இரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை
இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த நாயகன் விஜய் வீட்டின் முன்
கூடி குறிப்பிட்ட காட்சிகள் நீக்குமாறு போராட்டங்கள் நடத்தி
வருகிறார்கள். அப்படி போராட்டம் நடத்தும் தோழர்கள் இசுலாமியர்களை
இழிபடுத்தியதற்காக போராட்டம் நடத்துகிறார்களா இல்லை இந்தப் போராட்டத்தின்
மூலம் பொதுவான இசுலாமியர்களை தங்களின் கட்சிக்குள் வரவழைக்க இந்தப்
போராட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறார்களா தெரியவில்லை. அப்படி இல்லாமல் இருந்தால் நன்று.சம்பந்தப்பட்ட
காட்சிகளை நீக்கச் சொல்லி போராடுவதாக சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள்
அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தான் போராடவேண்டும். விஜய்
வீட்டை முற்றுகையிட்டால் தான் போராடும் அமைப்பின் பெயர் வெளியில்
தெரியுமென்ற ரீதியில் போராட்டம் இல்லாமல் இருப்பது நல்லது.பொதுவான இசுலாமியத் தோழர்களின் கருத்து என்னவென்று தெரியாது. எனக்குத்தோன்றியது இது.
விஜய் ரசிகர் மன்றங்களில் எத்தனையோ இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவரும் எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.மதப்பற்றை அபிமானம் வென்று நிற்கிறது.ஒருவேளை வேறொரு நடிகர் நடித்திருந்தால் இந்த இசுலாமிய விஜய் ரசிகன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.
இது குறித்து பதிவர் அதிரடி ராஜா அதிரடியாக ஒரு பதிவைப் போட்டார். அந்தப் பதிவிற்கு விஜய்க்கும் ஏ.ஆர் முருகதாஸூக்கும் ஒரு கண்டனப் பதிவு என்று தலைப்பிட்டிருந்தார். அந்தப்
பதிவை நானும் வாசித்தேன். இது பொதுப் படையான பதிவு. அனைத்து மதத்தினரும்
ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிவு. துப்பாக்கி சம்பந்தப் பட்டவரை யோசிக்க
வைக்கக்கூடிய பதிவு. தீவிரவாதிகள் என்றால் இசுலாமியராகத்தான் இருக்கணுமா
மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லையா? வேறு
மதத்தினர் அனைவரும் தேசபக்திகளா இசுலாமியருக்கு தேசபக்தியில்லையா?..
சினிமாவில் மட்டும் குண்டு வைப்பவனும் தேசத்துரோகியும் இசுலாமியராக
காட்டுவதன் பின்னணி என்ன? திட்டமிட்டே இசுலாமியரை இழிவு படுத்துகிறீர்களா?
என கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். நானும் சக பதிவர் என்ற முறையில்
கண்டனம் தெரிவித்தேன்..
இந்தியாவிற்கு 1947 ல் சுதந்திரம் கொடுத்த ஆங்கிலேயன் இந்தியாவில் இருக்கும் மதப்பிரச்சனையைக் கண்டு சற்று பயந்துதான் போனான். மதக்கலவரம் விரைவில் ஏற்பட்டு இந்தியா சிறு சிறு துண்டுகளாக போகும் என்று ஆரூடம் சொன்னான்.ஆனால் உலகமே வியக்கும்படி அப்படி ஏதும் இதுவரை அல்லாமல் வேற்றுமையில் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.அந்த ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைப் போலதான் சில சின்ன சின்ன நிகழ்வுகள் நடக்கும்.ஆனால் அந்த சின்ன நிகழ்வுகள் பெரிய அரசியலாகி பிரிவினை உண்டுபண்ணி விடுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.அதற்கான வாய்ப்புகளை கொடுத்துவிட வேண்டாம்..
இந்துக்கள் பலரும் இப்படி இசுலாமியரைத் தீவிரவாதியாக சித்தரிப்பதை
விரும்புவதில்லை என்பதும் உண்மை. மதத்தை அரசியலாக்காத மற்ற மதத்தினர் இசுலாமியர் மீது மரியாதை வைத்து நட்பு பாராட்டிதான் வருகிறார்கள். ஆரம்பக்காலங்களிலிருந்தே இப்படி திரைத்துறையினரால் நாட்டைக்காக்கும் படங்களில் குண்டு வைப்பவன் இசுலாமியன் என்று
சுட்டிக்
காட்டப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் அப்போதெல்லாம் இசுலாமியத்தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா இல்லையா தெரியவில்லை. அப்படி எதிர்ப்பு தெரிவித்திருந்தால் மதம் ரீதியான தீவிரவாதி அடையாளத்தைக் காட்ட திரைத்துறை விரும்பியிருக்காது.
காட்டப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் அப்போதெல்லாம் இசுலாமியத்தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா இல்லையா தெரியவில்லை. அப்படி எதிர்ப்பு தெரிவித்திருந்தால் மதம் ரீதியான தீவிரவாதி அடையாளத்தைக் காட்ட திரைத்துறை விரும்பியிருக்காது.
ஆனால் தொடர்ந்து இதைப் போன்று அடையாளப்படுத்துதல் நடந்து கொண்டேதான்
இருக்கிறது.இது குறித்து உதவி இயக்குனராக இருக்கும் திரைத்துறை நண்பர்
ஒருவரிடம் கேட்டேன். பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி. பாகிஸ்தான்
தீவிரவாதிகள் இந்தியாவில் குண்டு வைக்க எத்தனிக்கும்போது அவர்கள்
பிடிபட்டால் அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டுதான் ஆகவேண்டும்.அவர்கள்
அனைவரும் இசுலாமியர்கள் அவர்களின் பெயர்களைத்தான் சொல்லமுடியும் இதில்
எப்படி இந்தியர் இசுலாமிய மதத்தினரை இழிவுபடுத்துகிறதாக எடுத்துக்கொள்ள
முடியும் என்றார்.அப்படி வைத்துக்கொண்டால் கூட பரவாயில்லை.இந்தியாவில்
குண்டு வைப்பதாய் இருந்தால் கூட இசுலாமியப் பெயரை பயன்படுத்துவதன் நோக்கம்
என்ன? என்று கேட்டதற்கு பதிலில்லை.. அந்த பதிலை துப்பாக்கி படத்தின்
இயக்குனர்தான் சொல்ல வேண்டும்.
அதே சமயம் இசுலாமியர்கள் தங்களின் எதிர்ப்பை விஜயிடமோ அவரது வீட்டு முன்போ
காட்டி பிரயோஜனமில்லை. அவர் வெறும் நடிகர். இயக்குனர் சொல்வதைக் கேட்டு
நடிக்கும் நடிகர். அவரிடம் இது குறித்து முறையிடுவது பயனளிக்காது. அதேபோல
போராட்டங்களோ வன்முறைகளோ ஒரு போதும் இதற்கு தீர்வளிக்காது. மாறாக இரு தரப்பிற்கும் விளம்பரமே
மிச்சம். அதைவிடுத்து இசுலாமியர்களின் சார்பாக ஒருவரோ ஒரு குழுவோ படத்தின்
சம்பந்தப்பட்டவரை சந்தித்து பேசியே தீர்வு காணவேண்டும்.
இத்தனை வருடங்களும் இசுலாமியர்கள் தீவிரவாதிகளாக
சித்தரிக்கப்படுகிறார்கள் என்று வருந்தும் தோழர்கள் ஒரு குழுவாக சென்று
திரைப்படத் தாயாரிப்பாளர் சங்கத்திலோ அல்லது தமிழ் திரைப்பட இயக்குனர்கள்
சங்கத்திலோ ஒரு மனு ஒன்றை அளித்திருக்கலாம். அதில் தொடர்ந்து இசுலாமிய
மதத்தினரே குண்டு வைப்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதை இனி
தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்ற கருத்தை பதிவு
செய்திருக்கலாம்.முன்பே இதைச் செய்திருந்தால் துப்பாக்கி படத்தில் கூட குண்டு
வைப்பவன் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதை சொல்லியிருக்க மாட்டார்கள்.
மொத்தத்தில் இந்த எதிர்ப்பு மதம் சார்ந்த பிரச்சனையை
தீர்ப்பதாய் இருக்கட்டும். மதம் சார்ந்த அரசியலை ஊக்குவிப்பதாய்
இருக்கவேண்டாம். இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும்போது மட்டும் போராட்டம்
செய்வதை தவிர்த்து இனிமேல் இப்படி நடக்காதவாறு இருக்கும் வண்ணம் பொதுவாக
ஒரு இசுலாமிய குழுவாக இருந்து செயல்படுங்கள். இந்த மாதிரியான சம்பவங்களை எந்தவொரு அரசியல் வாதிகளுக்கும் கொடுத்துவிடவேண்டாம். காரணம் ஒன்றாக இருக்கும் காரியம் ஒன்றாக இருக்கும்.
இந்தியா நம் தேசம்..நாம் எல்லோரும் இந்தியர்கள்..
பின் குறிப்பு:
பின் குறிப்பு:
இந்த பதிவு எங்களின் உணர்வுகளை கொசைப்படுத்தியதே அன்றி வேறெதையும் சாதிக்கவில்லை என்று தோழர் ஆஷிக் அகமது பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். அப்படி இஸ்லாமியரை கொச்சைப் படுத்தும் வார்த்தைகளோ வாக்கியமோ இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் நீக்கிவிடுகிறேன்..
சகோ.மதுமதி ,
ReplyDeleteநல்ல பதிவு ...உங்களின் கீழ்க்கண்ட தகவல் நல்ல ஒரு ஆரம்பம் ...
//ஒரு குழுவாக சென்று திரைப்படத் தாயாரிப்பாளர் சங்கத்திலோ அல்லது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலோ ஒரு மனு ஒன்றை அளித்திருக்கலாம். அதில் தொடர்ந்து இசுலாமிய மதத்தினரே குண்டு வைப்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதை இனி தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்ற கருத்தை பதிவு செய்திருக்கலாம்.முன்பே இதைச் செய்திருந்தால் துப்பாக்கி படத்தில் கூட குண்டு வைப்பவன் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதை சொல்லியிருக்க மாட்டார்கள்.//
திரை துறையை பொறுத்த அளவில் பெரும்பான்மை மக்களை கவர எது வேண்டுமானாலும் செய்வார்கள்..அதில் ஒன்று தான் இஸ்லாமிய தீவிரவாதம் ...நேற்று நம்முடைய தேமுதிக தலிவரு விசயகாந்து நடித்த கஜேந்திரா படம் பார்க்க நேர்ந்தது..அந்த ஆளு ஊருக்குள்ள எவ்வளவு ரௌடிகள் இருந்தாலும் வில்லனுக்கு பேரு மட்டும் இஸ்லாமிய பெயரை வைத்து கொள்வார்..களம் ஹைதராபாத்தோ, மும்பையோ எதுவென்று தெரியவில்லை...வில்லன் பயங்கர மான ஆளு இஸ்லாமிய பெயரை வைத்தாகிவிட்டது அவனைக் கொல்ல மேளம் முழங்க கோவிலில் வைத்து கொல்வார் பாருங்கள்..காரி காரி துப்பலாம் ...அவ்வளவு கேவலமான சிந்தனை..இதுவெல்லாம் செய்துவிட்டு நோன்பிற்கும் பக்ரிதுக்கும் குல்லா போடுவார் பாருங்கள் ...சான்சே இல்ல...என்னா மனுஷன் ???
அரசியலில் நம்ம டாக்குடர், விசயகாந்தை பின்பற்றுகிறார்..இதை வேலாயுதம் படத்தில் இருந்தே தொடங்கிவிட்டார்...இனி இவரும் கட்சி ஆரம்பித்து குல்லா போட்டு போஸ்குடுக்காதது தான் பாக்கி...
அடுத்து விஸ்வரூபம் படம் வேறு...திரைலரிலேயே தெரிந்தது இதற்க்கு கண்டிப்பா எதிர்ப்பு வரும் என்று..கமல் வயிற்றில் இப்போது தகிடுததோம் ..சே.. தகிடுததோம் .....!!!
நன்றி !!!
ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் அந்நிலை இனி மாறும் தோழரே.. கருத்துக்கு நன்றி..
Deleteஉங்கள் மீது அமைதி நிலவுவதாக...
ReplyDeleteசகோதரர் மதுமதி,
இந்த பதிவு குறித்து என்னுடைய மாற்றுக்கருத்துக்களை பதிய விரும்புகின்றேன்.
1. கவனஈர்ப்புக்காகவே விஜய் வீட்டின் முன்பு முதல் போராட்டம் நடந்தது (அது பலனும் கொடுத்திருக்கின்றது). அடுத்தடுத்த போராட்டங்கள் நீங்கள் குறிப்பிடுபவர்கள் நோக்கி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
2. //இந்தப் போராட்டத்தின் மூலம் பொதுவான இசுலாமியர்களை தங்களின் கட்சிக்குள் வரவழைக்க இந்தப் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறார்களா தெரியவில்லை//
ஒரு சமூகத்தின் உணர்வுகளை இப்படியான வாக்கியங்கள் மூலமாக நீங்கள் கொச்சைப்படுத்தி இருக்க வேண்டாம். இனியும் இப்படியாக படங்கள் வர அனுமதிக்ககூடாது என்ற ரீதியிலேயே அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுகின்றோம். பிரச்சனையின் மையத்தை பார்க்காமல் யாருக்கு லாபமாக இருக்கலாம் என்று யூகத்தை வெளிப்படுத்தவது அவதூரே அன்றி வேறு எதுவும் இல்லை.
3. //விஜய் ரசிகர் மன்றங்களில் எத்தனையோ இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவரும் எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.மதப்பற்றை அபிமானம் வென்று நிற்கிறது.//
நான் அறிந்து விஜய் ஆதரவாளர்களாக உள்ள முஸ்லிம்கள் இதுக்குறித்து தங்கள் நாயகனுக்காக பேசியதாக தெரியவில்லை. அதனால் இதுக்குறித்து பேச ஒன்றும் இல்லை. இதுவரை நான் பார்த்ததெல்லாம் இந்த படத்திற்கு எதிரான கண்டனங்களே. இதனை செய்தவர்கள் விஜய் ரசிகர்களாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
4. எதிர்ப்புக்கு பிறகு, நேற்று தேவி திரையரங்கில் தமுமுக உள்ளிட்ட சமுதாய இயக்கங்களுக்கு இந்த திரைப்படம் போட்டு காட்டப்பட்டுள்ளது. விஜய்யின் அப்பாவும், தயாரிப்பாளர் தாணுவும் அவர்களுடன் இருந்துள்ளனர். இன்று நடக்க இருந்த துப்பாக்கி பிரஸ் மீட் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படவுள்ள திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. இனி இது மாதிரியான பிரச்சனைகள் நடக்காமல் இருக்க சென்சார் போர்ட் சார்ந்து ரூல்களை திருத்தியமைத்து அதில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் இனிமேல் முஸ்லிம்களை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க உள்ளோம். கமலின் விஸ்வரூபம் படத்திற்கு இதனை ஏற்கனவே கமலிடம் கூறியாகிவிட்டது.
ஆகையால், வெறுமே போராட்டாம் என்று இல்லாமல் அது சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. உங்களின் இந்த பதிவு எங்களின் உணர்வுகளை கொசைப்படுத்தியே அன்றி வேறெதையும் சாதிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்துக்கொள்கின்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
தோழர் ஆஷிக்,
Deleteஅப்படி இல்லாமல் ஒன்றாகச் செயல்பட்டு பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதையே நானும் விரும்புகிறேன்..அதற்காகவே அப்படிச் சொன்னேன்.. வேற எந்த நோக்கமும் கிடையாது.
நீங்கள் குறிப்பிட்டபடி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இனிமேல் வரும் திரைப்படங்களில் அவ்வாறு சுட்டிக்காட்டப்படுவது தவிர்க்கப்படும்..
நீங்கள் சொல்வதுப்போல தயாரிப்பாளர் சங்கத்தில் போய் ஒரு மனுவும்..., மீறி இதுப்போன்ற ரீதியில் படமெடுத்தால் ஆர்ப்பாட்டம் செய்வோம்ன்னு ஒரு எச்சரிக்கையும் குடுத்துட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும்ன்னு எனக்கு தோணுது.
ReplyDeleteஆமாம் சகோதரி.. ஆஷிக் சில விசயங்களைச் சொல்லியுள்ளார்.அதன்படி நடந்தால் இனி எப்பிரச்சனையும் வராது.
Deleteசகே, படம் பார்க்கும் போதே நான் அருகிலிருந்த நண்பரிடம் கூறினேன் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இப்படி வில்லனை இஸ்லாமியராக சித்திகரிப்பார்கள் என்று. மாற்றம் எவ்வளியில் வந்தாலும் நலமே. நீங்கள் சொன்னது போன்று எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
ReplyDeleteவாருங்கள் மூர்த்தி..அப்படியா..உங்களைப் போல படத்தை பார்க்கும் மற்ற மதத்தவருக்கும் அவ்வாறு குறிப்பிட்டு சொல்வதில் உடன்பாடில்லைதான்.. இசுலாமியர்களுக்கு வேதனையை உண்டு பண்ணத்தான் செய்யும்..நீங்கள் சொல்வதைப் போல மாற்றம் எவ்வழியில் வந்தாலும் நலமே..
Deleteஒரு கை தட்டினால் ஓசை வராது பல கை தட்டினால்தான் ஓசை வரும்.விஜய் ரசிகர்மன்றங்களில் எத்தனையோ இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றும் சொல்லாதது பாராட்டவேண்டிய விஷயம்.இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வதுதான் நடிகரின் கடமை.சொல்லப்போனால் இவர்கள் இயக்குனர்களின் சங்கத்தில்தான் மனு கொடுக்க வேண்டும்
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteமுன்பு விஜயகாந்த்... இப்போது விஜய்--->ஆரம்பம் - எல்லாவற்றிலும் கேப்டனைப் போல...?
ReplyDeleteகண்டிக்கப்பட வேண்டிய விஷயம்... ...ம்...
இவையெல்லாம் மாற வேண்டும்...
கட்டாயம் மாறும்..
Deleteஆங்காங்கே ஓரிரண்டு படங்களில் தீவிரவாதிகளை முஸ்லிம்களாக சித்தரித்து எடுக்கப்பட்டிருந்தால் நாம் கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடலாம். ஆனால் தொடர்ச்சியாக (பயணம், வேலாயுதம், உன்னைப்போல் ஒருவன்) இந்துக்களே சலிப்படையும் அளவிற்கு முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டுவது நிச்சயம் கண்டனத்துக்குரியது. ஏற்கனவே துரதிஷ்டவசமாக ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் "முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்" என்ற பொதுப்புத்திக்கு இந்த மாதிரியான சினிமாக்களும் துணைப் புரிந்து இஸ்லாமிய சமூகத்தை தூரப்படுத்தும் செயலை செய்து வருவது நல்லதல்ல.
ReplyDeleteநிச்சயம் தோழரே நீங்கள் சொல்வது சரிதான்..கருத்துக்கு நன்றி..
Deleteசம்பந்தப்பட்ட காட்சிகளை
ReplyDeleteஎடுத்துவிட முடிவெடுத்துவிட்டார்கள்
சுமூகமான தீர்வுகளும்
சாத்வீக எண்ணங்களுமே
நல்வழி வகுக்கும்....
நிச்சயம் தோழரே..
Deleteஅன்பின் மதுமதி - திரைப்படங்களில் தீவிர வாதிகளைச் சித்தரிக்கும் போது அனைத்து மதததினரின் பெயரையும் கலந்து வைக்கலாம். பிரச்னை இல்லாது போகும். ஏதாவது ஒரு பெயர் வைத்துத் தானே ஆக வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி ஐயா..
Deleteஅருமை தோழரே....இறுதியில் பட குழுவினரும் ,விஜய்யும் மன்னிப்பு கேட்டு பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளனர்..இனி இதுபோல நடக்காது என எண்ணுவோமாக..நன்றி
ReplyDeleteமகிழ்ச்சி தோழரே..
Delete"கருப்பான கையாலே என்னை புடிச்சான்..." - கற்பூர நாயகியே கனகவல்லி....
ReplyDeleteஇதையெல்லாம் நாம சாதாரணமா எடுத்துக்குட்டோம். சகிப்புத்தன்மை தான் நமக்கு சொல்லி கொடுத்த பாடம். அது இல்லாம போகுது அவ்வளவு தான். பம்பாய் படத்துக்காக மணிரத்னம் வீட்ல குண்டு போட்டதை என்ன சொல்றது ? மதவெறி தலைக்கேறி இருப்பதன் அடையாளங்கள் இவை.
மிகவும் தவறான முன்னுதாரணம் !
இந்த மாதிரி செய்திகளைப் படித்தால் நமக்குள்ள சகிப்புத்தன்மை போவது இயல்பே !
கருத்துக்கு நன்றி தோழரே..
Deleteபம்பாய் என்ற படம் மும்பையில் முஸ்லிம்களின் மேல் நடத்தப்பட்ட கலவர உயிரிழப்புகளை பாரபட்சமாக காட்டியது. கலவரத்தில் காயம் பட்ட முஸ்லிம்களையே கலவரக்காரர்களாக காட்டினார்கள். அப்போதே கமல், மணிரத்தினத்திடம் நீங்கள் தவறாக சித்தரித்து இருக்கிறீர்கள். கலவரத்தை நேரிலேயே கண்டவன் என்ற முறையில் உங்கள் படம் உண்மையை உறைக்கவில்லை என்கிற கருத்துபடி சொல்லியிருக்கிறார். கலவரத்தை முன்னின்று நடத்திய பால் தாக்கரே, மணிரத்னத்தை கூப்பிட்டு பாராட்டினார் என்றால் அந்த படம் எவ்வளவு ஒரு பக்க சார்பாக இருந்திருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.
Deleteவாட்டர் மற்றும் பைர் படக்குழுவினருக்கு நேர்ந்த கதியையும் நேர்மையுடன் ஒப்பிட்டு இருந்தால் உங்கள் மேல் நம்பகத்தன்மை இருந்திருக்கும்.
ஆமாம். இப்படியான ஒரு பக்கசார்பான சிந்தனையுடன் இருந்தால் சகிப்புத்தன்மைக்கே சகிக்க முடியாதே!!
தனது பெயரைக்காட்ட முற்படாமல் அனானியாக வந்து என்னை தலைகீழாகப் புகழ்ந்தால்கூட கருத்துரை பிரசுரிக்கப்படமாட்டது.எந்தக் கருத்தை சொல்வதாக இருந்தாலும் சொந்தப் பெயரோடு கருத்தை பதியும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஇங்கு பிரச்சினையை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட ஒரு நபர், இந்தப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறார். படத்திற்கான எதிர்ப்பு என்பது முஸ்லிம்களை தவறான சித்தரிப்பின் மூலம் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தலின் அச்சத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. போராடும் ஒவ்வொரு முஸ்லிமின் மனத்திலும் பயங்கரவாதிகளுக்கும் சாதரண மக்களான எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் போது மீண்டும் மீண்டும் ஏன் எங்கள் சமூகத்தையே தீவிரவாதியென சுட்டுகிறீர்கள் என்கிற சிந்தனை தான்.
ReplyDeleteஇதுமாதிரியான தவறான சித்தரிப்புள்ள படங்களை பார்பதன் மூலம் முஸ்லிம்களை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் மற்றொரு சமூகத்தின் முன் செய்வதறியாது நிற்கும் அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட வாழ்வின் வலிகளையும் இங்கு நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமா எப்போதுமே முஸ்லிம்களை அவர்களை அவர்களாக காட்டியதில்லை. எம்.ஜி.ஆர். காலங்களில் வந்த படங்களிலெல்லாம் முஸ்லிம், தலையில் துருக்கி தொப்பியுடன் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை பேசுபவர்களாக காட்டினார்கள். தமிழக முஸ்லிம்கள் எல்லோருமே தமிழை தாய்மொழியாக கொண்டவர்களே எனும் போது இப்படி சித்தரித்து முஸ்லிம்களை அந்நியர்கள் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். இது சமூகத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடாது என்பதால் நகைச்சுவையுடன் சகித்துக்கொண்டோம்.
ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்களால் சமூகத்தில் அதன் விளைவுகளை அன்றாட வாழ்வில் சாதாரண முஸ்லிமும் சந்திக்க நேரிடும் போது தான் இப்படியான போராட்டங்கள் அவசியமாகிறது.
உங்களைப் போல தோழமையுள்ள நல்லிணக்கவாதிகளால் தான் நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண முடிகிறது. நன்றி சார்.
நல்லதொரு கருத்தை பகிர்ந்து கொண்டீர்கள் தோழரே.. இனி நிலை மாறும். இந்த எதிர்ப்பு ஆரோக்கியமானதாகவே இருந்தது.வரும் திரைப்படங்களில் மாற்றம் இருக்கும்..நன்றி தோழர்..
DeleteSuper post. Pls visit my site.
ReplyDeleteபள்ளி பருவத்தில் இஸ்லாமிய தோழர்களிடம் நட்பு பாராட்டும் போது நமக்கு மதம் தெரிவதில்லை!நண்பன் என்ற முகம் தான் தெரியும்! இன்றைக்கும் எத்தனையோ இந்துக்கள் தங்கள் குழந்தைகளை உடல் நிலை சரியில்லாதபோது மசூதிக்கு கூட்டி செல்கிறார்கள் . மக்களிடம் சகோதரத்துவம் இருக்கிறது . ஆனால்,திரைத்துறையும், அரசியல்வாதிகளும்தான் சொந்த லாபத்துக்கு அந்த நட்பை களங்கபடுத்துகின்றனர்.என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தாமல் இருப்பதே நல்லது.நண்பர்களாகவே இருப்போம்!நன்றி !
ReplyDeleteநல்லதொரு கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..
Deleteதோழர்: மனிதாபமானத்துடன் இஸ்லாமியர்கள் நிலைப்பாட்டை, மனநிலையை "அனலைஸ்" செய்து எழுதி இருக்கீங்க. இதுபோல் எழுதும்போது பல பிரச்சினைகள் தலைதூக்கும். உங்களால் மட்டுறுத்தப்பட்டு வெளிவராத பின்னூட்டங்களைச் சொல்லுகிறேன். :)))
ReplyDeleteபொதுவாக பார்ப்பனர்களை பொருத்தவரை (என்னைப் பொருத்தவரையில் நாத்திகம் பேசினாலும் கமலஹாசனும் பார்ப்பான்ந்தான்) இஸ்லாமியர்கள் என்றாலே அவர்களிடம் உள்ள நல்லவைகளைப் பார்க்கமுடியாத "மன ஊனமுற்றவர்கள்". அவனுகள ஒண்ணுமே பண்ண முடியாது..இஸ்லாமியர் மனதை அறிந்துகொண்டு அவர்கள் மனம் புண்படாமல் நடந்த காந்தியையே காலி பண்ணியவனுக இவனுக. அதை நியாயப் படுத்தவும் செய்வானுக. அவனுகள தண்ணி தெளிச்சு விட்டுடுவோம்..
//அடுத்து.. பின்னூட்டம் ரொம்ப மோசமா வருது..வெளியிடுவீங்களானு தெரியலை.. அதனால அடுத்ததுல எழுதுறேன்..அப்போத்தான் இதாவது வெளிய வரும்..//
கருத்துகளைச் சொல்லுங்கள் தோழர்..சொல்லும் கருத்து எவர் மனதையும் புண்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்..:)
Deleteபின்னூட்டம் வள வளனு ஒரு மாதிரியா வருது..:(
ReplyDeleteஇஸ்லாமியரை வெறுக்கும் இந்த திராவிட முண்டங்களுக்கு வருவோம்..
இதுகளுக்கு என்னைக்குமே சுயபுத்தியோ, அறிவோ கெடையாது. ஒரு அழகான உதாரணம் என்னனா இன்னைக்கு இதுக பார்ப்பானோட சேர்ந்துகொண்டு பெரியார் முகத்தில் சேற்றை வாரி இறைக்கிறானுக . பெரியாரால பாதிக்கப்பட்ட பார்ப்பான் பெரியாரைத் திட்டுறான் சரி. இந்த திராவிட முட்டா மூதேவிகளும் ஏன் பார்ப்பானோட சேர்ந்துக்கிட்டு திட்டுதுக?? அந்தளவுக்குத்தான் இருக்கு இவனுகளுக்கு மூளை. இவனுகள வச்சு என்ன செய்ய???
கவனிச்சுப் பார்த்தால் நம்ம பார்ப்பானுக்கு எவன் வீட்டை எவன் எரிச்சாலும் கவலை இல்லை. அவன் பிரச்சினை ஹையங்கார் மானத்தை காப்பாதுவது மட்டும்தான்..
அப்புறம் இந்த திராவிட காட்டுமிராண்டிகள் படுத்தும் துன்பம் தாங்காம "பாதிக்கப் படுறவங்க" பார்ப்பான் அப்பன் வீட்டு மதத்தைவிட்டு மட்டும் எங்கேயாவது போயிடக்கூடாது. தீண்டாமை மண்ணாங்கட்டியை எல்லாம் ஏத்துக்கிட்டு இந்துமதத்தையேதான் அவர்கள் கட்டி அழனும். அபோத்தான பார்ப்பானுக அப்பன் வீட்டு சொத்தான இந்து மதத்தில் மெஜாரிட்டி இந்தியர்கள் இருப்பானுக?
பார்ப்பனரை தலைவியாக தூக்கி வைப்பவனும் இந்த திராவிட நாய்கள்தான். இவனுகள பொருத்த்வரையில் நமக்கெல்லாம் புத்தி இல்லை, நம்மை மட்டமா நெனைக்கிர பார்ப்பாந்தான் நம்மள ஆளனும்!!!
சரி, அப்படி ஒரு அறிவாளி ஆளும்போது தமிழ்நாட்டு ஏண்டா நாளுக்கு நாள் இருண்டுக்கிட்டே போகுது முண்டங்களா?னு கேட்டால் எதையாவது ஒளறுவானுக.
டாஸ்மாக் வருமானம் கருணாநிதி ஆட்சியில்தான் அதிகமாச்சுனு சொன்னாரு ஒரு உதவாக்கரை தமிழன். கடந்த ஒரு வருடமாக அதைவிட/அதுக்கு சமமாத்தான் குடி வருமானம் வந்து இருக்கு. அதை கவனிச்சுட்டு மூச்சுவிடாமல் சினிமா விமர்சனம் எழுதிக்கிட்டு பொழைப்பை ஓட்டுராரு அப்பன் முருகன் சிஷ்யன்..இவரு ஒளறியதை எல்லாம நாங்க மறந்துடுவோமா என்ன???
சரி,பிரச்சினைக்கு வருவோம்..
இப்போ உண்மையிலேயே மனம் வருந்தி நியாயமான கோரிக்கையை இஸ்லாமியர்கள் வைத்தாலும், இந்த திராவிட முண்டங்கள் பார்ப்பான் ஆசையை நிறைவேற்றும்படி எதுக்கெடுத்தாலும் இஸ்லாமியரை தாக்குவதுனுதான் ஆரம்பிச்சு இருக்கானுக..
உண்மையிலேயே இஸ்லாமியர்கள் எல்லாம் ஒரு பிரச்சினையானவங்க கெடையாது. இந்த திராவிட முண்டங்களுக்குத்தான் புத்தி வரனும்.
எங்கள தீவீரவாதிகளாகக் காட்டாதீங்கனு சொல்றது என்ன தப்பா??
பகுத்தறிவும்பான், பரிணாமம்பான், தாழ்த்தப்பட்டவர்களை சமமா நடத்துவதாக நடிப்பான், பாப்பான்ந்தான் நம்மள ஆளத்தகுதியானவன்னு நம்புவான்.. இப்போ தேவையே இல்லாமல் இஸ்லாமியர்களை எதிரியாக நினைப்பான்..அதான் இந்த காட்டுமிராண்டி திராவிட முண்டங்களத்தான் சொல்றேன்..