணா... நீர் வாழ்க.
மகிழ்ச்சி சகோதரி..கம்பனை சிறப்பித்து கவியரங்கம் வாசித்தாயிற்றா?
Deleteஇருக்கட்டும் இருக்கட்டும் கேக்க வேண்டிய இடத்தில கேட்டு
ReplyDeleteவேண்டிக்கொள்கின்றேன் ....பலகாரத்த நீங்க மட்டும் சாப்பிட்டால்
போதுமா ?....அப்போ நாங்க எல்லாம் உங்களுக்கு சகோதரம் இல்லையோ ?...
அம்பாளடியாள் உக்கிரம் அடைந்துவிட்டாள் வாங்கி சாப்பிட்டது மட்டும்
இல்லாமல் பாகப் பிரிவினையைப் பதிவாய்ப் போட்டது மன்னிக்க
முடியாத குற்றம் சகோ நாங்க உங்களுடன் டூஊஊஊஊ ........
அன்பின் மதுமதி - இணைய நட்பு இனிதே தொடரட்டும். தீபாவளி இனிப்புகள பகிர்வது நன்று. அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete